Quentin tarantino,
ஹாலிவுட் படத்தை பார்க்க நினைப்பவர்களுக்கு எல்லாம் இவர் அல்லது Christopher Nolan தான் முதல் படி.
இவர்களை தாண்டி தான் நாம் ஹாலிவுட்டில் பயணம் செய்ய முடியும்.
நான் 4 வருடமாக உலக சினிமாக்களை பார்த்து வருகிறேன்.
Pulp Fiction என்கிற படத்தை அடிக்கடி யார் யாரோ எங்கையோ பார்க்க சொல்லி சொல்வார்கள்.
அந்த படம் எங்காவது கிடைக்குமா என்று தேடிய நாட்கள் உண்டு.
பர்மா பஜாரில் அந்த படத்தை தேடினேன். ஆனால் அதற்கு பதிலாக Fight Club கிடைத்தது.
அப்பொழுதெல்லாம் இண்டர்நெட்டில் இருந்து படத்தை இறக்குமதி செய்வது கடினமான வேலை.
எப்படியோ கஷ்ட்டப்பட்டு அந்த படத்தை தேடி இறக்குமதி செய்துவிட்டேன்.
படத்தை பார்த்தால் ங்கொப்புரானே ஒன்னுமே புரியல..
அதற்கு பின் Reservoir Dogs படம் பார்த்தேன் தெளிவாக புரிந்தது.
அப்பறம் வரிசையாக அவர் படங்களாக பார்க்க தொடங்கினேன்.
அலுப்புத் தட்டவே இல்லை.
ஜாலியாக ரெத்தமும் கெட்ட வார்த்தையுமாக இருந்தது.
கடைசியாக The Hateful Eight படம் பார்த்தேன் ஆனால் அது பிடிக்கவில்லை.
இப்போழுது வந்திருக்கும் Once Upon a Time in Hollywood படத்தின் போஸ்டர் பெரிதாக ஈர்க்கவில்லை.
ட்ரைலர் பார்த்தேன் இது குவெண்டின் டராண்டினோ சாயல் இல்லையே என்று தோன்றியது.
ட்ரைலரில் புரூஸ் லீ எல்லாம் வருகிறார். பழைய நினைவுகளை எல்லாம் படத்தில் தூண்டி விடுவார்களோ ?
அத விட குவெண்டின் டாராண்டினோ ரசிகர்களுக்கு சோகமான விஷயம் என்னவென்றால் அவர் மொத்தம் 10 படங்கள் தான் எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
இது அவரது 9ஆவது படம். கடைசி படம் கண்டிப்பாக டாரண்டினோவின் Personal படமாக தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.
ட்ரைலரில் கடைசி காட்சியில் டிகாப்ரியோ காதில் ஒரு சின்னப் பெண் " நீங்கள் பிரமாதமாக நடிக்கின்றீர்கள்" என்று சொல்லும்பொழுது.
டிகாப்ரியோவின் முக பாவனைகளை பார்க்கும்பொழுது "ப்ப்பா இதுக்காவே இந்த படத்தை பார்க்கனும் டா என்று தோன்றியது"
- அப்துல்
Coming soon Frozen 2 Full Movie Download
ReplyDeleteComing soon Frozen 2 Full Movie Download
Coming soon Frozen 2 Full Movie Download
Once upon a Time in Hollywood link bro...
ReplyDeleteBro Pulp fiction movie explain pannunga..
ReplyDelete