இரண்டு மாதங்களாக பல புத்தகங்கள் படித்து,பல சினிமாக்களை பார்த்து,பல ஆராய்ச்சிகளை செய்து எழுதிய புத்தகம்.
இந்த புத்கத்தை எழுதும்பொழுதே பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்.
முதல் புத்தகம் என்பதால் கொஞ்சம் தாமதம்,சோர்வு,பயம் என்று எல்லாம் என்னை போட்டு பாடாப்படுத்தியது.
மக்களிடத்தில் இதை கொண்டு சேர்க்க முடியுமா என்று பயம்.
எனக்கு இந்த அழகான மொழிநடையில் எல்ல எழுத வராது.
என்னை பொருத்தவரை இந்த புத்தகத்தை படிப்பவர்கள் பல புதிய விஷயங்களை தெரிந்துக்கொள்ளவும்,ஊக்கமூட்டும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதே.
இந்த புத்தகத்தை எழுத முக்கிய காரணம் Missed Movies Followers தான்.
அவர்களின் ஆதரவில் கிடைத்த தைரியம் தான் என்னை இந்த புத்தகத்தை எழுத தூண்டுகோலாக இருந்தது.
எந்நாளும் உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.
பல பேர் புத்தகத்தை படித்துவிட்டு பாராட்டினார்கள்,சிலர் புத்தகத்தில் இருக்கும் சில எழுத்து பிழைகளையும் சுட்டிக்காட்டினார்கள்.
- அப்துல்
No comments:
Post a Comment