Thursday, March 14, 2019

ராமின் பேரன்பு





தமிழ் சினிமாவில் சமீபத்திய இயக்குனர்களுள் முக்கியமானவராக திகழ்பவர் ராம். இவருடைய படங்களில் இவர் சொல்ல வரும் கருத்துகள் எல்லாம் ஆணித்தரமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 இந்த படத்தின் டீசர் வெளியாகி இந்த படத்திற்கு உண்டான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருந்தது. அதன்பின் இந்த படம் பார்த்த அனைவரும் இதை கொண்டாடி Positive review களாக எழுதி தள்ள மேலும் இந்த படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை அதிகப்படுத்தி இந்த படத்தை பார்க்க வைத்தது. 

Paralyzed ஆன மகள் சாதனா, அவளை பார்த்து கொள்ளும் அவரது அப்பா மம்மூட்டி, இப்படி படத்தின் கதை தொடங்கி இதற்குள்ளே படம் முடிந்துவிடும் போல என்று நினைத்தேன். ஆனால் ராம் படத்தை இயற்கையின் 12 அத்தியாயங்களாக பிரித்து கதை சொல்லில் ஈடுபட்டு படத்தை மிக சிறப்பாக கொண்டு போயிருந்தார். குறிப்பாக மம்முட்டி என்கிற நடிகன் இல்லையென்றால் இந்த அளவிற்கு அந்த அப்பா கதாபாத்திரம் உயிர் பெற்றிருக்குமா என்று தெரிய வில்லை. அந்த அளவிற்கு ரொம்ப எதார்த்தமாய் நடித்து ஒரு மகளின் அப்பாவாக நம் மனசுக்குள் நிற்கிறார். சாதனாவின் நடிப்பு சில இடங்களில் செயற்கை தன்மையாக இருந்தது. இன்னும் அந்த கதாபத்திரத்திற்கு கொஞ்சம் மெனகெடல் எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. 

படத்தின் முதல் பாதியில் கேரளாவின் இயற்கை அழகை ஒளிப்பதிவு மூலம் அழகு பட காட்டியிருக்கிறார். அதே போல் யுவன் சங்கர் ராஜாவின் பின்ணனி இசை இந்த படத்திற்கான Plus & Minus. தேவையில்லாத இடங்களிலும் பின்னணி இசையை போட்டு முழுவதுமாக பயணிக்க விடாமல் தடுத்தது என்று சொல்லலாம்.

அப்பா மகள் உறவை பற்றி மட்டும் பேசாமல் வயதுக்கு வந்த பெண், தான் சந்திக்கும் பாலினம் குறித்த  பிரச்சனைகளையும், அவர்களின் உளவியலையும் ரொம்ப அழுத்தமாக சொல்லியிருக்கிறார் ராம். அதற்கே ராமிற்கு என் சார்பில் அன்பின் 1000 முத்தங்கள். நிச்சயம் இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு விஷயம் தான். இதை பற்றின புரிதல் இங்கு கம்மியாக இருக்கிறது என்பதே வேதனைக்குரிய விஷயம். சில காட்சிகள் கொஞ்சம் ஜனரஞ்சமாக இருந்தது ஆனால் அதெல்லாம் பெருசா கதைய பாதிக்கல. எனக்கு இந்த படம் ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது. பல மசாலா படங்களுக்கு நடுவில் "பேரன்பு" போன்ற படங்கள் நமக்கு சற்று ஆறுதல். படம் பார்க்காதவர்கள் நிச்சயம் படத்தை பார்த்துவிடுங்கள். இது போன்ற படங்களுக்கு தொடர்ந்து வரவேற்பு கொடுப்போம். ராமின் முயற்சிகளுக்கு அன்பு கலந்த பாராட்டுக்கள். இந்த படத்தை பற்றி ஒரு வரியில் சொல்லனும்னா "அன்பின் அத்தியாயங்கள் இங்கு வரவேற்கபடுகின்றன".




- அரவிந்த்.

1 comment:

PARIYERUM PERUMAL  - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...