Monday, May 6, 2019

மார்லன் பிரண்டோ- “தி காட்பாதர்”

சுய சரிதம் புத்தகங்களின் மேல் எனக்கு தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கிறது.அது ஏன் என்று என்னால் அறிய முடியவில்லை.சமிபமாக நடந்த சென்னை புத்தக கண்ணாட்சியில் என் கண்களில் தென்பட்டது தான் “மார்லன பிரண்டோ” புத்தகம்.அது அவரின் சுய சரிதம் பற்றிய ஆங்கில புத்தகங்களின் தமிழாக்கம் ஆகும்.அதை எழுதியவர் அஜயன் பாலா.

பிராண்டோவை எனக்கு அறிமுகம் படுத்தியது “காட்பாதர்” படம் தான். இன்று வரை அவரின் வேறு எந்த படங்களையும் நான் பார்த்ததில்லை.காட்பாதர் படத்தில் அவர் நடிப்பும் அதில் அவருக் கிடைத்த அகாடமி விருதை அமெரிக்க பூர்வகுடி இந்திய பெண்னை வாங்க வைத்த நிகழ்வு மற்றுமே அறிந்திருந்தேன் . அவரின் காட்பாதர் படத்தின் நடிப்பு தான் என்னை இந்த புத்தகத்தை வாங்க தூன்டியது.

இந்த புத்தகம் அவரின் இளமை காலங்களில் வாழ்ந்த ஒமேகா தொடங்கி அவரின் முதுமை காலங்களில் வாழ்ந்த தன் சொந்த தீவான டெட்டி ஓரா வரை அவரின் வாழ்க்கை பயணத்தை சுமந்து செல்கிறது.தன் வாழ்க்கையில் ஆரம்பத்திலேயே பாசத்துக்கா ஏங்கும் சிறு குழ்ந்தையாக தொடங்கிறார்.அவரின் தாயின் அரவனைப்பிக் ஏங்கும் வரிகள் எனக்கும் சற்று ஏக்கத்தை தந்தது.

தன் சிறு வயதிலும் இளம் பருவத்திலும் அவர் செய்த குறும்புகள் என்னை சிரிப்பில் ஆழ்தியது.அவர் மக்கள் தன்னை நட்சத்திர மாக ஏற்று கொண்ட தருணத்தை அவர் விழக்கிய  போது அவர் நட்சத்திரமாக உணரும் அவரின் உண்ர்சிகள்  பிரதிபலித்தது.தன் தாயின் பிரிவை விவரித்த வரிகள் என் கண்களை பதம் பார்த்தது.

45 அத்தியாயம் கொண்ட இந்த புத்தகத்தில் நான் அதிகம் வாசித்தது பல பெண்கள் பெயர்களும் அவர்களுடன் இவர் கொண்ட புண்ர்ச்சி பற்றியும் தான். அது மட்டும் இன்றி  34 மற்றும் 35 அத்தியாயத்தில் தனியாக அவர் கடந்து வந்த பெண்களை பற்றியும் அவர்களுடன் நடந்த நிகழ்வுகளை பற்றி எழுதியுள்ளார் என்றால் பாருங்கள் எத்தனை பெண்கள் என்று.24 வயதின் நான் சக ஆண்கள் கண்ட பெண்களை விட அதிக பெண்களை கடந்து வந்துள்ளேன் என்று கர்வதுடன் சொல்கிறார்.அதனை படிக்கும் போது பிராண்டோ மீது எனக்கு பொறாமை பொங்கி வழிந்தது.(கன்னி பசங்க சாபம் உன்னை சும்மா விடாது என்று எனக்குளே கூரி கொண்டேன்)

ஒரு நடிகனின் மன ஓட்டம்,அவனின் சிரமங்கள், ஒரு இயக்குனர் நடிகனை எப்படி நடத்த வேண்டும், எப்படி நடத்தினால் நடிகனிடம் இயல்பான நடிப்பை வெளி கொண்டு வறலாம் என்று சில வற்றை நான் கற்று கொண்டேன். மோலும் வளரும் நடிகர்களுக்கு கடினமான இயக்குனர்கள், அரைகுறை இயக்குனர்களிடம் இருந்த தப்பிக் சில வழிகளும் சொல்லிருக்கிறார். அது சற்று சிரிப்பாக இருந்தாலும் அதை அவர் பயன் படுத்தி தப்பித்த இருக்கிறார் என்பதே உண்மை.

தன்னை நடிகனாக மட்டும் நிருத்தி கொள்ளாமல்,சமுக அக்கரை கொண்டு பூர்வகுடி இந்தியர்களுக்காக போராடவும் செய்துள்ளார்.அதற்கு அவர் செய்த நிகழ்வுகளை படிக்கும் பொழுது பிராண்டோ மீது எனக்கு மிக பெரிய மரியாதை தோன்றியது.புத்தகத்தின் அரம்பத்தில் இருக்கும் பிராண்டோவிற்கும் இறுதியில் இருக்கும் பிராண்டோவிற்கும் இருக்கு முதிர்ச்சி வேறுபாடு அவரின் எழுத்துகளில் தெரிந்தது.

பேரும்பாலும் அமேரிக்கா பற்றியும் அமேரிக்காவின் அரசியல் பற்றி மிக வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஹாலிவுட் படங்கள் வணிகத்தை குறி வைத்தான் எடுக்கப்படுகிறது என்ற உண்மையை ஒரு ஹாலிவுட் நடிகனாக எழுதியது எனக்கு ஆச்சரியத்தை தந்தது.

என்னதான் பணம் நமக்கு மகிழ்ச்சி தந்தாலும்,சக மனிதனிடம் இருந்து கிடைக்கும் பாசம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை என்ற உண்மையை தன் இறுதி காலங்களில் பிராண்டோ உணர்ந்ததை நம்மாலும் உணர முடிகிறது.

இந்த புத்தகம் கிடைத்தால் வாங்கி படியுங்கள். முக்கியமாக நடிகனாக விரும்பு அனைவரும் படிக்கவும் சில டிப்ஸ் கிடைக்கும்.

-கார்த்திக் ரெங்கசாமி

1 comment:

  1. Click Here To Dark Phoenix HD Download ► https://netfixmovie.com/movie/dark-phoenix

    Click Here To Play Now ► Dark Phoenix Full Movie HD Download

    Click Here To Dark Phoenix HD Download ► https://netfixmovie.com/movie/dark-phoenix

    ReplyDelete

PARIYERUM PERUMAL  - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...