Wednesday, May 8, 2019

The guilty(2018)-குற்றம் செய்யாத குற்றவாளி


உலக சினிமா எனக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பு படம் எடுக்க பல கதாபாத்திரங்கள், பல கோடி பட்ஜெட் வேண்டும் என்ற மூடநம்பிக்கைகள் என்னை சூழ்ந்திருந்தது. அப்படிப்பட்ட என் மூடநம்பிக்கையை உடைத்து ஒரு திரைப்படம் எடுக்க கதை  கூட தேவையில்லை அதை கொண்டு செல்ல நல்ல கலை நயம் கொண்டு இருந்தால் போதும் என்று உரைக்க வைத்த படங்களில் காஸ்பர் நோவின் “க்லைமேக்ஸ்”படத்திற்கு பிறகு இந்த படமும் ஒன்று. 


இது ஒரு டேனிஷ் திரில்லர் திரைப்படம் “குஸ்டாவ் மோல்லரால்”எழுதப்பட்டு இயக்கப்பட்டது. இது 2018 சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் டிராமாடிக் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டது. மக்கொலியா பிக்சர்ஸ் மூலம் யு.எஸ். இல் இந்த படம் விநியோகிக்கப்பட்டது. 91 வது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான பட்டியலில் இடம்பெற்றது.மேலும் இந்த படத்தை   ஹாலிவுடில் “ஜாகே கிலென்ஹால்” வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளது.


அஸ்கர் ஹோல்ம் கோபன்ஹேகனில்  ஒழுங்குமுறை பிரிவுக்கு உட்பட்ட ஒரு காவல் அதிகாரி.தனக்கு வரும் கடத்தப்பட்ட பெண்ணின் ஒரு அவசர அழைப்பு திடீரென்று துண்டிக்கப்பட்டவுடன், அந்த பெண் மற்றும் அவளது கடத்தல்காரனை பற்றி அவரது ஒரே கருவியாக ஃபோன் மூலம் தேடுதல் தொடங்குகிறது.ஆபத்தான பெண்ணை காப்பாற்றுவதற்கு எதிராக ஒரு போட்டியில் நுழைகிறார்.  ஆனால் அவர் முதலில் நினைத்ததைவிட மிகக் பெரிய ஒரு குற்றத்தை அவர் கையாளுகிறார் என்பதை விரைவில் உணர்ந்துகொள்கிறார்.அதன் பின் என்ன ஆனது என்பதே கதை.


ஹோல்மினின் முன் கதையில் தன்னை அறியாமல் ஒருவனை சுட்டுக்கொன்றதுக்காக

குற்ற உணர்ச்சியுடன் இருப்பான்.அந்த குற்ற உணர்ச்சி தான் ஐபனுக்கு மைக்கேல் முலம் எந்த குற்றமும் நடக்கவிடக்கூடாது என்ற அவளை காப்பாற்ற தூண்டும்.ஆனால் படத்தின் இறுதியில் தான் எதிர்பார்திராத ஐபனின் தவறுக்கு ஒரு வகையில் தானும் உதவியதாக தோன்றும் குற்ற உணர்ச்சி மிண்டும் அவனை சூழ்ந்து விடும்.படம் முழுவதும் ஒரு வகை குற்ற உணர்ச்சியுடன் தான் ஹோல்ம் பயணிப்பான்.அதனாலே படத்தின் தலைப்பு “the guilty” என்று அமைந்தது போலும்.


படத்தில் இரு பகுதிகள் உள்ளன ஒன்று நாம் காணும் திரைக்கதை மற்றொன்று நம் கற்பனையில் ஓடும் திரைக்கதை.ஆம் படத்தில் நடித்திருப்பதோ ஒருவன்தான் ஆனால் மீதம் வரும் கதாபாத்திரங்களின் சப்பதங்களை கொண்டு அந்த கதாப்பாத்திரங்களை அவர்களின் செயல்களையும் நம் எண்ணத்தில் புத்திசாலித்தனமாக விதைத்திருப்பார் குஸ்டாவ் மோல்லர். அஸ்கர் ஹோல்மாக வரும் “ஜாகோப் செடர்கெனின் “நடிப்பு நமக்கு பதடத்தின் உச்சிகே வழி காட்டும்.

படத்தில் என்னை மிக கவர்ந்தது படத்தின் ஒலி வடிவமைப்பே மிக துல்லியமாக இருக்கும்.


என்னதான் ஹோல்ம் தன் வேலையை தன் தனிப்பட்ட பிரச்சனைக்காக  பயன்படுத்தி ஐபனுக்கு உதவி செய்தாலும். நிஜ வாழ்க்கையில் ஒழுங்குமுறை பிரிவில் வேலை செய்பவருக்கு இத்தனை சுதந்திரம் சாத்தியமா?? என்பது கேள்வி குறியே.அது மட்டும் தான் எனக்கு படத்தின் குறையாக தென்பட்டது.இருந்தாலும் படத்தை இது பெரிதாக பாதிக்கவில்லை. 


இயக்குனர் ஆக விரும்பும் அனைவரும் இந்த படத்தில் இருந்து திரைக்கதை,ஒலி வடிவமைப்பு, நடிகனின் நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று நிறைய கற்றுக்கொள்ளாம்.அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது.


-கார்த்திக் ரெங்கசாமி

No comments:

Post a Comment

PARIYERUM PERUMAL  - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...