Wednesday, May 1, 2019

நெடுநல்வாடை - A Crowd Funding Film.

திரள்நிதி திரட்டல் (crowdfunding) என்பது பலர் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக நிதிப் பங்களிப்புச் செய்து நிதியளிப்பது ஆகும். crowdfunding என்பதை முதன் முதலாக, மைக்கேல் சுலைவன் என்பவரின் மூலம் பயன்படுத்தபட்டது. கன்னட திரைப்படமான லூசியா Crowdfunding மூலம் எடுக்கப்பட்டது. தற்போது கூட Madras Central கோபியும் சுதாகரும்  8 கோடி நிதி கேட்டு Crowd funding மூலம் படம் எடுக்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். Crowd funding பற்றி முழுவதுமாக தெரிந்துக்கொள்ள Missed Movies வெளியீட்டில் அப்துல்ரகுமான் எழுதிய Independent Cinema புத்தகத்தில் "மக்கள் திரட்டும் சினிமா"என்னும் தலைப்பில் முழுவதுமாக விவாதிக்கபட்டுள்ளது.


நெடுநல்வாடை இந்த படத்தில் பூ ராமு, Mime கோபி, எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செல்வகண்ணன் இந்த படத்தை எழுதி இயக்கிருக்கிறார்.

வைரமுத்து இந்த படத்திற்கு பாடல்களை எழுதிருக்கிறார். 

நெடுநல்வாடை இந்த படமும் Crowdfunding மூலமாக தான் படத்தை எடுத்திருக்கிறார் செல்வகண்ணன்.  திருநெல்வேலி மாவட்டம் செல்வகண்ணன் அவரது சொந்த ஊரு. அங்கு இருக்கும் சங்கர் பால்டெக்னிக் காலேஜில் தான் படித்தார். அதன்பின் சினிமா மேல் உள்ள ஆர்வத்தினால் சென்னை வந்து காந்தி கிருஷ்ணா, ராஜேஷ் செல்வா போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன்பின் சொந்தமாக படம் பண்ணலாம் என்று எல்லா Production ஆபீஸ் கதவுகளை தட்டினார். பெரிதாக பலன் கிடைக்கவில்லை. அதன்பின் அவருக்கு ஒரு யோசனை வந்தது. நாமே Independent ஒரு படம் பண்ணலான்னு. அப்போது அவர் தனது College யில் படித்த நண்பர்களிடம் இந்த விஷயத்தை கூறினார். நம்ம எல்லாரும் பணம் போட்டு Crowdfunding முறையில் படம் பண்ணலாம். வருகின்ற லாபத்தை எல்லாருக்கும் சமமாக பிரித்து கொடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.அவரது நண்பர்கள் அனைவரும் நல்ல நிலைமையில் இருந்தார்கள். இவரது விருப்பத்திற்கு உடனே சம்மதம் தெரிவித்தார்கள். 50 பேரு கூடிய ஒரு WhatsApp குழுவை ஆராம்பித்தார். அதன்பின் இந்த படம் வெற்றிகரமாக உருவாகியது. சரி நம்ம படத்துக்குள்ள போவோம்.


செல்லையா (பூ ராமு) ஒரு கரும்பு விவசாயியாக நெல்லை மாவட்டத்தில் உள்ள உட்கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். தன் குடும்பத்தார் மேல் ரொம்ப பாசமாய் இருக்கிறார். இவருக்கு கொம்பையா(Mime Gopi) என்னும் மகனும், பேச்சியம்மாள் என்னும் மகளும் இருக்கின்றனர். பேச்சியம்மாள் தான் காதலித்த நபருடன் ஊரைவிட்டு சென்றுவிடுகிறாள். சில வருடங்கள் கழித்து அவள் காதல் திருமணம் செய்த அவள் கணவன் ஒரு குடிகாரன் மற்றும் தனது குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறான். பேச்சியம்மாள் அவனை விட்டு தன் மகன் இளங்கோ, மகளுடன் தனது அப்பா வீட்டிற்கு வருகிறாள். இதற்கு அவளது அண்ணன் கொம்பையா எதிர்ப்பு தெரிவித்து சண்டை போடுகிறான். பின் செல்லையா அவனை தடுத்து தனது வீட்டில் தங்க வைக்கிறார். செல்லையா தனது மகள் நினைத்து ரொம்ப கவலைபடுகிறார். எப்படியாவது தன் பேரன் பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல இருக்கனும் என்று நாயகன் இளங்கோவை படிக்க வைக்கிறார். அவன் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் அந்த காலகட்டத்தில் தனது கிராமத்தில் இருக்கும் அமுதா என்னும் பெண்ணை காதலிக்கிறார் இளங்கோ. இருவரும் உயிர்க்கு உயிராக நேசிக்கிறார்கள். இந்த விஷயம் தாத்தா செல்லையா விற்கு தெரிய வருகிறது. இளங்கோவிற்கு தாத்தா செல்லையா அறிவுரை கூறுகிறார். படிச்சு முடிச்சு ஒரு நல்ல வேலைக்கு போனதுக்கு அப்புறம் திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார். 


இளங்கோவிற்கும் Campus interview யில் கிடைத்த வேலை ஒரு நூலிழையில் தவறுகிறது. அதன்பின் என்ன செய்வது என்று தெரியாமல் சென்னையில் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார். இதற்கிடையில் இவர்களது காதல் விஷயம் அமுதா வீட்டிற்கு தெரியவருகிறது. வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். இதை அறிந்த இளங்கோ தனது தாத்தா செல்லையா விடம் இதை கூறுகிறார். தாத்தா செல்லையாவோ அமுதாவின் அண்ணனிடம் வந்து பொண்ணு கேட்கிறார். அதற்கு அவன் இளங்கோவிற்கு ஒழுங்கான வருமானம் இல்லை என்று காரணம் காட்டி இதை நிராகரிக்கிறார். அதன்பின் தாத்தா செல்லையா இளங்கோவிற்கு வெளிநாட்டில் வேலைக்கு ஏற்பாடு செய்கிறார். ஆனால் இளங்கோவோ அமுதாவை ஊரைவிட்டு போய் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கிறார்கள். அதன் பின் இளங்கோ அமுதாவை திருமணம் செய்தானா? இல்லை தனது குடும்பத்திற்காக தனது காதலை தியாகம் செய்தானா? தனது தாத்தாவின் பேச்சை கேட்டு மனதை மாற்றிக்கொண்டானா? என்பதை படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.


இந்த படத்தில் நடிச்ச எல்லோரும் ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க. குறிப்பாக பூ ராமு செல்லையாவாகவே வாழ்ந்திருக்கிறார். அந்த அளவிற்கு தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்திருப்பார். Mime Gopi இந்த படத்தில் Mime Gopi ஆகா தெரியாமல் கொம்பையாவாக தெரிந்தார். அமுதாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ரொம்ப நல்ல நடிச்சிருந்தாரு. இந்த படத்தில் ஒளிப்பதிவு, பின்னணி இசையெல்லாம் வேற லெவல். அந்த அளவிற்கு ரொம்ப அருமையா இருந்துச்சு. திருநெல்வேலி மாவட்டத்தின் வாழ்வியல்,கிராமத்து மண் வாசனையை ரொம்ப அழகாய் காமிச்சிருப்பாங்க. திருநெல்வேலி என்னோட சொந்த ஊர் என்பதால் எனக்கு இந்த படம் நெருக்கமான ஒரு உணர்வை கொடுத்தது. நல்ல அனுபவித்து பார்த்தேன் கூட சொல்லலாம். படத்தில் பெருசா எந்த கதையும் இருக்காது. எல்லாம் நமக்கு தெரிஞ்ச கதை தான். ஆனா அதற்கு வடிவமைத்த திரைக்கதை தான் இந்த படத்திற்கு ப்ளஸ். குறிப்பாக Independent ஆகா படம் பண்ண போறவங்க, தனது முதல் படம் எடுக்கபோறவங்க நிச்சயம் இந்த படத்தை பாருங்க. இந்த படத்தில் செலவை குறைப்பதற்காக பூ ராமு, Mime Gopi தவிர மற்றவர்கள் எல்லாரும் புது முகங்கள் தான். கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியதால் படத்திற்கு அந்த அளவுக்கு பெருசா செலவு ஆகியிருக்காது. இந்த படத்தை எல்லாரும் மிஸ் பண்ணாம பாருங்க. உங்களுடைய சொந்த ஊருக்கே இந்த படம் அழைத்து செல்லும்.


- அரவிந்த்

No comments:

Post a Comment

PARIYERUM PERUMAL  - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...