Wednesday, April 24, 2019

Captain fantastic - எந்திர வாழ்க்கை

Captain fantastic(2016)-into the wild


இன்று நம் வாழும் எந்திர வாழ்க்கை என்பது யாரே கட்டமைத்த ஒன்று. அப்படிபட்ட வாழ்க்கையை வேறுத்து மீண்டும் பழங்கால மனித வாழ்வை வாழ நினைக்கும் குடும்பத்தைப் பற்றியும் அவர்கள் கடக்கும் நிகழ்வுகளை பற்றி படம் தான் captain fantastic.


இதை இயக்கியவர் நடிகரும் இயக்குனருமான மாட் ரோஸின்.அவர் மற்றும் அவரது மனைவி பெற்றோராக இருக்க தொடங்கியபோது, ​​மாட் ரோஸின் திரைப்படத்தின் யோசனை தொடங்கியது.  அங்கு இருந்து அவர் தனது குழந்தைகள் வாழ்வில் நவீன தொழில்நுட்பம் முற்றிலும் இல்லாமல் இருந்திருந்தால் என்ன நடக்கும் என்று ஆச்சரியப்பட்டார்.மேலும் தனது சொந்த வாழ்க்கையிலிருந்து சில பதிவுகளை எடுத்துக் கதையாகி உள்ளார்.


இந்த திரைப்படம் சண்டேன்ஸ் திரைப்பட விழாவிலும் ,கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.இது கோல்டன் குளோப், கோல்ஃப் குளோப், BAFTA விருது மற்றும் சிறந்த நடிகருக்கான அகாடெமி விருது ஆகியவற்றிற்காக பரிந்துரைக்கப்பட்டது.


பென் காஷ் அவரது மனைவி லெஸ்லி மற்றும் அவர்களது ஆறு குழந்தைகள் வாஷிங்டன் வனப்பகுதியில் வாழ்கின்றனர்.  பென் மற்றும் லெஸ்லி ஆகியோர் முன்னாள் அராஜகவாத அமைப்பில் செயற்பாட்டாளர்கள் இருந்தவர்கள். அமெரிக்கவின் முதலாளித்துவதிலும் வாழ்வியல் மீதும் ஏமாற்றமடைந்த இவர்கள் தன் குழத்தைகளுக்கு உயிர்வாழ்வியல் திறன்,அரசியல், மற்றும் தங்களது குழந்தைகளின் தத்துவம் ஆகியவற்றைத் தூண்டுவதற்குப் பயிற்சி செய்கின்றனர்.


அவர்களை விமர்சன ரீதியாக சிந்திக்கவும், சுய-சார்ந்து வாழவும் , உடல் ரீதியாகவும் வலிமையாக இருக்கவும்,  தொழில்நுட்பம் இல்லாமல் அவர்களுக்கு வழிநடத்தவும், இயற்கையுடன் இணைந்த வாழவும் பயிற்சி தருகிறன.


பல நாட்களாக லெஸ்லி பைபோலார் கோளாறுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இறுதியில் தற்கொலை செய்து இறந்து போகிறார்.லெஸ்லியின் தந்தை ஜாக் லெஸ்லியை தன் குடும்ப பாரம்பரிய மரபு வழியில் அடக்கம் செய்ய திட்டமிட்டுகிரார்.ஆனால் லெஸ்லி விருப்பம் தன் உடலை தகனம் செய்வதே என்று பென் அறிவார். இருவரும் தொலைபேசியில் வாதிடுகின்றனர்.


பென் இறுதிச் சடங்கில் பங்குபெற்றால்  கைது செய்யப்படுவதாக ஜாக் அச்சுறுத்துகிறார். பென்னும் அவரின் ஆறு குழந்தைகளும் லெஸ்லியின் இறுதி சடங்கிற்கு வந்தார்கள் இல்லையா என்பதே கதை.


குழந்தைகளாக வரும் ஆறு குழந்தை நடிகர்களின் நடிப்பில் குழந்தைகளுகே உரிய யதார்த்தம்,ஆர்வம்,குறும்புத்தனம் என்று அனைத்து நம்மால் பார்க்க முடியும். சிறந்த தந்தையாக இருக்கும் போதும் சரி தன் தந்தை கடமையில் தவறு செய்துவிட்டோமோ என்று வருந்தும் தந்தையாகவும் சரி தன் நடிப்பால் நம்மை கவரவும் கலங்கவும் செய்துள்ளார் Viggo Mortensen.


இந்த படத்தின மூலம் நம் எந்திர வாழ்வின் மீது நமக்கு சிறு கசப்பும்,பல கேள்விகளும் உறுவாகும்.படத்தை பார்த்து முடித்த பிறகு மனதில் ஒரு அமைதியை

உணர்ந்தேன்.நிங்களும் அந்த அமைதியை பேற தவறாமல் இப்படத்தை பார்க்கவும்.


-கார்த்திக் ரெங்கசாமி

No comments:

Post a Comment

PARIYERUM PERUMAL  - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...