Monday, April 22, 2019

Bandit Queen - பூலான் தேவி


இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் இன்னமும் அதிகமாக அரங்கேற்றிக் கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக உயர் சாதி குடிமக்கள் தன் கீழ் சாதி மக்களுக்கு நடத்தும் வன்முறை ஆட்டங்கள் ஏராளம். பூலான் தேவி இந்த பெயரை எங்கோ கடந்த காலங்களில் கொள்ளைக்காரி என்ற பட்டத்துடன் இந்த பெயர் கேள்விப்பட்டிருப்போம். அவள் பிறக்கும் போதே கொள்ளைக்காரியா? அல்லது அவள் தந்தை மிகப்பெரிய கொள்ளைக்கும்பலின் தலைவனாக இருந்து, வழித்தோன்றலாக மகளுக்கும் அதே ஒட்டிக் கொண்டதா?


உண்மையில் அவளது வரலாறு முழுவதுமாக யாரும் தெரிந்து கொண்டிருக்க மாட்டோம். வாழ்க்கையில் அவள் சந்தித்தது அத்தனையும் துரோகங்கள் மட்டும் தான். அவ்வளுக்கு நடந்த அநீதி எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் கடந்து செல்ல இயலாது. இத்தனை வன்கொடுமைகளை இழைத்த கொடிய மிருகங்களை கடந்து தனது வாழ்வை எப்படி கடந்து வந்தார் தெரிந்துக்கொள்ளும்போது மிக பிரம்மிப்பாக இருக்கிறது. தனது  பொது வாழ்விலும் அரசியலிலும் MP ஆக வெற்றி களம் கண்டாள். பூலான் தேவி அவர்களின் Biopic தான் இந்த Bandit Queen திரைப்படம்.


BANDIT QUEEN இந்த திரைப்படம் 1994 ஆம் ஆண்டு Mala Sen என்னும் எழுத்தாளர் எழுதிய The true story of Phoolan Devi இந்த புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது இந்த திரைப்படம். இந்த படத்தை Shekar Kapur இயக்கியுள்ளார். பூலான் தேவி கதாபாத்திரத்தை Seema Biswas ஏற்று நடித்தார். Kaleidoscope Entertainment என்கிற நிறுவனம் இந்த படத்தை தயாரித்தார்கள். சரி நம்ம படத்துக்குள்ள போவோம்.


படம் 1968 ஆம் ஆண்டு  அந்த காலகட்டத்தில் உத்திர பிரதேசத்தில் உள்ள சிறு கிராமத்தில் இருந்து தொடங்குகிறது. பூலான் தேவிக்கு குழந்தை திருமணம் நடத்தபடுகிறது. அந்த காலகட்டத்தில் குழந்தை திருமணம் நடத்துவது ஒரு வழக்கமாக இருந்தது. பூலான் தனது கணவன் வீட்டிற்கு போக மறுக்கிறாள். பெற்றோரின் கட்டாயத்தின் பெயரில் அனுப்பி வைக்கபடுகிறாள். அவளுக்கு தனது கணவரால் பாலியல் வன்கொடுமை நடக்கிறது. பூலான் குடும்பம் Mallah என்னும் கீழ் சாதி வகுப்பினர். Thakur என்னும் மேல் ஜாதி வகுப்பினர் அங்கு அதிகம் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதனால் அங்கு இருந்து பூலான் தப்பி வந்து விடுகிறார். இருப்பினும் மேல் சாதி வகுப்பினர் பூலான் மீது பல வன்கொடுமைகளை நிகழ்த்துகிறார்கள். தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று காவல் நிலையத்திற்கு செல்கிறாள். அங்கு இருக்கும் காவலர்கள் அவளை காவல்நிலையத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். அவள் மீது வழக்கும் போடுகிறார்கள். அவளை Thakurகள் காவல்துறையிடம் பணம் கொடுத்து Bailயில் எடுக்கிறார்கள்.  அதன்பின் 1979ஆம் ஆண்டு Bandit (வழிப்பறி செய்யும் கும்பல்) குழுவின் தலைவன் Babu Gujjar அவளை அபகரிக்கிறான். அவளை எல்லோரும் முன் கற்பழிக்கிறான். இதில் ஆத்திரம் அடைந்த அந்த குழுவில் இருக்கும் Vikram Mallah என்னும் இளைஞன் Babu Gujjar யை சுட்டு வீழ்த்துகிறான். 


அதன்பின் பூலானிற்கு Vikram பாதுகாவலனாய் மாறுகிறான். இருவரும் நெருக்கமாக பழகுகிறார்கள். பூலானிற்கு Vikram பல தற்காப்பு கலைகள், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றை கற்றுக் கொடுக்கிறான். இருவரும் சில நாட்கள் கழித்து திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர். Babu Gujjar யின் தலைவன் Thakur Shriram சிறையில் இருந்து விடுதலை ஆகிறான். 1980ஆம் ஆண்டு Thakur Shriram வந்து Vikram யை படுகொலை செய்கிறான். அதன்பின் பூலானை Thakur Shriram கும்பல் அவளை கற்பழித்து பாலியல் வன்புணர்வு செய்கின்றார்கள். பிறகு அங்கு இருந்து பூலான் தப்பித்து தலைமறைவு ஆகிறாள். அவள் அதற்கு பின் ஒரு குழுவை உருவாக்குகிறாள் Man Singh என்பவரின் துணையோடு. அதன்பின் பெரிய கொள்ளைகாரியாக மாறுகிறாள். இந்தியா முழுக்க பிரபலம் ஆகிறாள். தன்னை வன்புணர்வு செய்த மிருகங்களை எப்படி பழிவாங்குகிறாள்? ஏன் சரணடைந்து சிறை சென்றாள்? எப்படி அரசியல் களம் புகுந்தார்? என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். 


இந்த படத்தில் பூலான் தேவியாக நடித்த Seema biswas அந்த Character ஆகவே வாழ்ந்திருந்தார். ரொம்ப எதார்த்தமாய் நடித்திருந்தார்.  இந்த படத்தில் நடித்திருத்த கதாபாத்திரம் எல்லாரும் ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க. இந்த படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு,இசை எல்லாம் ரொம்ப அழகாய் பண்ணிருந்தாங்க. இந்த படம் Best feature Film, Best Actress, Best Costume Designer போன்ற பிரிவுகளில் இந்திய அரசின் 1995 ஆம் தேசிய விருதுகளை வென்றது. Film fare யில் Critics Award, Best Director, Best Cinematographer, Best Female Debut போன்ற பிரிவுகளில் விருதுகளை வென்றது. 1994 ஆம் Cannes விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது. 1994 ஆம் ஆண்டு 67ஆவது ஆஸ்கார் விருதிற்கு Indian Entry ஆக Nominate செய்யபட்டது ஆனால் இதை ஆஸ்கார் கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை.  பூலான் தேவி பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள விரும்பினால் நிச்சயம் இந்த படத்தை பாருங்கள். இந்த நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம். சாதி மதம் வேறுபாடுகளை தகர்த்து எறிவோம். இன்னமும் பல பூலான் தேவிகள் நம் கண்ணிற்கு தெரியாமல் இந்த பூவுலகில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். 


-அரவிந்த்

2 comments:

PARIYERUM PERUMAL  - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...