இந்தியாவின் பல மாநிலங்களில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் (ஒடிசா,பீகார் மற்றும் பல மாநிலங்கள்) நக்சலைட்டு மாவோயிஸ்ட் போராளிகளின் போராட்டங்கள் இன்னமும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.2004ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி உருவாக்கப்பட்டதே சிபிஐ மாவோயிஸ்ட் கட்சி. இது ஒரு அரசியல் கட்சி என்பது பெயரளவில்தான் .
உண்மையில் இது ஒரு நக்சல்பாரி இயக்கமாகவே செயல்பட்டு வந்தது. நக்சல்பாரிகளின் முக்கிய நோக்கம் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவது. சிபிஐ (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மக்கள் போர், இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட கட்சிதான் சிபிஐ மாவோயிஸ்ட். மாவோயிஸ்ட் கட்சியின் முதல் நோக்கமே மக்களைத் திரட்டி அரசுகளுக்கு எதிராக போர் புரிவது என்பதுதான். சீனாவில் மாசே துங் (மாவோ) மக்களைத் திரட்டி கொரில்லாப் போரில் ஈடுபட்டதால் அந்த அடிப்படையை மாவோயிஸ்டுகள் பின்பற்றி வருகின்றனர்.
இந்தியாவில் பிகார், ஆந்திரா, சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு நல்ல பலம் உள்ளது. மாவோயிஸ்ட் நக்சலைட் அமைப்பில் கிட்டத்தட்ட 9000 முதல் 10 ஆயிரம் ஆயுதப்படையினர் வரை இருக்கிறார்கள். இவர்களில் 6500 அதி நவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை வைத்திருக்கிறார்கள்.
இதுதவிர இந்தியா முழுவதும் இவர்களுக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் சாதாரண தொண்டர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பழங்குடி மக்கள் அதிகம் வாழும் காடும் மலையும் சார்ந்த பகுதிகளில் நக்சலைட்டு-மாவோயிஸ்ட் போராளிகள் இருக்கிறார்கள்.மேலும் ஏழ்மை நிலையில் இங்கு வாழும் பழங்குடி மக்களின், வாழ்வாதாரங்களை சுரண்டும் அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை எதிர்ப்பதாக அவர்கள் கூறிக்கொள்கின்றனர். ஆனால் இங்கே அவர்களை தீவிரவாதிகள் என்கிற பெயரில் தான் சித்தரித்து வைத்திருக்கிறார்கள்.
Newton இந்த திரைப்படத்தை தேர்தல் நேரத்தில் பார்க்க நேர்ந்தது ரொம்ப வித்தியாசமான உணர்வாய் இருந்தது. இந்தியா ஒரு வளர்ச்சி மிகுந்த நாடு. இங்கு எல்லோருக்கும் எல்லாமே கிடைத்துவிட்டது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அது எல்லாமே பொய் போன்று தான் தெரிகிறது. இன்னமும் எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாமல் பல மலை கிராமங்கள் இங்கு இருக்கிறது. இந்த படத்தை பார்த்தால் Digital India போன்ற பல விஷயங்கள் நம்மை நகைப்புக்குள்ளாக்கும். சரி நம்ம படத்துக்கு போவோம்.
Newton இந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு Amit V. Masurkar அவரால் இயக்கபட்டது. Rajkumar Rao, Pankaj Tripathi, Anjali Patil இவர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை Drishyam Films தயாரித்து இருக்கிறார்கள். இவர்கள் இதற்கு முன் Masaan படத்தை தயாரித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
Nutan Kumar(Newton) இவர் ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரை நக்சல்கள் கட்டுபாட்டில் இருக்கும் சத்திஸ்கர் மலை கிராமத்தில் Election Duty க்காக அனுப்பபடுகிறார். அவருடன் இரண்டு அதிகாரிகள் மற்றும் பல CRPF போலீஸ் அதிகாரிகள் அவர்களை வழிநடத்த Aatma singh (Pankaj Tripathi) ராணுவ அதிகாரி நியமிக்கிறார்கள். அந்த கிராமத்தில் வெறும் 76 வாக்காளர்கள் தான். அதனால் அங்கு இருக்கும் அதிகாரிகள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
அங்கு வாழும் மக்களுக்கு மாவோயிஸ்ட்கள் யாரும் வாக்களிக்க செல்லக்கூடாது. தேர்தல் புறக்கணிக்க வேண்டும் என்கிறார்கள். அதற்கு பயந்து யாரும் வாக்களிக்க முன் வரவில்லை. இதனால் Newton ரொம்ப வருத்தபடுகிறார். வாக்காளர்கள் வருவார்கள் என்கிற நம்பிக்கையில் Election Booth யில் காத்திருக்கிறார்கள். இந்திய ஜனநாயகம் பற்றி செய்தி சேகரிக்க வெளிநாட்டு Reporter அங்கு வருகிறார்கள் என்கிற தகவல் கிடைக்கிறது. அதனால் அங்கு இருக்கும் CRPF வீரர்கள் கிராமத்திற்குள் சென்று வாக்காளர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக Election Booth க்கு கொண்டு வருகிறார்கள். வரிசையாக வாக்களிக்க நிற்கிறார்கள்.
முதலில் ஒரு நபர் உள்ளே சென்று வாக்களிக்க செல்கிறார். அவர் அந்த EVM பக்கத்தில் அப்படியே நிற்கிறார் என்ன செய்வதுதென்று தெரியாமல். அவர்களுக்கு அதுவே முதல் முறை. அந்த மக்களுக்கு தேர்தல் என்றால் என்ன? தேர்தல் எதுக்கு நடக்கிறது? எதுவும் தெரியவில்லை. Newton எல்லா மக்களையும் வெளிய கொண்டு வந்து எல்லாவற்றையும் விளக்குகிறார். அந்த மக்கள் அதற்கு பணம் கொடுப்பார்களா? இதனால் என்ன லாபம் போன்ற கேள்விகளை கேட்கிறார்கள். Newton எல்லா கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். குறுக்கே புகுந்த அந்த ராணுவ அதிகாரி அந்த மக்களிடம் இதெல்லாம் சும்மா விளையாட்டு பொம்மை மாதிரி எந்த பட்டனை வேண்டுமானாலும் அமுக்குங்கள் என்று கூறி ஆட்டத்தை கெடுக்கிறார். அந்த மக்களோ தனக்கு பிடிச்ச சின்னத்திற்கு வாக்களிக்கிறார்கள். Newton க்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த மக்களிடம் மன்றாடுகின்றான். இது உங்கள் உரிமை நீங்கள் அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று. அப்போது மாவோயிஸ்ட் கள் அந்த Booth யை தாக்குகிறார்கள். அதன் பின் என்ன நடந்தது.? தேர்தல் எப்படி முடிந்தது? என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்த படத்தில் Newton ஹீரோவாக நடித்த Rajkumar Rao ரொம்ப அருமையாக நடித்திருந்தார். ஒரு நேர்மையான தேர்தல் அதிகாரியை நம் கொண்டு வந்தார். இந்த படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இந்த படத்தில் திரைக்கதை சிம்பளா சிறப்பாக வடிவமைத்திருப்பார்கள். அந்த மலை காடுகளை ரொம்ப அழகாய் ஒளிப்பதிவு மூலம் காண்பித்திருப்பார்கள். பின்னணி இசையும் தேவைக்கு ஏற்றார்போல போற்றிருப்பார்கள். இந்த படம் Best Film, Best Story க்கான Filmfare Award வென்றுள்ளது. இந்த படம் Best Feature Film 2018 க்கான தேசிய விருதை வென்றுள்ளது. Pankaj Tripathi சிறப்பு விருதை தேசிய விருதை வென்றார். இந்த படம் 90ஆவது ஆஸ்கார் விருதுக்காக Best Foreign Film Categoryயில் இந்த படம் இந்தியா Entry ஆக அனுப்பட்டது. இந்த படத்திற்கு பல சர்ச்சைகள் வந்தது. இந்த படம் Iranian படமான Secret Ballot காப்பி அடித்து எடுக்கபட்டது என்று சர்ச்சை கிளப்பபட்டது. அப்போது Anurag Kashyap இந்த Newton படத்திற்கான தனது குரலை கொடுத்தார். இந்த படம் காப்பி இல்லை என்கிற ஆதாரத்தை நிரூபித்தார். அதன்பின் அந்த சர்ச்சை நீங்கியது. அதையும் தாண்டி இந்த படம் பல விருதுகளை வென்றிருக்கிறது. ஒரு வாக்காளனாய் எப்போது நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். ஓட்டுரிமை நம்முடைய உரிமை. உங்களது உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுங்கள். ஒரு ஓட்டு ஒரு அரசாங்கத்தையே மாற்றும் சக்தி உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பீர். மறக்காமல் அனைவரும் வாக்களியுங்கள். Think before you act.
- அரவிந்த்
No comments:
Post a Comment