Monday, April 15, 2019

தமிழ் சினிமாவை மாற்றிய ஒரு ஆங்கிலேயர்.

Ellis R Dungan, இவர் ஒர் அமெரிக்கர்.

பல நாடுகளில் பயணம் செய்துகொண்டு இருந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமா சார்ந்த படிப்பை கற்க துவங்குகிறார். அங்கே இவருடன் படித்துக்கொண்டிருந்த சக இளைஞர் ஒரு இந்தியர். டங்கனை இந்தியாவிற்கு வருமாரும் இந்தியாவில் தன் அப்பா ஒரு ஸ்டுடியோ வைத்து இருக்கிறார் அங்கே சென்று படம் எடுக்கலாம் என்று சொல்லி அவர் டங்கனை இந்தியா அழைத்து வருகிறார்.

ஆனால் இந்தியா சென்ற டங்கனோ அங்கு 15 வருடம் தங்கி விடுகிறார்.


இவர் வந்தப்பின் தான் தமிழ்  சினிமா ஒரு தொழிமுறையாக மாறியது.

அப்போழுதெல்லாம் நாடக கலைஞர்களை சினிமாவிற்குள் கொண்டு வந்துக்கொண்டிருந்தார்கள்.

காட்சியின் பொழுது ஏன் கத்தி பேசுகிறிர்கள் என்று டங்கன் கேட்டார்.

அந்த நாடகத்தன்மை அவருக்கு பிடிக்கவில்லை.

ஆனால் அப்பொழுது இருந்த ஒலி பதிவு செய்யும் கருவி இரு கதாப்பாத்திரங்கள் சகஜமாக பேசிக்கொண்டால் அதில் பதிவாகாது அதனால் சத்தமாக பேசியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம்.

தமிழே தெரியாது என்றாலும் தமிழ் கலாச்சாரத்தை நுண்ணியமாக புரிந்துக்கொண்டு அதை அணுகினார்.

படத்தில் என்ன வசனம் பேசுகிறார்கள் என்று இவருடன் இருந்த துணை இயக்குனரகே டங்கனுக்கு மொழிமாற்றம் செய்து சொல்லுவார்.


Dungan Trolley/Dungan  Track என்று சினிமாத்துறையில் அடிக்கடி சொல்லும் தொழில்நுட்ப வார்த்தை.

அந்த பெயர் வந்ததற்காக காரணம் டங்கன் தான்.

அவர் தான் அந்த தொழிநுட்பத்தை தமிழில் கொண்டு வந்தது.

அவருக்கு தமிழ் வசனம் அவ்வளவாக  புரியாது என்பதால் அவர் கவனம் முழுக்க நடிகர்களின் முக பாவனைகளிலும் அவர்கள் கொடுக்கும் உணர்ச்சிகளிலும் தான் இருந்தது.

சதிலீலாவதி,அம்பிகாபதி,சீமந்தினி,சகுந்தலா,தாசி பெண்,மீரா பொன்ற அந்த காலத்து வெற்றி படங்களை இயக்கியவர்.

இவர் படங்களில் நன்றாக நடிக்க தெரிந்தவரை விட நன்றாக பாட தெரிந்தவரை வைத்தே படம் எடுத்தார்.

எம்.எஸ் சுப்பு லக்‌ஷ்மியை வைத்து  இரு படங்கள் இயக்கியுள்ளார்.

எம்.ஜி.ஆர் அவர்கள் இவர் எடுத்த சதி லீலாவதி படம் மூலமாகவே சினிமாக்கு அறிமுகம் ஆனார்.

அந்த படத்தில் இவருக்கு எம்.ஜி.ஆரை நடிக்க வைக்க விருப்பம் இல்லை.

காரணம் எம்.ஜி.ஆருக்கு Photogenic Face இல்லை என்று நினைத்தார் ஆனால் கலைஞர் கருணாநிதியின் தொடர் அழுத்தத்தால் இவர் எம்.ஜி.ஆரை வைத்து படத்தை எடுத்தார்.

என்.எஸ் கிருஷ்ணன்,டி.எஸ்  பாலையா போன்றவர்களை சினிமாத்துரைக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கே.!


ஒரு ஆங்கிலேயர் தமிழ் நாட்டில்  வந்து 15 ஆண்டு காலம் தமிழ் சினிமாவை தன் வசம் வைத்திருந்தார் என்பது பாராட்டக்கூறியது.

அவர் நாடகத்தனத்தில் இருந்து தமிழ் சினிமாவை மாற்ற நினைத்தார் ஆனால் அவர் போன பின்பும் அதே நாடகத்தனம் தொடர்ந்தது.

இவரை பற்றி அறிய An American In Madras என்கிற ஆவணப்படத்தை பார்க்கவும்.

- அப்துல்


No comments:

Post a Comment

PARIYERUM PERUMAL  - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...