முதலில் இந்த படத்தை திரையரங்கில் பார்க்காமல் தவற விட்டதுக்கு வருந்துகிறேன்.
அதற்கு திரையரங்குகளில் நடைபெறும் அரசியலும் ஒரு காரணம். பெரும்பாலும் வார இறுதியில் தான் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அந்த நேரங்களில் மற்றும் பண வருகைக்காக இந்த படத்தை அகற்றி விற்று எப்போதும் பேன்று commercial படங்கள் திரையிட்டு பின்பு வேலை நாட்களில் இந்த படத்தை மீண்டும் திரையிட்டு திரையிட படாத நாட்களுக்கும் தயாரிப்பாளர்யிடம் இருந்து வாடகை பணத்தை பெற்று கொள்கின்றன தியேட்டர் உரிமையாளர்கள்.இப்படி நடப்பது புதிதா என்ன??.அப்படி நடந்த பண அரசியலில் தான் இந்த படத்தை திரையரங்கில் காண தவறவிட்டேன்.
எந்த ஒரு படம் நம் வாழ்வியலுடன் ஒற்று போகிறதோ அந்த படத்தை உலக சினிமா என்று சொல்லாம்.அதுபோல தான் இந்த படமும்.தமிழ் சினிமாவில் ஒரு உலக சினிமா படைப்பு என்று சொன்னால் அது மிகையாகாது.இந்த படம் மொத்தம் 100 உலக திரைபட விழாக்களில் பங்கு பெற்று 84 பரிந்துரைகளில் 32 சர்வதேச விருதுகளை கைபற்றியுள்ளது.படத்தில் மொத்தம் மூன்றே கதாபாத்திரங்கள்.இந்த படத்தில் நடித்தவர்கள் மற்றும் இயக்கியவர் என்று அனைவரும் அறிமுக கலைஞர்களே.இந்த படத்தை தானே எழுதி,ஒளிப்பதிவு செய்து மற்றும் இயக்கியும் உள்ளார் இயக்குனர் செழியன்.
இளங்கோ திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக வேலை பார்க்கிறான். அவன் தனது மனைவி அமுதா மற்றும் 5 வயதான தனது மகன் சித்தார்த்துடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறான். அந்த வீட்டின் உரிமையாளர் IT companyயில் வேலை பார்ப்பவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் அதிகமாக பணம் கிடைக்கும் என்று எண்ணத்தில் இளங்கோ குடும்பத்தினரை 30 நாட்கள் கெடு வைத்து வீட்டைக் காலி செய்யும்படி கூறுகிறார். அந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு மாற நினைக்கும் நடுத்த குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை சித்தரிக்கிறது இந்த படம்.
ஒரு சாமான்ய மனிதன் எப்படி முதலாளித்துவதால் நசுகபடுகிறான்,தனக்கேன்று சொந்த வீடு இல்லாதவனை இந்த உலகம் எப்படி நடத்துகின்றது,வாடகை வீட்டில் வாழும் நடுத்தர மனிதனின் சிக்கல்கள்,பன்நாட்டு நிறுவனங்களின் வருகையால் நடுத்தர மக்களுக்கு ஏர்படும் பாதிப்புகள் என்று அனைத்தையும் தன் எழுத்துகளிலும் காட்சிகளிலும் உலக தரத்தில் காட்டியிருக்கிரார் செழியன்.படத்தில் பேரும்பாலன இடத்தில் இயற்கையே இசை அமைத்திருக்கும். ரேடியோ ஒலிகள்,தொலைக்காட்சி ஒலிகள்,சக மனிதனின் நடமாட்டங்கள் என்று நம் அன்றாட வாழ்வில் வரும் அனைத்தும் இசை அமைத்து மேலும் இந்த படத்தை நம்முடன் இனைத்து விடுகின்றன.
வாடகை வீடு தேடி செல்லும் தருனத்தில் ஒரு வீட்டை உள்ளே போய் பார்க்க சொல்லியும் நமக்கு ஏற்பட்ட சங்கட்டங்கள் மற்றவருக்கும் வர கூடாது என்று எண்ணி ஜன்னல் வழியே பார்க்கும் காட்சி,தன் கனவு வீடை போன்றே இருக்கும் வாடகை வீட்டை மீண்டும் ஒரு முறை வந்து பார்க்கும் காட்சி,என்று நடுத்தர மக்களின் எண்ணங்கள்,ஏக்கங்கள்,கனவுகள்,வலிகள் அனைத்தும் இப்படத்தில் நம்மால் உணர முடியும்.
இங்கே தரமான சினிமா எடுப்பதில்லை என்ற “குற்ற உணர்வையும்” நம் ஒரு தரமான சினிமா படைக்க வேண்டும் என்ற “மன அழுத்தத்தையும்” raw materialsஆக கொண்டு இந்த படத்தை செழியன் இயக்கியுள்ளார் போலும்.(படத்தில் வரும் ஒரு வசனம்)
சினிமா தன்மை இல்லாத சினிமாவை கண்டிப்பாக அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும்.
- கார்த்திக் ரெங்கசாமி
No comments:
Post a Comment