Youtube யில் உலாவிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக Tom and jerry கார்ட்டூன் சீரிஸ் பார்க்க நேர்ந்தது. தொடர்ந்து பல வீடியோக்களை பார்த்தேன், அதை பார்க்கும்பொழுது நான் என்னுடைய சிறு வயதிற்கு பயணித்துக் கொண்டிருந்தேன் . இப்ப வரைக்குமே ஒரு ஆச்சரியம் இருந்துக் கொண்டே இருக்கிறது. இதன் உருவாக்கத்தை (Making) பார்க்கும்போது இந்த அளவிற்கு ஒரு Animation விஷயத்தை Black and white காலத்தில் செய்வது சாத்தியம் தானா என பல முறை எனக்குள்ளே கேட்டிருக்கிறேன்.
சின்ன வயதில் அவ்வளவு பிரியமான கார்ட்டூன் சீரிஸ் எது என்றால் என்னை பொறுத்தவரைக்கும் அது Tom and Jerry தான். குறிப்பாக அந்த காலகட்டத்தில் 90's Kids யோட Favourite ஆக இருந்தது என்றால் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதனுடைய சிறப்பு அம்சம் என்னவென்றால் எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு சலிப்பு தட்டாது. அதன் நகைச்சுவை உணர்வும் குறையாமல் இருக்கும். இதைப்பற்றி இணையத்தில் தேடும்போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தது.
1940 ஆம் ஆண்டு William Hanna மற்றும் Joseph Barbera அவர்களால் Tom and jerry தொலைக்காட்சி தொடராக முதன் முதலி்ல் உருவாக்கப்பட்டது. இதன் மைய கரு என்னவென்றால் ஒரு பூனை (Tom) தன்னுடைய வீட்டில் இருக்கும் எலியை (Jerry) பல விதமான தொல்லைகளை கொடுக்கிறது அதனால் எப்படியாவது Jerry கொன்று உண்ண வேண்டும் என்பதே Tom யின் நோக்கம். அதற்காக Tom மேற்கொள்ளும் முயற்சிகள், அதில் இருந்து Jerry எப்படி தன்னை காப்பாற்றிக் கொள்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்வது தான் இந்த Tom and Jerry சீரிஸ்.
முதலில் Tom யின் பெயர் Jasper எனவும் jerry யின் பெயர் Jint எனவும் இருந்தது. அந்த நிறுவனம் ஊழியர்களிடம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது யார் சிறந்த பெயர்களை அந்த Characters க்கு தருகிறார்களோ அவர்களுக்கு 50$ பரிசாக வழங்கப்படும் என்று. அதன்பின் பிறந்த பெயர் தான் இந்த Tom And Jerry.
இந்த அழகான அனிமேஷன் கார்ட்டூன்கள் Paper களில் கையால் ஓவியமாக வரையப்பட்டது. அதாவது ஒவ்வொரு Frame Ku ஏற்றவாறு அசைவுகளையும் ஓவியமாக Celluloid Sheets யில் வரைந்து அதை புகைப்படங்களாக எடுத்து அந்த காட்சிக்கு தகுந்தவாறு வண்ணங்களை கொடுத்தார்கள். Loving Vincent (2016) இதே பாணியில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான். இதுவே "cel அனிமேஷன்" அல்லது "பாரம்பரிய அனிமேஷன்" அல்லது "2-D" அனிமேஷன் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு Episode கிட்டதக்க 6 to 10 நிமிடங்கள் வரை ஓடும். கிட்டதக்க 114 Episode களை Metro Goldwyn Mayer(MGM) என்கிற நிறுவனம் 1940 to 1958 தயாரித்து Distribute செய்து கொண்டிருந்தார்கள். இந்த காலகட்டத்தில் ஏழு முறை Best Animated Short Film பிரிவில் ஆஸ்கார் விருதுகளையும் வென்றது. Metro Goldwyn Mayer(MGM) நிறுவனம் பல காரணங்களால் Animation உரிமத்தை விற்க நேர்ந்தது. அதன்பின் இதற்கான உரிமத்தை பல பேர் Franchise முறையில் எடுத்து இன்று வரை இந்த சீரிஸை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனை எடுத்தவர்கள் பட்டியல்,
Hanna-Barbera (1940-1958)
Gene Deitch (1961-1962)
Chuck Jones (1963-1967)
Hanna-Barbera’s The Tom and Jerry Show (1975-1977)
Filmation Studios (1980-1982)
Tom and Jerry Kids (1990-1994)
Warner Bros.’ Tom and Jerry (2006-2008)
Warner Bros.’ The Tom and Jerry Show (2014-present day)
ஒரு கார்ட்டூன் உருவாகுவதற்கு பின்னால் இவ்வளவு மனித உழைப்பு இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் அந்த காலத்தில் எந்த ஓரு தொழில்நுட்பமும் இல்லாமல் இப்படி இதை செய்தார்கள் என்பது நம்ப முடியாத உண்மையாகவே இருக்கிறது.
- அரவிந்த்
Nice
ReplyDeleteChuck Jones எடுத்தது நன்றாக இருக்கும். அதற்குப்பிறகு வந்ததெல்லாம்🙄
ReplyDelete