இயக்குனர் நவீன் அவர்களை பார்க்க மதியம் 3.30 மணிக்கு சென்று அவர் அலுவலகத்தில் கார்த்திருந்தோம்.
அவர் சரியா 4.45 மணிக்கு வந்தார்.
வந்த உடனே கைய கொடுத்துட்டு நாங்கள் எங்களை அறிமுகப்படுத்திகிட்டோம்.
" சார் இண்டிபெண்டண்ட் சினிமான்னு புக் எழுதிருக்கேன் "
நவீன் - "ஓ அப்படியா "
" சார் இந்த மிஸ்டு மூவீஸ்"நு...
நவீன் - "ஹான் தெரியும்பா பாத்துருக்கேன் "
நான் போட்ட மூடர் கூடம் பகுப்பாய்வு வீடியோவை பார்த்ததாகவும் கூறினார்.
டி கொடுத்து ஒரு அண்ணன் போல பேசினார்.
அவர் மூடர் கூடம் படத்திற்கு வந்த விமர்சனத்தை பற்றி வெளிப்படையாக பேசினார்.
கிட்டத்தட்ட 40 நிமிடம் பேசியிருப்போம்.
உலக சினிமாக்களை பற்றியும் இண்டிபெண்டண்ட் பிலிம் மேக்கிங் பற்றியும் பேசினார்.
மூடர் கூடம் ஒரு மொக்க படம் என்று அவர் படத்தையே அவர் குற்றம் சாட்டினாலும் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.
இவ்வளவு சகஜமான ஒரு மனிதர்.
போகும்பொழுது " நல்லா பன்னுங்க நீங்கதான் வருங்காலம் தம்பிங்களா " என்று அவர் சொன்ன் வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
- அப்துல்
No comments:
Post a Comment