Thursday, March 28, 2019

"ஆங்கிலத்தில் ஒரு பரியேறும் பெருமாள்".


இனவெறி(Racism) என்பது அன்று முதல் இன்று வரை காலம் காலமாக தொன்றுதொட்டு நம்மை கடந்து வந்துக் கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்காவில் 1600 ஆண்டு அந்த கால கட்டத்தில் அங்கு இருக்கும் வெள்ளை எஜமானர்களுக்கு வேலை செய்வதற்காக ஆப்பிரிக்காவில் இருந்து பல லட்சம் கறுப்பின மக்கள் கொத்தடிமைகளாக கொண்டு வந்தார்கள். அவர்களின் பணி அங்கு காலம் முழுவதும் அடிமையாக பணி் செய்து கிடப்பதே.


இப்படி போயிட்டு இருந்த நிலையில் 1863 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் கொத்தடிமை முறையை ஒழிக்க சட்டம் பிறப்பித்தார். நம்ம ஆளுங்களுக்கு தான் நல்லது பண்ணாலே பிடிக்காதுல. கொஞ்ச நாட்களில் ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யபடுகிறார். Daniel day lewis நடிச்ச Lincoln (2012) திரைப்படத்தில் இதை பற்றி ரொம்ப விவரமாக பேசியிருப்பார்கள்.இந்த படத்தை பார்த்தால் நிறைய விஷயங்கள் புரியும்.


இப்படி தொடர்ந்து கறுப்பின மக்கள் எல்லா இடத்திலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.குறிப்பாக ஆஸ்கார் விருதுகளில் கறுப்பின மக்கள் சார்பான படங்களுக்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படவில்லை என்கிற விமர்சனம் ரொம்ப நாள் இருந்துட்டே இருக்கு. 2013 யில் வந்த 12 years a slave, 2016 யில் வந்த Moon light போன்ற படங்கள் ஆஸ்கார் விருதுகளை வாங்கினார்கள். அதை தவிர பெருசா வேறெந்த படத்திற்கும் கொடுத்ததா தெரியவில்லை. அந்த எண்ணத்தை உடைக்கும் விதமாக 2018 யில் வெளி வந்த Green Book படத்திற்கு 91ஆவது சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது கிடைத்தது. அப்போது தான் நிறைய பெயருக்கு தெரிந்தது இப்படி ஒரு படம் வந்தது என்று. அதுக்கு அப்பறம் இந்த படத்தை பார்க்கனும் இரவு பார்க்க ஆரம்பிச்சேன்.

இந்த படம் 1950 to 1960 நடந்த Tony Lip மற்றும் Don Shirley ஆகியோரின் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவத்தை  மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். படத்தின் கதைபடி Tony Lip bouncer ஆக வேலை தேடிக்கிட்டு இருக்கிறார். அப்போது Don Shirley கிட்ட இருந்து ஒரு Interview க்கான  அழைப்பு வருது. அங்க நடக்கிற Interview Attend பண்ணுகிறார். Don Shirley அவர் ஒரு Pianist அவருடைய 8 வாரம் கச்சேரிக்கான சுற்று பயணத்திற்கு டிரைவராக Tony lip வரனும் சொல்கிறார். அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்கிறார் Don Shirley. Tony lip முதலில் இதற்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கிறார். பின் தன் மனைவியின் பேச்சுக்கு இணங்க பயணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். அப்போது கறுப்பின மக்களுக்கு சேவை செய்யும் தங்கும் விடுதி, உணவகங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை அடங்கிய Green Book ஐ Tony Lip யிடம் கொடுத்து பயணத்தை தொடங்குகிறார்கள். பயணத்தின் போது Don Shirley க்கு Tony யோட செயல்பாடுகளை கண்டு எரிச்சல் அடைக்கிறார். இரண்டு பேரும் முரண்பாடுகளோடு பயணிக்கிறார்கள். போக போக Don Shirley யோட 

Piano இசை வாசிப்பிற்கு Tony Lip கவரபடுகிறார். ஒவ்வொரு இடத்திற்கு பயணம் செய்யும்போது ஒவ்வொரு விதமான பல இனவெறி தாக்குதலை Don Shirley அனுபவிக்கிறார். முதலில் ஒரு பார்ல பல வெள்ளை அமெரிக்கர்கள் Don Shirley போட்டு அடிப்பார்கள். Tony lip அங்கு வந்து Don Shirley யை காப்பாற்றுவார். அதேபோல் ஒரு Piano கச்சேரி நடக்கிறது அங்கு Don Shirley இசை வந்து இசையமைக்கிறார். இடையில் சிறுநீர் போக Toilet எங்க இருக்கிறது என்று Don Shirley கேட்கிறார். அவருக்கு அனுமதி மறுக்கபடுகிறது. அங்கு இருப்பவர் வெளியே இருக்கும் தனி Toilet காண்பித்து அங்கு செல்லுமாறு கூறுகிறார் வாக்குவாதம் நடக்கிறது. என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் நீ எனக்கு கீழே தான் என்கிற வெள்ளையின மக்களின் மனநிலையை தோலுரித்து காண்பிக்கும். அதன்பின் தான் தங்கி இருக்கும் விடுதிக்கு சென்று சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் வந்து இசை கச்சேரியில் வாசிக்கிறார். பிறகு பயணத்தின் போது அடிக்கடி Tony lip தனது மனைவிக்கு காதல் கடிதம் எழுத்துகிறார் அதற்கு Don Shirley உதவுகிறார். அந்த காட்சிகள் எல்லாம் ரொம்ப அருமையாக இருந்தது. ஒரு காட்சியில் Don Shirley ஆடை வாங்க கடைக்கு செல்வார் அங்கு அவர் ஆடையை Trial பார்க்கனும் சொல்வார். அதற்கு கடைக்காரர் அனுமதி மறுப்பார். கறுப்பின மக்களுக்கு அனுமதி் கிடையாது என்பார். 


அதோ மாதிரி ஒரு காட்சியில் பயணம் செய்யும்போது கார் ரிப்பேர் ஆகி நடுவழியில் நின்றுவிடும். அப்போது Tony Lip கார் வெளிய வந்து அதை சரி செய்து கொண்டு இருப்பார். அப்போது Don Shirley கார் விட்டு இறங்கி தற்செயலாக அவருக்கு எதிரில் இருக்கும் நிலத்தை பார்ப்பார். அங்கு பல கறுப்பின மக்கள் அடிமைகளாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். அந்த மக்கள் Don Shirley பார்த்ததும் தங்கள் செய்கின்ற வேலையை நிறுத்திட்டு Freeze ஆகி நிற்பார்கள். அப்போது Don Shirley மற்றும் அவருடைய மக்களின் வலியை காட்சி மொழி மூலம் ரொம்ப அழகாய் காண்பித்து இருப்பார் இயக்குனர். அதுக்கே இந்த படத்திற்கு ஒரு ஆஸ்கார் என 100 ஆஸ்கார் கொடுக்கலாம். மேலும் இது மாதிரி பல காட்சிகள் படத்தில் இருக்கும் அதை படம் பார்த்து தெரிஞ்சிகோங்க.


இந்த படத்தில் நடிச்ச எல்லோரும் ரொம்ப நல்ல நடிச்சிருந்தாங்க குறிப்பாக Don Shirley கதாபாத்திரத்தில் Mahershala Ali வோட நடிப்பை நடிப்புன்னு சொல்லறதவிட அவங்களோட வலின்னு சொல்லலாம். அந்த அளவிற்கு ஒரு தாக்கம் இருந்தது. அதற்காக Best Supporting Actor ஆன ஆஸ்கார் விருதை வென்றார். இந்த படத்தின் பலமே திரைக்கதை தான். கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் எதார்த்தத்தை கையாண்ட விதம் இந்த படத்தின் சிறப்பு. அதற்காக Best Original Screenplay கான ஆஸ்கார் விருதையும் வென்றது இந்த படம். கண்டிப்பாக எல்லோரும் இந்த படத்தை பாருங்கள். நிச்சயம் ஒரு நல்ல அனுபவத்தை தாண்டிய ஒரு உணர்வு கிடைக்கும். இந்த படம் பற்றி ஒரு வரியில் சொல்லனும்னா "ஆங்கிலத்தில் ஒரு பரியேறும் பெருமாள்".

- அரவிந்த்

1 comment:

  1. Padam paaka arumaiya irunthathu... aana intha padathukku black people's a neraya ethirpu therivikraanga...Yen??
    Athai pathi sollamudiuma?? NANDRI

    ReplyDelete

PARIYERUM PERUMAL  - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...