gangster படங்கள் என்று தனியாக எடுத்து கொண்டால் அதில் இயக்குனர் என்ற இடத்தில் முக்கால்வாசி Martin Scorsese பெயர் தான் இடம் பெற்றிக்கும்.gangster படங்கள் ,Scorsese படங்கள் என்று தனி தனியாக பிரிக்க முடியாது.அவரின் படங்கள் பெரும்பாலும் gangster பத்திய படங்களாவே இருக்கும். இவரின் Good fellas(1990),casino(1995),gangs of new york (2002),the departed(2006) ஆகிய படங்கள் “gangster dictionary” என்று சொன்னால் மிகையாகாது.அப்படி Henry hill என்ற gangsterயின் உண்மை கதையை வைத்து எடுத்த படம் தான் “Good fellas”.
Henry hill ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்த இளைஞன். நடுத்தர இளைஞர் பலர் பகட்டான வாழ்க்கை தான் நாடுகிறார்கள் அதைப்போல தன் வீட்டின் அருகே இருக்கும் பகட்டான gangsterகளையும் gangsterismத்தையம் கண்டு தானும் ஒரு gangster ஆகவேண்டும் என்று வளர்கிறான்.”as far back I can remember I always wanted to be a gangster” என்ற வசனத்துடன் அவன் கதை ஆரம்பம் ஆகிறது.
படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தனக்கே உரிய gangster பாணியில் நடித்து இருப்பர்கள். பகட்டான கார்கள் ,துப்பாக்கிகள், போதை பொருட்கள், coat suite உடைகள், clubகள், பெண்கள் என்று gangster அடிப்படை வாழ்க்கையின் அங்கங்கள் சிறப்பாக காட்டப்பட்டிருக்கும்.
பயம்,பணம்,பகட்டு தான் வரு gangsterயை gangsterஆகிறது என்னபதை நம்மால் சில காட்சிகளில் உணர முடியும். குறிப்பாக Karenஐ(Henry யின் மனைவி) dating அழைத்து செல்லும் long take காட்சில் இவை அனைத்தையும் நம்மால் காணமுடியும்.
Gangsterகளின் குடும்பம்,அவர்களின் உறவுகள், குடும்ப விழாக்கள் என்று காட்சிகள் வருகின்ற போது நம்மை அரியாமலே நாமும் அந்த gangயில் ஒரு கூட்டாளியாகவே மாறிவிடுவோம்.jimmyயாக வரும் Robert de noir நடிப்பு gangsterயின் gun மாதிரி வெடித்திருக்கும். நம் வாழ்க்கையில் வில்லன் என்று யாரும் இல்லை மற்றவர்களால் வரும் சூழ்நிலைகளும் அதனால் வரும் விளைவுகளும் தான் நமக்கு வில்லன்களை தேடி தரும். அந்த விளைவு நண்பனிடம் இருந்து கூட வரலாம். அதுபோல் தான் Henry jimmiகும் ,jimmiகு henryஉம் வில்லனாய் மாறுவார்கள்.நாம் அனைவரும் ஒரு வகையில் மற்றவர் வாழ்க்கையில் வில்லன்கள் தானே??
Tommyஆக வரும் joe pesciயின் நகைச்சுவை கலந்த gangsterism நம்மை ரசிக்க வைக்கும்.இவரை வைத்துதான் Scorsese தன் signature காட்சிகளை அமைத்து இருப்பார். Scorsese படங்களில் வரும் வன்முறைகள் மிக அமைதியாகவும் எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி ஏற்படும்.நம் வாழ்க்கையிலும் அப்படித்தான் நமக்கு நடக்கும் வன்முறையோ மரணமோ தன் வருகையை அறிவித்துவிட்டு வராது அதன் வருகையை நமக்கு நடக்கும் வரை நம்மால் உணர முடியாது. அதுபோல்தான் Scorseseயின் வன்முறை இதை suspense ஆக சொல்லி இருக்க மாட்டார் மாற்றாக தனக்கே உரிய காட்சி மொழியில் காட்டியிருப்பார்.அதுவே அவரின் signature touch
படத்தின் கடைசி 30 நிமிடங்கள் பதட்டமான gangster வாழ்க்கையை காட்சிப்படுத்தி நம்மையும் பதட்டப்பட வைத்திருப்பார்.படம் 1955யில் ஆரம்பித்து 1987யில் முடிகிறது. கால மாற்றத்திற்கேற்ப கதாப்பாத்திரங்களின் உடை ,முக மற்றும் charachter மாற்றங்கள் நம்மால் காண முடியும். Gangsterயின் வாழ்க்கைமுறைகள் பழக்கவழக்கங்கள் பற்றி எந்த அளவிற்கு Scorsese Research செய்து இருப்பார் என்று எண்ணி திகைத்து போனேன்.
அவரின் அடுத்த gangster படமான “the irishman(2019)” காக காத்திருக்கிறேன்
-கார்த்திக் ரெங்கசாமி
Isn't irishman a detective thriller?
ReplyDelete