பல இயக்குனர்கள் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் திரை உலகில் கால் அடி எடுத்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த கூட்டத்தில் இருந்து கொஞ்சம் தனித்துவமாகவும் தைரியமாகவும் ஒருவர் நிற்கிறார்.
அவர் தான் லெனின் பாரதி.!!
நான் அவரை நேரில் சந்தித்தபொழுது மிக எளிமையாக இருந்தார் ஒரு உலகத்தர படைப்பை கொடுத்துவிட்டோம் என்கிற மெதப்பு அவரிடம் இல்லை.
தமிழ் சினிமாவில் பல இய்க்குனர்கள் பல பிரச்சனைகளை பேசி வருகிறார்கள்.
ஆனால் அத விட முக்கியமாக நாம் பேச வேண்டிய பிரச்சனை கதாநாயக வழிபாடும் போலி சினிமா ஆதிக்கமும்..!!
ஒரு படத்தில் கடவுள் இல்லை என்று பேசுகிறார்கள் அதையும் பார்வையாளன் ஒத்துக்கொள்கிறான் ஆனால் வெளியே சென்று அவன் கதாநாயகனை வழிபடுகிறான்.
உதவி இயக்குனர்களை பற்றி வணிக சினிமாவை பற்றி ரொம்பவும் துணிச்சலாக அவர் வார்த்தைகள் வெளிவருகிறது.
ஆனால் பல இயக்குனர்கள் வணிக சினிமாவை பற்றி பேச பயப்படுகிறார்கள் என்பதே உண்மை.
பார்வையாளர்களை நம் சினிமா மட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பதும் உண்மை அவர்கள் அதற்கு இரை ஆகிவிட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை என்பதும் உண்மை.
ஒரு தனி மனிதனாக ஒரு படம் மட்டுமே எடுத்துவிட்டு இப்படி பேசுகிறொமே அதற்கு பின் தனக்கு வாய்ப்பு வருமா வராதா என்று கவலைப்படாமல் தான் நினைத்ததை உணமையாக சொல்கிறார் அண்ணன் லெனின் பாரதி..!!!
- அப்துல்
No comments:
Post a Comment