Ruby sparks- எழுத்துகளால் எழுந்தவள்
நாம் அனைவருக்கும் நமக்கு வரும் காதலியை பற்றி பல கனவுகளும் கற்பனைகளும் இருக்கும் அதுவே ஒரு எழுத்தாளனுக்கு சக மனிதனை விட கற்பனை ஆற்றால் அதிகமாகவே இருக்கும்.அப்படி பட்ட ஒரு எழுத்தாளனின் கற்பனை காதலி அவன் எழுத்துகளில் இருந்து எழுந்து வந்தாள் ?? கற்பனைகள் உண்மையாக நடந்தால் ??காதல் செய்தால் ?? அதுவே romantic Fantasy drama படமான ruby sparksயின் கதை சுருக்கம்.
இந்த படத்தை இயக்கியவர்கள் Jonathan Dayton & valerie faris என்ற உண்மை தம்பதிகள்.அதனால் என்னமோ காதலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணமுடிகிறுது.
Calvin weir fieldஆக வரும் paul dano யின் introvert கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பும் ruby sparksஆக வரும் zoe kazan யின் சுட்டித்தனமான நடிப்பும் நம்மை கவர தவறவில்லை.படத்தில் வரும் காதல் காட்சிகள் நம்மையும் காதல் ஆசையில் நனைய வைக்கும். காதல் ஆரம்பத்திலும் ,நம் காமம் சற்று தணிந்த பின் இருக்கும் காதலையும் நம்மால் இந்த படத்தில் வரும் காட்சிகளில் உணர முடியும். காமம் தணிந்த பின் வரும் காதலே உண்மையானது ஏன் என்றால் காதலுக்கு உடல் தேவைகள் விட மனத்தேவைகளே அதிகம்.
காதலுக்கு நாம் அடிமை ஆகிறோமா?? இல்லை காதலால் நாம் நேசிப்பவர்கள் நமக்கு அடிமை ஆகிறார்களா?? என்ற கேள்வி இந்த படத்தில் வரும் காட்சிகளால் நமக்குள் எழும்.”too much off anything is good for nothing” என்பதை rubyயின் அளவற்ற பாசமும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் காட்சிகள் நமக்கு பாடம் நடத்தும்.மனிதன் ஒரு சுயநலவாதிதான் என்ற மறுக்கபடாத உண்மையை calvin தனக்கு ஏற்றவாறு rubyயை மாத்தும் காட்சிகள் பேசும்.என்ன தான் Rubyயை தனக்கு ஏற்றவாறு மாற்றினாலும் calvinயிக்கு மகிழ்ச்சி கிடைக்காது காரணம் இயல்பை ஏற்காத, தான் நினைத்தது கிடைத்தும் அது பத்தாத மனித மனமே. போதும் என்ற மனித மனம் எங்கே உள்ளது??
நாம் அனைவரும் ஒரு வகையில் சக மனிதனை அடிமையாகவே பார்க்கிறோம்.நம் கருத்துகளை அவர்கள் மீது திணிப்பது அதன் படி நடக்க செல்வது , தனக்கு பிடித்த படம் மற்றவர்க்கும் பிடிக்க வேண்டும் அதில் கருத்து வேறுபாடுகள் இருந்தால் ரசனை கெட்டவன் என்று மட்டம்தட்டுவது போன்று சிறு சிறு செயல்களில் இருந்து நம் பிறர் மீது நடத்தும் சர்வாதிகாரம் நீள்கிறது.நாம் சொல்வதை பிறர் செய்யவேண்டும் என்று எண்ணுவது ஒரு வகையில் ஆளுமையின் போதையே .அதுவும் காதலில் நாம் அனைவரும் hitlerயே. “I can make you do whatever I want”என்று சொல்லி rubyயின் செயல்களில் மாற்றம் செய்யும் காட்சில் calvin எனக்கு hitlerஆகவே காட்சி அளிக்கிறான்.
நமக்கு பிடித்தவரகள் நமக்கு பிடித்த மாதரி நடந்தால் தான் காதல் என்று இங்கே அனைவரும் எண்ணுகிறார்கள்.ஆனால் தமக்கு பிடித்தவர்களின் சுதந்திரத்தை பறிக்காமல் அவர்களின் இயல்பை நேசிப்பதே உண்மையான காதல் என்பதை இந்த படத்தில் இருந்து உணரலாம்.
என்னதான் நம் கற்பனைகளும் நம் எண்ணங்களும் நமக்கு பிடித்த மாதிரி நடந்தாலும் இயல்பை நம்மால் மாற்ற முடியாது என்றும் மாற்றினாலும் நம் வாழ்க்கையின் யதார்த்தை நம்மால் உணர முடியாது என்று இந்த படம் காதல் வழியில் சொல்லும் உண்மையை நம்மால் மறுக்க முடியாது.
-கார்த்திக் ரெங்கசாமி
Luvly bro
ReplyDeleteநல்ல முன்னேற்றம். வாழ்த்துக்கள் நண்பா
ReplyDelete