எம் ஆர் ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்.
இந்த புத்தகத்தை எழுதியவர் - விந்தன் .
பொதுவா எனக்கு எம் ஆர் ராதவை பற்றி எந்த ஒரு அபிப்பிராயமும் இல்லை. அவர் நடித்த ரத்தக்கண்ணீர் படத்தை தவிற வேறு எதும் பார்த்ததில்லை.
அந்த படம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. எம் அர் ராதா அவர்களின் அந்த பாவனை,அவர் பேசிய வசனமும் ரொம்ப இயல்பாகவும் அதே நேரம் ஆழ்ந்த உட்கருத்துக்களும் இருந்தது.அவரிடம் ரொம்பவும் பிடித்தது அவரின் குரல் தான். அவர் குரலுக்கு ஏற்றாபோல் வசனம் இருக்கும்.
இது போல் எந்த ஒரு ஐடியாவும் இல்லாமல் இந்த புத்தகத்தை படிக்க துவங்கினேன்.
இது எம் ஆர் ராதா அவர்கள் சிறைச்சாலை சென்று வந்த பிறகு அவரிடம் எடுத்த நேர்காணலின் தொகுப்பே இந்த புத்தகம்.
இதை எழுத்தாளர் இந்த அளவு சுவாரசியமாகவும் தெளிவாகவும் எழுதியது நம்மை இந்த புத்தகத்தின் உள்ளே பயணம் செய்ய வைக்கின்றது.
புத்தகம் படிக்கும்பொழுது பல இடங்களில் சிரித்தேன்.
எம் ஆர் ராதா சொல்லுவது ரொம்ப முக்கியமான விஷயமாக இருந்தாலும் அதை அவர் சொல்லும்விதமும் அவர் அணுகிய விதமும் மிகவும் நகைச்சுவை மிக்கது.
இந்த புத்தகத்தில் தமிழ் சினிமாவின் மாற்றத்தையும், சினிமாவையும் நாடகத்தையும் அரசியல்வாதிகள் தன் அரசியல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தி இருப்பதும் சொல்லப்பட்டு இருக்கிறது.
திராவிட கட்சிக்காக எம்.ஆர் ராதா அவர்களின் பங்களிப்பும் அவர் போட்ட மேடை நாடகமும் அந்த கட்சியின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியப்பங்காக இருந்திருக்கிறது என்பது தெரிய வந்தது.
அரசியல் பிரச்சாரம் செய்ய ஆயுதமாக மட்டுமே இங்கே சினிமா இருந்தது என்பது கசக்கும் உண்மை. ஆனால் இப்பவும் சினிமா அரசியல் ஆதாயங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எம்.ஆர் ராதா நாடக உலகில் சந்தித்த போராட்டங்கள்,குறும்புகள்,தவறுகள் எல்லாம் வெளிப்படையாக பேசப்பட்டுருக்கிறது.
எந்த ஒரு நடிகனும் சொல்லாத, சொல்ல தயங்குகிற,சொல்ல பயப்படுகிற ஒரு விஷயத்தை எம்.ஆர்.ராதா அவர்கள் இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்.அந்த விஷயம் நெஞ்சை பதபதக்க வைத்துவிட்டது.
சிவாஜி கணேஷனுக்கு எப்படி 'சிவாஜி' என்கிற பெயர் சூட்டப்பட்டது என்ப்தும்.அண்ணா,பெரியார் இருவருடனான நெருக்கம் எப்படி என்று பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது.
இந்த புத்தகத்தை படித்து முடித்தபின் ஒன்றே ஒன்று தான் தோன்றியது.
"இவரை போல் வெளிப்படையாக உண்மையை பேசக்கூடிய கலைஞனை பார்க்க முடியுமா என்பதே"
- அப்துல்
No comments:
Post a Comment