பனிப்போர் (Cold War) கிட்டதக்க இரண்டாம் உலகப் போர் முடிந்து 1947 முதல் பின்னர் 1990 வரை அமெரிக்காவுக்கும்சோவியத் யூனியனுக்கும் இடையில் யார் வலிமை வாய்ந்தவர்கள் என்கிற போட்டி இருந்து கொண்டு இருந்த காலம் அது. இந்தக் காலத்தில் இரண்டு வல்லரசு நாடுகளும் தமது இராணுவம், தொழில்நுட்பம், மற்றும் விண்வெளிதிட்டங்களை வளர்ச்சி செய்தனர். வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து இரண்டு நாடுகளும் உலகில் தனது செல்வாக்கத்தை மேம்படுத்தினார்கள். சோவியத் யூனியனின் நட்பு நாடுகள் கம்யூனிஸத்தை பயன்படுத்தினார்கள். அமெரிக்க அரசு கம்யூனிஸத்தை விரிவை தடை செய்ய பல முயற்சிகளை செய்தார்கள் இதனால் தென் கொரியா, தென் வியட்நாம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து சோவியத் யூனியனின் படையினர்களுடன் போர்களில் ஈடுபட்டனர்.
1980களின் இறுதியில் பனிப்போர் முடிவு வந்தது. அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் யூனியனின் எதிரான கொள்கைகளின் வலிமையை மேம்படுத்தினார். சோவியத் தலைவர் மிகேல் கோர்பசோவ் சோவியத் யூனியத்தின் கம்யூனிச கொள்கைகளை மாற்றினார். இதனால் 1991இல் சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்து பனிப்போர் முடிவடைந்தது.
இந்த படமும் பனிபோர் சமயத்தில் நடக்கும் ஒரு காதல் கதை தான். இந்த படத்தை Paweł Pawlikowski இயக்கியுள்ளார். போலாந்தில் ஒரு நாட்டுபுற இசை நிகழ்ச்சிக்காக Irena & நாயகன் Wiktor ஆடிஷன் நடத்துகிறார்கள். அங்கு நாயகி Zula கலந்துக் கொள்கிறாள் wiktor யின் கவனத்தை ஈர்க்கிறாள். இருவரும் காதல் வயப்பட்டு கலவியில் ஈடுபடுகிறார்கள்.இதற்கிடையில் Wiktor மற்றும் Irenaவை ரஷ்யா நாட்டின் தூதர்கள் கம்யூனிச கொள்கைகளையும் அதிபர் ஸ்டாலின்க்கு ஆதரவாக இசை நிகழ்ச்சிகளை நடத்துமாறு கட்டாய படுத்துகிறார்கள். அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள். Kaczmarek என்கிற அதிகாரி Zula வை Wiktor க்கு தெரியாமல் உளவு பார்க்குமாறு சொல்கிறார். அதற்கு அவள் மறுப்பு தெரிவிக்கிறாள். இருவரும் ஊரைவிட்டு செல்ல திட்டமிடுகிறார்கள். Wiktor ஊர் எல்லையில் Zula விற்காக காத்திருக்கிறான். Zula அங்கு வரவில்லை.
அதன்பின் சில வருடங்கள் கழித்து இருவரும் பாரிஸில் ஒரு jazz club யில் சந்திக்கிறார்கள். Wiktor கேட்கிறான் ஏன் அன்னைக்கு நீ வரவில்லை என்று? அதற்கு Zula தனக்கு வர தைரியம் எல்லை என்று கூறுகிறாள். ஆனாலும் இருவருக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது.
அதன்பின் ஒரு வருடம் கழித்து Wiktor இசை நிகழ்ச்சி நடத்த வருகிறார் அப்போது Audience ஆக Zula வருகிறாள். அப்போது இருவரும் எதர்ச்சியாக சந்திக்கிறார்கள். அதன்பின் இரண்டு வருடம் கழித்து மீண்டும் Wiktor Zula வை சந்திக்கிறார். அவளின் கலை எதிர்காலத்திற்காக Michael என்னும் அவரது நண்பரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். அதற்கு பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்,இறுதியில் திருமணம் செய்தார்களா இல்லையா? என்பதை படம் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
இது ஒரு Time period படம் என்று சொல்லலாம்.இந்த படம் ஒவ்வொரு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்டு திரைக்கதையாக அமைத்திருக்கிறார்கள். இந்த படம் Black and White யில் எடுத்திருக்கிறார்கள். பனிபோர் காலகட்டத்தில் நடந்த கதை என்பதால் ஒரு வேளை கருப்பு வெள்ளையில் எடுத்திருக்கலாம். இருவரின் காதல் அவர்களின் சண்டை, ஈகோ, மிஸ் அண்டர்ஸ்டாண்டிங், பாசம் ஆகியவை படத்தில் இருந்தது. இந்த படத்தின் இறுதி காட்சி ரொம்ப நல்ல இருக்கும். அது காட்சிபடுத்தபட்ட விதமும் சிறப்பு. இந்த படத்தின் ஒளிப்பதிவு வேற லெவல் நம்மை அந்த காலகட்டத்திற்கு பயணம் செய்ய வைக்கும். இந்த படத்தின் நாயகி Joanna Kulig நாயகன் Tomasz Kot இவர்கள் இருவரும் ரொம்ப நல்ல நடிச்சிருந்தாங்க. உலகளவில் இந்த படம் 33 விருதுகளை வென்றதுள்ளது. 98 Nominations க்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. Best Foreign Film, Best Director, Best Cinematography போன்ற 3 ஆஸ்கார் விருதுகளுக்கு Nominate செய்யபட்டுள்ளது. Best directorக்கான Cannes விருதை Paweł Pawlikowski வென்றார். European Award for best film அந்த விருதையும் இந்த படம் வென்றது. அதை தாண்டி நிறைய விருதுகளை வென்றிருக்கிறது.
கண்டிப்பா இந்த படத்தை மிஸ் பண்ணாம எல்லாரும் பாருங்க. ஒரு வித்தியாசமான காதல் அனுபவத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
-அரவிந்த்
BetVictor: Sign up at BetVictor and get up to £100 in Bet Credits
ReplyDeleteGet 군산 출장마사지 a BetVictor promo code and £100 matched 서산 출장마사지 deposit bonus. Sign 계룡 출장안마 up today and claim your welcome offer today and 영천 출장샵 claim 울산광역 출장마사지 your £100 deposit bonus.