Angry Indian Goddesses (2015 )
எந்த ஒரு முன் நோக்கமும் எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்தை பார்க்க தொடங்கினேன்.
ஒரு 30 நிமிடத்திலையே முடிவு செய்துவிட்டேன் இது ஒரு சிறந்த படம் என்று.
இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கின்றது ?
முதலில் இந்த படம் பெண்களுக்குள் இருக்கும் பல உணர்ச்சிகளை போலித்தனம் இல்லாமல் வெளிக்காட்டிய படம்.
இந்த படத்தில் 7 பெண் கதாப்பாத்திரங்கள் வருகிறது. அவர்களுக்குள் நடக்கும் பந்தம் தான் கதை.
நடித்த 7 பேருக்கும் கண்டிப்பாக விருது கொடுப்பதில் தப்பு இல்லை என்றே சொல்லுவேன். அப்படி ஒரு நடிப்பு.!!!
அதை விட படத்தை எடுத்த முறை உலகத்தரத்திற்கு நிகரானது.
படத்தில் பயன்படுத்திய வெளிச்ச அளவு என்னை பிரம்மிக்க வைத்தது.
படம் ஆரம்பமே ரனகலமாக தொடங்குகிறது ஆனால் அதே போல் தான் படம் முழுக்க இருக்கும் என்று நினைத்து பார்த்தால் இல்லை. படம் ரொம்ப சந்தோஷமாகவும் கொண்டாட்டமாகவும் செல்கிறது.
பெண்களுக்கான சமத்துவம்,உரிமை என்கிற பெயரில் பெண்களை மட்டமாக சித்தரித்து எடுக்கும் படங்களுக்கு நடுவில் பெண்களின் உண்மையான சாரத்தை காட்சிப்படுத்திய இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
இந்த படத்தில் 'பக்' என்கிற வார்த்தை வருகிறது,தண்ணீ அடிக்கிறார்கள்,செக்ஸ் பத்தி பேசுகிறார்கள் ஆனால் இதை எப்படி காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதே முக்கியம். பல படங்களில் ஆண்கள் கெட்ட வார்த்தை பேசினால் நானும் என் படத்தில் பேசுவேன்,ஆண்கள் செக்ஸ் பத்தி பேசினால் நானும் பேசுவேன் என்று சமத்துவத்திற்கும் போட்டி போடுவதற்கும் வித்தியாசம் தெரியாமல் பெண்களின் சந்தோஷத்தை சமத்துவத்தை படம் எடுக்க போகிறேன் என்று அசிங்கப்படுத்தியதே மிச்சம்.
இப்படி எடுக்கும் படங்களில் பெண்கள் பேசும் வார்த்தைகள் , செய்யும் விஷயங்கள் எல்லாம் பெண்கள் போலவே இருக்காது. ஆனால் Angry Indian Goddesses படத்தில் இதை எல்ல செய்தாலும் அது பெண்கள் செய்வது போல் உள்ளது,அதற்கான நியாயத்தையும் செய்திருக்கிறது.
படம் முழுக்க மிக கொண்டாட்டமாக இருந்தது.
ஆண்களை பற்றி பேசுவது,ஆண்களை குறை கூறுவது போன்ற எந்த ஒரு விஷயமும் படத்தில் இல்லை.
இது பெண்களுக்கான உலகம் !!
இது பெண்களை மைய்யமாக வைத்த படமா இருந்தாலும் ஆண்களை ரசிக்க வைத்ததே இதன் வெற்றி !!
இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.இந்திய படங்களில் இது முக்கியமான படம் !
இந்த படத்திற்கு என் மனதில் தனி இடம் உண்டு.!!
- அப்துல்
No comments:
Post a Comment