நான் உலக சினிமாக்களில் முக்கியமான ஆளுமையாக Michael Haneke அவர்களை பார்க்கின்றேன்.
வன்முறையை திணிப்பதும்,வன்முறையை செயற்கை படுத்துவதும்,வன்முறையை காட்சிப்படுத்தி பொய்யான உணர்சிகளை தூண்டுவதும் என்று பல இயக்குனர்கள் வன்முறையை வேடிக்கைப் பொருட்டாகவே உருவாக்கின்றனர்.
ஆனால் மைக்கல் ஹேனக் படத்தில் வரும் வன்முறை வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றது.
ஒரு படத்தில் வன்முறை நடக்க போகின்றது என்றால் அதற்கான குறியீடுகளை முன் காட்சிளையே கொடுத்துவிடுவார்கள்.
லாங் ஷாட்டில் இருந்து க்லோசப் கொண்டு வந்து கதாநாயகர்களின் முன் நிறுத்துவது அல்லது ஏதாவது பின்னணி இசையை கோர்த்து விடுவார்கள்.
ஆனால் மைக்கல் ஹேனக் படங்களில் அப்படி எந்த ஒரு முன் எச்சரிக்கையும் நம்மால் உணர முடியாது.
வன்முறை நம் வாழ்க்கையில் ஒரு பகுதி அது மனிதனின் இயல்பு என்று சொல்லி இருப்பார்.
புற சிக்கல்களையும் அக சிக்கல்களையும் ஒருங்கிணைத்திருப்பார்.
சில சொல்லப்படாத நம்மால் நம் மனதுடனே பேசிக்கொள்ள முடியாத சிக்கல்களை பேசுவதில் மைக்கல் ஹேனல் கை தேர்ந்தவர்.
இன்று பிறந்த நாள் காணும்(மார்ச் 23) மைக்கல் ஹேனக் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவரை பற்றி நான் விவரமாக பேசி வீடியோ செய்துள்ளேன்.
- அப்துல்
No comments:
Post a Comment