Missed Movies
Showing And Exploring The Love And Art of Cinema 📽
Monday, November 25, 2019
Monday, October 14, 2019
Uyare - refreshingly pogressive
security through a relationship. Her talents and virtues are enough.
She loved a toxic one but when someone good came along,
she wasn’t in the state to offer love.The movie respected her choice and let the
character breathe instead of shoving another relationship in the second half
and the movie makes us respect that
Friday, May 17, 2019
Boogie Nights - Golden Age Of Porn❤❤
John Holmes இவர் 1970 to 1980 களில் அமெரிக்கா Porn industry யில் முடிசூடா மன்னராக திகழ்ந்தார். இவர் கிட்டதக்க 559 Pornographic படங்களில் நடித்துள்ளார். இவரின் ஆண்குறிக்காகவே பலரும் இவருக்கு ரசிகராக இருந்தார்கள். அமெரிக்கா Porn Industryயில் மிக நீளமான ஆண்குறி உடையவர் John Holmes தான். கிட்டதக்க 16 inch (40cm) நீளம் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பல Pornographic படங்கள் மூலம் உலக புகழ் பெற்றிருந்தார். இவர் இருந்த அந்த காலகட்டம் தான் Golden Age of Porn என்று அழைக்கபட்டது.
வணிக ரீதியாக பல வெற்றிகளை Pornographic படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த காலம் அது. அதன்பின் Wonderland Murders களிலும் இவருக்கு தொடர்பு இருந்தது. பல நபர்களுடன் தகாத உறவுயில் ஈடுபட்ட காரணத்தினால் இவருக்கு AIDS நோய் பரவியது. 1988 ஆம் ஆண்டு தனது கடைசி காலத்தில் AIDS நோய் பாதிப்புக்குள்ளாகி இறந்துப்போனார். இவரின் வாழ்க்கை வரலாற்றை Wonderland மற்றும் Boogie Nights படங்கள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இப்போ நாம் Boogie Nights பற்றி பார்க்கலாம்.
John Holmes இவரின் Biopic தான் இந்த Boogie Nights. இந்த படம் 1997 ஆம் ஆண்டு Paul Thomas Anderson அவர்களால் எழுதி இயக்கபட்டது. இந்த படம் இவர் எடுத்த Mockumentary யான Dirk Diggler Story(1988) விரிவாக்கமே இந்த திரைப்படம். முதலில் இந்த படத்தில் Leonardo DiCaprio நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் Anderson. ஆனால் அந்த சமயத்தில் அவர் Titanic படத்தில் நடித்துக்கொண்டிருந்த காரணத்தினால் அவர் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.
அதன்பின் Joaquin Phoenix யும் Porn starயின் கதை போன்ற காரணத்தில் இந்த படத்தில் நடிக்க அவரும் மறுத்துவிட்டார். அதற்கு பிறகு Mark Walberg இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். Anderson யின் முதல் படமான Hard Eight பல கஷ்டங்களை கடந்து தான் வெளிவந்தது. அடுத்த படமான Boogie Nightsயும் பல கஷ்டங்களை கடந்து படத்தை 3 மணி நேரம் எடுப்பதாக இருந்தார். ஆனால் தயாரிப்பாளரின் தலையீட்டால் இந்த படம் 20 நிமிடங்கள் குறைந்து 2 மணி நேரம் 37 நிமிடங்களாக எடுக்கபட்டது. சரி நாம படத்துக்குள்ள போவோம்.
1977ஆம் ஆண்டு Eddie (Mark walberg) என்கிற இளைஞன் தனது பள்ளி கல்வியை துறந்து ஒரு Night Club யில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அந்த Night club யிற்கு Jack என்கிற Porn Film Maker வருகிறார். அவர் அங்கு வேலை செய்துக்கொண்டிருக்கும் Eddie யை சந்தித்து பேசுகிறார். தன்னுடைய படங்களில் நடிக்குமாறு Eddie யிடம் Jack கூறுகிறார். Eddie அதை பெருசா பொருட்படுத்தாமல் கடந்து செல்கிறான். அதன்பின் Eddie தனது தாயிடம் சண்டையிட்டு வெளியே செல்கிறான். அவன் Jack யை சந்திக்கிறான். Eddie யிற்கு எப்பொழுதும் ஒரு கர்வம் உண்டு. பெரிய ஆண்குறி இருப்பதால் நான் தான் உயர்ந்தவன். நான் ஒரு பெரிய ஆள் அப்படிங்குற ஒரு எண்ணம் எப்போதும் இருந்துக்கொண்டே இருந்தது.
Jack யுடன் இணைந்து பல Porn படங்களில் நடிக்க தொடங்கினான். Eddie தனது பெயரை Dirk Diggler என்று பெயரை மாற்றிக்கொண்டார். எல்லோரையும் அவ்வாறு அழைக்க சொன்னார்.அவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பெரிய ஸ்டார் ஆக திகழ்ந்தார். பல விருதுகளை வென்றுக் குவித்தார். இவருடைய ஆண்குறிக்கு அவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. அதன் பின் Dirk Diggler போதை பழக்கத்தில் ஈடுபட்டார். கடுமையான போதை பழக்கத்தில் ஈடுபட்ட காரணத்தினால் அவரின் ஆண்குறியின் விறைப்பு தன்மை குறைந்தது. அந்த காரணத்தினால் அவரால் நன்றாக நடிக்க முடியவில்லை. இதனால் Jack மற்றொரு நபரை தனது படத்திற்கு தேர்ந்து எடுக்கிறார். இதனால் Jack மற்றும் Dirk Diggler க்கு சண்டை வருகிறது. அங்கு இருந்து வெளியே வருகிறார் Dirk Diggler. தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்துக்காக பல தப்புக்களை செய்கிறார். கொலையும் செய்கிறார். அதன்பின் அவர் வாழ்க்கை என்ன ஆனது? அவர் ஜெயித்தாரா? இல்ல தோற்றாரா? என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
Paul Thomas Anderson இவர் படங்களில் நடிக்கும் அனைவரும் நடிப்பில் பின்னி பெடல் எடுப்பார்கள். அந்த அளவிற்கு தனது முழு அர்பணிப்பை வெளிப்படுத்துவார்கள். இந்த படத்திலும் அதே மாதிரி தான். எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். குறிப்பாக Dirk Diggler ஆக நடித்த Mark Walberg அந்த கேரக்டராக மாறிவிட்டார் என்று சொல்லலாம். Paul Thomas Anderson யின் பலமே அவரின் திரைக்கதை தான். இந்த படத்தில் திரைக்கதை மிக அருமையாக இருந்தது. எங்கையும் தோய்வு ஏற்படாமல் நம்மை பயணிக்க வைக்கும்.
இந்த படத்தில் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. இந்த படத்தில் இசை நம்மை இந்த படத்தோடு சேர்ந்து கட்டிப்போட வைக்கும். இந்த படம் பல விருதுகளை வென்றுள்ளது. 55th Golden Awards, 2nd Golden Satellite Awards, British Independent Film Awards
போன்ற பல விருதுகளை வென்றுள்ளது. 70ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுகளில் Best Supporting actor, Best Supporting Actress, Best Original Screen Play போன்றவற்றிக்கு Nominate செய்யபட்டது. கண்டிப்பாக எல்லோரும் Paul Thomas Anderson படங்களை பாருங்கள். குறிப்பாக சினிமாவில் நடிகராக முயற்சி செய்யும் நண்பர்கள் நிச்சயம் பாருங்கள். இவரின் படங்களில் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.
Wednesday, May 8, 2019
The guilty(2018)-குற்றம் செய்யாத குற்றவாளி
உலக சினிமா எனக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பு படம் எடுக்க பல கதாபாத்திரங்கள், பல கோடி பட்ஜெட் வேண்டும் என்ற மூடநம்பிக்கைகள் என்னை சூழ்ந்திருந்தது. அப்படிப்பட்ட என் மூடநம்பிக்கையை உடைத்து ஒரு திரைப்படம் எடுக்க கதை கூட தேவையில்லை அதை கொண்டு செல்ல நல்ல கலை நயம் கொண்டு இருந்தால் போதும் என்று உரைக்க வைத்த படங்களில் காஸ்பர் நோவின் “க்லைமேக்ஸ்”படத்திற்கு பிறகு இந்த படமும் ஒன்று.
இது ஒரு டேனிஷ் திரில்லர் திரைப்படம் “குஸ்டாவ் மோல்லரால்”எழுதப்பட்டு இயக்கப்பட்டது. இது 2018 சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் டிராமாடிக் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டது. மக்கொலியா பிக்சர்ஸ் மூலம் யு.எஸ். இல் இந்த படம் விநியோகிக்கப்பட்டது. 91 வது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான பட்டியலில் இடம்பெற்றது.மேலும் இந்த படத்தை ஹாலிவுடில் “ஜாகே கிலென்ஹால்” வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளது.
அஸ்கர் ஹோல்ம் கோபன்ஹேகனில் ஒழுங்குமுறை பிரிவுக்கு உட்பட்ட ஒரு காவல் அதிகாரி.தனக்கு வரும் கடத்தப்பட்ட பெண்ணின் ஒரு அவசர அழைப்பு திடீரென்று துண்டிக்கப்பட்டவுடன், அந்த பெண் மற்றும் அவளது கடத்தல்காரனை பற்றி அவரது ஒரே கருவியாக ஃபோன் மூலம் தேடுதல் தொடங்குகிறது.ஆபத்தான பெண்ணை காப்பாற்றுவதற்கு எதிராக ஒரு போட்டியில் நுழைகிறார். ஆனால் அவர் முதலில் நினைத்ததைவிட மிகக் பெரிய ஒரு குற்றத்தை அவர் கையாளுகிறார் என்பதை விரைவில் உணர்ந்துகொள்கிறார்.அதன் பின் என்ன ஆனது என்பதே கதை.
ஹோல்மினின் முன் கதையில் தன்னை அறியாமல் ஒருவனை சுட்டுக்கொன்றதுக்காக
குற்ற உணர்ச்சியுடன் இருப்பான்.அந்த குற்ற உணர்ச்சி தான் ஐபனுக்கு மைக்கேல் முலம் எந்த குற்றமும் நடக்கவிடக்கூடாது என்ற அவளை காப்பாற்ற தூண்டும்.ஆனால் படத்தின் இறுதியில் தான் எதிர்பார்திராத ஐபனின் தவறுக்கு ஒரு வகையில் தானும் உதவியதாக தோன்றும் குற்ற உணர்ச்சி மிண்டும் அவனை சூழ்ந்து விடும்.படம் முழுவதும் ஒரு வகை குற்ற உணர்ச்சியுடன் தான் ஹோல்ம் பயணிப்பான்.அதனாலே படத்தின் தலைப்பு “the guilty” என்று அமைந்தது போலும்.
படத்தில் இரு பகுதிகள் உள்ளன ஒன்று நாம் காணும் திரைக்கதை மற்றொன்று நம் கற்பனையில் ஓடும் திரைக்கதை.ஆம் படத்தில் நடித்திருப்பதோ ஒருவன்தான் ஆனால் மீதம் வரும் கதாபாத்திரங்களின் சப்பதங்களை கொண்டு அந்த கதாப்பாத்திரங்களை அவர்களின் செயல்களையும் நம் எண்ணத்தில் புத்திசாலித்தனமாக விதைத்திருப்பார் குஸ்டாவ் மோல்லர். அஸ்கர் ஹோல்மாக வரும் “ஜாகோப் செடர்கெனின் “நடிப்பு நமக்கு பதடத்தின் உச்சிகே வழி காட்டும்.
படத்தில் என்னை மிக கவர்ந்தது படத்தின் ஒலி வடிவமைப்பே மிக துல்லியமாக இருக்கும்.
என்னதான் ஹோல்ம் தன் வேலையை தன் தனிப்பட்ட பிரச்சனைக்காக பயன்படுத்தி ஐபனுக்கு உதவி செய்தாலும். நிஜ வாழ்க்கையில் ஒழுங்குமுறை பிரிவில் வேலை செய்பவருக்கு இத்தனை சுதந்திரம் சாத்தியமா?? என்பது கேள்வி குறியே.அது மட்டும் தான் எனக்கு படத்தின் குறையாக தென்பட்டது.இருந்தாலும் படத்தை இது பெரிதாக பாதிக்கவில்லை.
இயக்குனர் ஆக விரும்பும் அனைவரும் இந்த படத்தில் இருந்து திரைக்கதை,ஒலி வடிவமைப்பு, நடிகனின் நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று நிறைய கற்றுக்கொள்ளாம்.அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது.
-கார்த்திக் ரெங்கசாமி
Monday, May 6, 2019
மார்லன் பிரண்டோ- “தி காட்பாதர்”
சுய சரிதம் புத்தகங்களின் மேல் எனக்கு தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கிறது.அது ஏன் என்று என்னால் அறிய முடியவில்லை.சமிபமாக நடந்த சென்னை புத்தக கண்ணாட்சியில் என் கண்களில் தென்பட்டது தான் “மார்லன பிரண்டோ” புத்தகம்.அது அவரின் சுய சரிதம் பற்றிய ஆங்கில புத்தகங்களின் தமிழாக்கம் ஆகும்.அதை எழுதியவர் அஜயன் பாலா.
பிராண்டோவை எனக்கு அறிமுகம் படுத்தியது “காட்பாதர்” படம் தான். இன்று வரை அவரின் வேறு எந்த படங்களையும் நான் பார்த்ததில்லை.காட்பாதர் படத்தில் அவர் நடிப்பும் அதில் அவருக் கிடைத்த அகாடமி விருதை அமெரிக்க பூர்வகுடி இந்திய பெண்னை வாங்க வைத்த நிகழ்வு மற்றுமே அறிந்திருந்தேன் . அவரின் காட்பாதர் படத்தின் நடிப்பு தான் என்னை இந்த புத்தகத்தை வாங்க தூன்டியது.
இந்த புத்தகம் அவரின் இளமை காலங்களில் வாழ்ந்த ஒமேகா தொடங்கி அவரின் முதுமை காலங்களில் வாழ்ந்த தன் சொந்த தீவான டெட்டி ஓரா வரை அவரின் வாழ்க்கை பயணத்தை சுமந்து செல்கிறது.தன் வாழ்க்கையில் ஆரம்பத்திலேயே பாசத்துக்கா ஏங்கும் சிறு குழ்ந்தையாக தொடங்கிறார்.அவரின் தாயின் அரவனைப்பிக் ஏங்கும் வரிகள் எனக்கும் சற்று ஏக்கத்தை தந்தது.
தன் சிறு வயதிலும் இளம் பருவத்திலும் அவர் செய்த குறும்புகள் என்னை சிரிப்பில் ஆழ்தியது.அவர் மக்கள் தன்னை நட்சத்திர மாக ஏற்று கொண்ட தருணத்தை அவர் விழக்கிய போது அவர் நட்சத்திரமாக உணரும் அவரின் உண்ர்சிகள் பிரதிபலித்தது.தன் தாயின் பிரிவை விவரித்த வரிகள் என் கண்களை பதம் பார்த்தது.
45 அத்தியாயம் கொண்ட இந்த புத்தகத்தில் நான் அதிகம் வாசித்தது பல பெண்கள் பெயர்களும் அவர்களுடன் இவர் கொண்ட புண்ர்ச்சி பற்றியும் தான். அது மட்டும் இன்றி 34 மற்றும் 35 அத்தியாயத்தில் தனியாக அவர் கடந்து வந்த பெண்களை பற்றியும் அவர்களுடன் நடந்த நிகழ்வுகளை பற்றி எழுதியுள்ளார் என்றால் பாருங்கள் எத்தனை பெண்கள் என்று.24 வயதின் நான் சக ஆண்கள் கண்ட பெண்களை விட அதிக பெண்களை கடந்து வந்துள்ளேன் என்று கர்வதுடன் சொல்கிறார்.அதனை படிக்கும் போது பிராண்டோ மீது எனக்கு பொறாமை பொங்கி வழிந்தது.(கன்னி பசங்க சாபம் உன்னை சும்மா விடாது என்று எனக்குளே கூரி கொண்டேன்)
ஒரு நடிகனின் மன ஓட்டம்,அவனின் சிரமங்கள், ஒரு இயக்குனர் நடிகனை எப்படி நடத்த வேண்டும், எப்படி நடத்தினால் நடிகனிடம் இயல்பான நடிப்பை வெளி கொண்டு வறலாம் என்று சில வற்றை நான் கற்று கொண்டேன். மோலும் வளரும் நடிகர்களுக்கு கடினமான இயக்குனர்கள், அரைகுறை இயக்குனர்களிடம் இருந்த தப்பிக் சில வழிகளும் சொல்லிருக்கிறார். அது சற்று சிரிப்பாக இருந்தாலும் அதை அவர் பயன் படுத்தி தப்பித்த இருக்கிறார் என்பதே உண்மை.
தன்னை நடிகனாக மட்டும் நிருத்தி கொள்ளாமல்,சமுக அக்கரை கொண்டு பூர்வகுடி இந்தியர்களுக்காக போராடவும் செய்துள்ளார்.அதற்கு அவர் செய்த நிகழ்வுகளை படிக்கும் பொழுது பிராண்டோ மீது எனக்கு மிக பெரிய மரியாதை தோன்றியது.புத்தகத்தின் அரம்பத்தில் இருக்கும் பிராண்டோவிற்கும் இறுதியில் இருக்கும் பிராண்டோவிற்கும் இருக்கு முதிர்ச்சி வேறுபாடு அவரின் எழுத்துகளில் தெரிந்தது.
பேரும்பாலும் அமேரிக்கா பற்றியும் அமேரிக்காவின் அரசியல் பற்றி மிக வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஹாலிவுட் படங்கள் வணிகத்தை குறி வைத்தான் எடுக்கப்படுகிறது என்ற உண்மையை ஒரு ஹாலிவுட் நடிகனாக எழுதியது எனக்கு ஆச்சரியத்தை தந்தது.
என்னதான் பணம் நமக்கு மகிழ்ச்சி தந்தாலும்,சக மனிதனிடம் இருந்து கிடைக்கும் பாசம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை என்ற உண்மையை தன் இறுதி காலங்களில் பிராண்டோ உணர்ந்ததை நம்மாலும் உணர முடிகிறது.
இந்த புத்தகம் கிடைத்தால் வாங்கி படியுங்கள். முக்கியமாக நடிகனாக விரும்பு அனைவரும் படிக்கவும் சில டிப்ஸ் கிடைக்கும்.
-கார்த்திக் ரெங்கசாமி
Wednesday, May 1, 2019
நெடுநல்வாடை - A Crowd Funding Film.
திரள்நிதி திரட்டல் (crowdfunding) என்பது பலர் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக நிதிப் பங்களிப்புச் செய்து நிதியளிப்பது ஆகும். crowdfunding என்பதை முதன் முதலாக, மைக்கேல் சுலைவன் என்பவரின் மூலம் பயன்படுத்தபட்டது. கன்னட திரைப்படமான லூசியா Crowdfunding மூலம் எடுக்கப்பட்டது. தற்போது கூட Madras Central கோபியும் சுதாகரும் 8 கோடி நிதி கேட்டு Crowd funding மூலம் படம் எடுக்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். Crowd funding பற்றி முழுவதுமாக தெரிந்துக்கொள்ள Missed Movies வெளியீட்டில் அப்துல்ரகுமான் எழுதிய Independent Cinema புத்தகத்தில் "மக்கள் திரட்டும் சினிமா"என்னும் தலைப்பில் முழுவதுமாக விவாதிக்கபட்டுள்ளது.
நெடுநல்வாடை இந்த படத்தில் பூ ராமு, Mime கோபி, எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செல்வகண்ணன் இந்த படத்தை எழுதி இயக்கிருக்கிறார்.
வைரமுத்து இந்த படத்திற்கு பாடல்களை எழுதிருக்கிறார்.
நெடுநல்வாடை இந்த படமும் Crowdfunding மூலமாக தான் படத்தை எடுத்திருக்கிறார் செல்வகண்ணன். திருநெல்வேலி மாவட்டம் செல்வகண்ணன் அவரது சொந்த ஊரு. அங்கு இருக்கும் சங்கர் பால்டெக்னிக் காலேஜில் தான் படித்தார். அதன்பின் சினிமா மேல் உள்ள ஆர்வத்தினால் சென்னை வந்து காந்தி கிருஷ்ணா, ராஜேஷ் செல்வா போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன்பின் சொந்தமாக படம் பண்ணலாம் என்று எல்லா Production ஆபீஸ் கதவுகளை தட்டினார். பெரிதாக பலன் கிடைக்கவில்லை. அதன்பின் அவருக்கு ஒரு யோசனை வந்தது. நாமே Independent ஒரு படம் பண்ணலான்னு. அப்போது அவர் தனது College யில் படித்த நண்பர்களிடம் இந்த விஷயத்தை கூறினார். நம்ம எல்லாரும் பணம் போட்டு Crowdfunding முறையில் படம் பண்ணலாம். வருகின்ற லாபத்தை எல்லாருக்கும் சமமாக பிரித்து கொடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.அவரது நண்பர்கள் அனைவரும் நல்ல நிலைமையில் இருந்தார்கள். இவரது விருப்பத்திற்கு உடனே சம்மதம் தெரிவித்தார்கள். 50 பேரு கூடிய ஒரு WhatsApp குழுவை ஆராம்பித்தார். அதன்பின் இந்த படம் வெற்றிகரமாக உருவாகியது. சரி நம்ம படத்துக்குள்ள போவோம்.
செல்லையா (பூ ராமு) ஒரு கரும்பு விவசாயியாக நெல்லை மாவட்டத்தில் உள்ள உட்கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். தன் குடும்பத்தார் மேல் ரொம்ப பாசமாய் இருக்கிறார். இவருக்கு கொம்பையா(Mime Gopi) என்னும் மகனும், பேச்சியம்மாள் என்னும் மகளும் இருக்கின்றனர். பேச்சியம்மாள் தான் காதலித்த நபருடன் ஊரைவிட்டு சென்றுவிடுகிறாள். சில வருடங்கள் கழித்து அவள் காதல் திருமணம் செய்த அவள் கணவன் ஒரு குடிகாரன் மற்றும் தனது குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறான். பேச்சியம்மாள் அவனை விட்டு தன் மகன் இளங்கோ, மகளுடன் தனது அப்பா வீட்டிற்கு வருகிறாள். இதற்கு அவளது அண்ணன் கொம்பையா எதிர்ப்பு தெரிவித்து சண்டை போடுகிறான். பின் செல்லையா அவனை தடுத்து தனது வீட்டில் தங்க வைக்கிறார். செல்லையா தனது மகள் நினைத்து ரொம்ப கவலைபடுகிறார். எப்படியாவது தன் பேரன் பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல இருக்கனும் என்று நாயகன் இளங்கோவை படிக்க வைக்கிறார். அவன் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் அந்த காலகட்டத்தில் தனது கிராமத்தில் இருக்கும் அமுதா என்னும் பெண்ணை காதலிக்கிறார் இளங்கோ. இருவரும் உயிர்க்கு உயிராக நேசிக்கிறார்கள். இந்த விஷயம் தாத்தா செல்லையா விற்கு தெரிய வருகிறது. இளங்கோவிற்கு தாத்தா செல்லையா அறிவுரை கூறுகிறார். படிச்சு முடிச்சு ஒரு நல்ல வேலைக்கு போனதுக்கு அப்புறம் திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார்.
இளங்கோவிற்கும் Campus interview யில் கிடைத்த வேலை ஒரு நூலிழையில் தவறுகிறது. அதன்பின் என்ன செய்வது என்று தெரியாமல் சென்னையில் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார். இதற்கிடையில் இவர்களது காதல் விஷயம் அமுதா வீட்டிற்கு தெரியவருகிறது. வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். இதை அறிந்த இளங்கோ தனது தாத்தா செல்லையா விடம் இதை கூறுகிறார். தாத்தா செல்லையாவோ அமுதாவின் அண்ணனிடம் வந்து பொண்ணு கேட்கிறார். அதற்கு அவன் இளங்கோவிற்கு ஒழுங்கான வருமானம் இல்லை என்று காரணம் காட்டி இதை நிராகரிக்கிறார். அதன்பின் தாத்தா செல்லையா இளங்கோவிற்கு வெளிநாட்டில் வேலைக்கு ஏற்பாடு செய்கிறார். ஆனால் இளங்கோவோ அமுதாவை ஊரைவிட்டு போய் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கிறார்கள். அதன் பின் இளங்கோ அமுதாவை திருமணம் செய்தானா? இல்லை தனது குடும்பத்திற்காக தனது காதலை தியாகம் செய்தானா? தனது தாத்தாவின் பேச்சை கேட்டு மனதை மாற்றிக்கொண்டானா? என்பதை படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.
இந்த படத்தில் நடிச்ச எல்லோரும் ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க. குறிப்பாக பூ ராமு செல்லையாவாகவே வாழ்ந்திருக்கிறார். அந்த அளவிற்கு தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்திருப்பார். Mime Gopi இந்த படத்தில் Mime Gopi ஆகா தெரியாமல் கொம்பையாவாக தெரிந்தார். அமுதாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ரொம்ப நல்ல நடிச்சிருந்தாரு. இந்த படத்தில் ஒளிப்பதிவு, பின்னணி இசையெல்லாம் வேற லெவல். அந்த அளவிற்கு ரொம்ப அருமையா இருந்துச்சு. திருநெல்வேலி மாவட்டத்தின் வாழ்வியல்,கிராமத்து மண் வாசனையை ரொம்ப அழகாய் காமிச்சிருப்பாங்க. திருநெல்வேலி என்னோட சொந்த ஊர் என்பதால் எனக்கு இந்த படம் நெருக்கமான ஒரு உணர்வை கொடுத்தது. நல்ல அனுபவித்து பார்த்தேன் கூட சொல்லலாம். படத்தில் பெருசா எந்த கதையும் இருக்காது. எல்லாம் நமக்கு தெரிஞ்ச கதை தான். ஆனா அதற்கு வடிவமைத்த திரைக்கதை தான் இந்த படத்திற்கு ப்ளஸ். குறிப்பாக Independent ஆகா படம் பண்ண போறவங்க, தனது முதல் படம் எடுக்கபோறவங்க நிச்சயம் இந்த படத்தை பாருங்க. இந்த படத்தில் செலவை குறைப்பதற்காக பூ ராமு, Mime Gopi தவிர மற்றவர்கள் எல்லாரும் புது முகங்கள் தான். கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியதால் படத்திற்கு அந்த அளவுக்கு பெருசா செலவு ஆகியிருக்காது. இந்த படத்தை எல்லாரும் மிஸ் பண்ணாம பாருங்க. உங்களுடைய சொந்த ஊருக்கே இந்த படம் அழைத்து செல்லும்.
- அரவிந்த்
Wednesday, April 24, 2019
Captain fantastic - எந்திர வாழ்க்கை
Captain fantastic(2016)-into the wild
இன்று நம் வாழும் எந்திர வாழ்க்கை என்பது யாரே கட்டமைத்த ஒன்று. அப்படிபட்ட வாழ்க்கையை வேறுத்து மீண்டும் பழங்கால மனித வாழ்வை வாழ நினைக்கும் குடும்பத்தைப் பற்றியும் அவர்கள் கடக்கும் நிகழ்வுகளை பற்றி படம் தான் captain fantastic.
இதை இயக்கியவர் நடிகரும் இயக்குனருமான மாட் ரோஸின்.அவர் மற்றும் அவரது மனைவி பெற்றோராக இருக்க தொடங்கியபோது, மாட் ரோஸின் திரைப்படத்தின் யோசனை தொடங்கியது. அங்கு இருந்து அவர் தனது குழந்தைகள் வாழ்வில் நவீன தொழில்நுட்பம் முற்றிலும் இல்லாமல் இருந்திருந்தால் என்ன நடக்கும் என்று ஆச்சரியப்பட்டார்.மேலும் தனது சொந்த வாழ்க்கையிலிருந்து சில பதிவுகளை எடுத்துக் கதையாகி உள்ளார்.
இந்த திரைப்படம் சண்டேன்ஸ் திரைப்பட விழாவிலும் ,கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.இது கோல்டன் குளோப், கோல்ஃப் குளோப், BAFTA விருது மற்றும் சிறந்த நடிகருக்கான அகாடெமி விருது ஆகியவற்றிற்காக பரிந்துரைக்கப்பட்டது.
பென் காஷ் அவரது மனைவி லெஸ்லி மற்றும் அவர்களது ஆறு குழந்தைகள் வாஷிங்டன் வனப்பகுதியில் வாழ்கின்றனர். பென் மற்றும் லெஸ்லி ஆகியோர் முன்னாள் அராஜகவாத அமைப்பில் செயற்பாட்டாளர்கள் இருந்தவர்கள். அமெரிக்கவின் முதலாளித்துவதிலும் வாழ்வியல் மீதும் ஏமாற்றமடைந்த இவர்கள் தன் குழத்தைகளுக்கு உயிர்வாழ்வியல் திறன்,அரசியல், மற்றும் தங்களது குழந்தைகளின் தத்துவம் ஆகியவற்றைத் தூண்டுவதற்குப் பயிற்சி செய்கின்றனர்.
அவர்களை விமர்சன ரீதியாக சிந்திக்கவும், சுய-சார்ந்து வாழவும் , உடல் ரீதியாகவும் வலிமையாக இருக்கவும், தொழில்நுட்பம் இல்லாமல் அவர்களுக்கு வழிநடத்தவும், இயற்கையுடன் இணைந்த வாழவும் பயிற்சி தருகிறன.
பல நாட்களாக லெஸ்லி பைபோலார் கோளாறுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இறுதியில் தற்கொலை செய்து இறந்து போகிறார்.லெஸ்லியின் தந்தை ஜாக் லெஸ்லியை தன் குடும்ப பாரம்பரிய மரபு வழியில் அடக்கம் செய்ய திட்டமிட்டுகிரார்.ஆனால் லெஸ்லி விருப்பம் தன் உடலை தகனம் செய்வதே என்று பென் அறிவார். இருவரும் தொலைபேசியில் வாதிடுகின்றனர்.
பென் இறுதிச் சடங்கில் பங்குபெற்றால் கைது செய்யப்படுவதாக ஜாக் அச்சுறுத்துகிறார். பென்னும் அவரின் ஆறு குழந்தைகளும் லெஸ்லியின் இறுதி சடங்கிற்கு வந்தார்கள் இல்லையா என்பதே கதை.
குழந்தைகளாக வரும் ஆறு குழந்தை நடிகர்களின் நடிப்பில் குழந்தைகளுகே உரிய யதார்த்தம்,ஆர்வம்,குறும்புத்தனம் என்று அனைத்து நம்மால் பார்க்க முடியும். சிறந்த தந்தையாக இருக்கும் போதும் சரி தன் தந்தை கடமையில் தவறு செய்துவிட்டோமோ என்று வருந்தும் தந்தையாகவும் சரி தன் நடிப்பால் நம்மை கவரவும் கலங்கவும் செய்துள்ளார் Viggo Mortensen.
இந்த படத்தின மூலம் நம் எந்திர வாழ்வின் மீது நமக்கு சிறு கசப்பும்,பல கேள்விகளும் உறுவாகும்.படத்தை பார்த்து முடித்த பிறகு மனதில் ஒரு அமைதியை
உணர்ந்தேன்.நிங்களும் அந்த அமைதியை பேற தவறாமல் இப்படத்தை பார்க்கவும்.
-கார்த்திக் ரெங்கசாமி
PARIYERUM PERUMAL - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...
-
சுய சரிதம் புத்தகங்களின் மேல் எனக்கு தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கிறது.அது ஏன் என்று என்னால் அறிய முடியவில்லை.சமிபமாக நடந்த சென்னை புத்தக கண்ணாட்...
-
மலையாள திரையுலகில் எனக்கு நிறைய நடிகர்களை பிடிக்கும். அதில் பெரிதும் என்னை ஈர்த்தவர் யார் என்றால் அது ஃபகத் பாசில் தான். இவர் படத்தில் இவர்...
-
இயக்குனர் நவீன் அவர்களை பார்க்க மதியம் 3.30 மணிக்கு சென்று அவர் அலுவலகத்தில் கார்த்திருந்தோம். அவர் சரியா 4.45 மணிக்கு வந்தார். வந்த உடனே க...