Wednesday, April 24, 2019

Captain fantastic - எந்திர வாழ்க்கை

Captain fantastic(2016)-into the wild


இன்று நம் வாழும் எந்திர வாழ்க்கை என்பது யாரே கட்டமைத்த ஒன்று. அப்படிபட்ட வாழ்க்கையை வேறுத்து மீண்டும் பழங்கால மனித வாழ்வை வாழ நினைக்கும் குடும்பத்தைப் பற்றியும் அவர்கள் கடக்கும் நிகழ்வுகளை பற்றி படம் தான் captain fantastic.


இதை இயக்கியவர் நடிகரும் இயக்குனருமான மாட் ரோஸின்.அவர் மற்றும் அவரது மனைவி பெற்றோராக இருக்க தொடங்கியபோது, ​​மாட் ரோஸின் திரைப்படத்தின் யோசனை தொடங்கியது.  அங்கு இருந்து அவர் தனது குழந்தைகள் வாழ்வில் நவீன தொழில்நுட்பம் முற்றிலும் இல்லாமல் இருந்திருந்தால் என்ன நடக்கும் என்று ஆச்சரியப்பட்டார்.மேலும் தனது சொந்த வாழ்க்கையிலிருந்து சில பதிவுகளை எடுத்துக் கதையாகி உள்ளார்.


இந்த திரைப்படம் சண்டேன்ஸ் திரைப்பட விழாவிலும் ,கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.இது கோல்டன் குளோப், கோல்ஃப் குளோப், BAFTA விருது மற்றும் சிறந்த நடிகருக்கான அகாடெமி விருது ஆகியவற்றிற்காக பரிந்துரைக்கப்பட்டது.


பென் காஷ் அவரது மனைவி லெஸ்லி மற்றும் அவர்களது ஆறு குழந்தைகள் வாஷிங்டன் வனப்பகுதியில் வாழ்கின்றனர்.  பென் மற்றும் லெஸ்லி ஆகியோர் முன்னாள் அராஜகவாத அமைப்பில் செயற்பாட்டாளர்கள் இருந்தவர்கள். அமெரிக்கவின் முதலாளித்துவதிலும் வாழ்வியல் மீதும் ஏமாற்றமடைந்த இவர்கள் தன் குழத்தைகளுக்கு உயிர்வாழ்வியல் திறன்,அரசியல், மற்றும் தங்களது குழந்தைகளின் தத்துவம் ஆகியவற்றைத் தூண்டுவதற்குப் பயிற்சி செய்கின்றனர்.


அவர்களை விமர்சன ரீதியாக சிந்திக்கவும், சுய-சார்ந்து வாழவும் , உடல் ரீதியாகவும் வலிமையாக இருக்கவும்,  தொழில்நுட்பம் இல்லாமல் அவர்களுக்கு வழிநடத்தவும், இயற்கையுடன் இணைந்த வாழவும் பயிற்சி தருகிறன.


பல நாட்களாக லெஸ்லி பைபோலார் கோளாறுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இறுதியில் தற்கொலை செய்து இறந்து போகிறார்.லெஸ்லியின் தந்தை ஜாக் லெஸ்லியை தன் குடும்ப பாரம்பரிய மரபு வழியில் அடக்கம் செய்ய திட்டமிட்டுகிரார்.ஆனால் லெஸ்லி விருப்பம் தன் உடலை தகனம் செய்வதே என்று பென் அறிவார். இருவரும் தொலைபேசியில் வாதிடுகின்றனர்.


பென் இறுதிச் சடங்கில் பங்குபெற்றால்  கைது செய்யப்படுவதாக ஜாக் அச்சுறுத்துகிறார். பென்னும் அவரின் ஆறு குழந்தைகளும் லெஸ்லியின் இறுதி சடங்கிற்கு வந்தார்கள் இல்லையா என்பதே கதை.


குழந்தைகளாக வரும் ஆறு குழந்தை நடிகர்களின் நடிப்பில் குழந்தைகளுகே உரிய யதார்த்தம்,ஆர்வம்,குறும்புத்தனம் என்று அனைத்து நம்மால் பார்க்க முடியும். சிறந்த தந்தையாக இருக்கும் போதும் சரி தன் தந்தை கடமையில் தவறு செய்துவிட்டோமோ என்று வருந்தும் தந்தையாகவும் சரி தன் நடிப்பால் நம்மை கவரவும் கலங்கவும் செய்துள்ளார் Viggo Mortensen.


இந்த படத்தின மூலம் நம் எந்திர வாழ்வின் மீது நமக்கு சிறு கசப்பும்,பல கேள்விகளும் உறுவாகும்.படத்தை பார்த்து முடித்த பிறகு மனதில் ஒரு அமைதியை

உணர்ந்தேன்.நிங்களும் அந்த அமைதியை பேற தவறாமல் இப்படத்தை பார்க்கவும்.


-கார்த்திக் ரெங்கசாமி

Monday, April 22, 2019

Bandit Queen - பூலான் தேவி


இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் இன்னமும் அதிகமாக அரங்கேற்றிக் கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக உயர் சாதி குடிமக்கள் தன் கீழ் சாதி மக்களுக்கு நடத்தும் வன்முறை ஆட்டங்கள் ஏராளம். பூலான் தேவி இந்த பெயரை எங்கோ கடந்த காலங்களில் கொள்ளைக்காரி என்ற பட்டத்துடன் இந்த பெயர் கேள்விப்பட்டிருப்போம். அவள் பிறக்கும் போதே கொள்ளைக்காரியா? அல்லது அவள் தந்தை மிகப்பெரிய கொள்ளைக்கும்பலின் தலைவனாக இருந்து, வழித்தோன்றலாக மகளுக்கும் அதே ஒட்டிக் கொண்டதா?


உண்மையில் அவளது வரலாறு முழுவதுமாக யாரும் தெரிந்து கொண்டிருக்க மாட்டோம். வாழ்க்கையில் அவள் சந்தித்தது அத்தனையும் துரோகங்கள் மட்டும் தான். அவ்வளுக்கு நடந்த அநீதி எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் கடந்து செல்ல இயலாது. இத்தனை வன்கொடுமைகளை இழைத்த கொடிய மிருகங்களை கடந்து தனது வாழ்வை எப்படி கடந்து வந்தார் தெரிந்துக்கொள்ளும்போது மிக பிரம்மிப்பாக இருக்கிறது. தனது  பொது வாழ்விலும் அரசியலிலும் MP ஆக வெற்றி களம் கண்டாள். பூலான் தேவி அவர்களின் Biopic தான் இந்த Bandit Queen திரைப்படம்.


BANDIT QUEEN இந்த திரைப்படம் 1994 ஆம் ஆண்டு Mala Sen என்னும் எழுத்தாளர் எழுதிய The true story of Phoolan Devi இந்த புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது இந்த திரைப்படம். இந்த படத்தை Shekar Kapur இயக்கியுள்ளார். பூலான் தேவி கதாபாத்திரத்தை Seema Biswas ஏற்று நடித்தார். Kaleidoscope Entertainment என்கிற நிறுவனம் இந்த படத்தை தயாரித்தார்கள். சரி நம்ம படத்துக்குள்ள போவோம்.


படம் 1968 ஆம் ஆண்டு  அந்த காலகட்டத்தில் உத்திர பிரதேசத்தில் உள்ள சிறு கிராமத்தில் இருந்து தொடங்குகிறது. பூலான் தேவிக்கு குழந்தை திருமணம் நடத்தபடுகிறது. அந்த காலகட்டத்தில் குழந்தை திருமணம் நடத்துவது ஒரு வழக்கமாக இருந்தது. பூலான் தனது கணவன் வீட்டிற்கு போக மறுக்கிறாள். பெற்றோரின் கட்டாயத்தின் பெயரில் அனுப்பி வைக்கபடுகிறாள். அவளுக்கு தனது கணவரால் பாலியல் வன்கொடுமை நடக்கிறது. பூலான் குடும்பம் Mallah என்னும் கீழ் சாதி வகுப்பினர். Thakur என்னும் மேல் ஜாதி வகுப்பினர் அங்கு அதிகம் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதனால் அங்கு இருந்து பூலான் தப்பி வந்து விடுகிறார். இருப்பினும் மேல் சாதி வகுப்பினர் பூலான் மீது பல வன்கொடுமைகளை நிகழ்த்துகிறார்கள். தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று காவல் நிலையத்திற்கு செல்கிறாள். அங்கு இருக்கும் காவலர்கள் அவளை காவல்நிலையத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். அவள் மீது வழக்கும் போடுகிறார்கள். அவளை Thakurகள் காவல்துறையிடம் பணம் கொடுத்து Bailயில் எடுக்கிறார்கள்.  அதன்பின் 1979ஆம் ஆண்டு Bandit (வழிப்பறி செய்யும் கும்பல்) குழுவின் தலைவன் Babu Gujjar அவளை அபகரிக்கிறான். அவளை எல்லோரும் முன் கற்பழிக்கிறான். இதில் ஆத்திரம் அடைந்த அந்த குழுவில் இருக்கும் Vikram Mallah என்னும் இளைஞன் Babu Gujjar யை சுட்டு வீழ்த்துகிறான். 


அதன்பின் பூலானிற்கு Vikram பாதுகாவலனாய் மாறுகிறான். இருவரும் நெருக்கமாக பழகுகிறார்கள். பூலானிற்கு Vikram பல தற்காப்பு கலைகள், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றை கற்றுக் கொடுக்கிறான். இருவரும் சில நாட்கள் கழித்து திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர். Babu Gujjar யின் தலைவன் Thakur Shriram சிறையில் இருந்து விடுதலை ஆகிறான். 1980ஆம் ஆண்டு Thakur Shriram வந்து Vikram யை படுகொலை செய்கிறான். அதன்பின் பூலானை Thakur Shriram கும்பல் அவளை கற்பழித்து பாலியல் வன்புணர்வு செய்கின்றார்கள். பிறகு அங்கு இருந்து பூலான் தப்பித்து தலைமறைவு ஆகிறாள். அவள் அதற்கு பின் ஒரு குழுவை உருவாக்குகிறாள் Man Singh என்பவரின் துணையோடு. அதன்பின் பெரிய கொள்ளைகாரியாக மாறுகிறாள். இந்தியா முழுக்க பிரபலம் ஆகிறாள். தன்னை வன்புணர்வு செய்த மிருகங்களை எப்படி பழிவாங்குகிறாள்? ஏன் சரணடைந்து சிறை சென்றாள்? எப்படி அரசியல் களம் புகுந்தார்? என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். 


இந்த படத்தில் பூலான் தேவியாக நடித்த Seema biswas அந்த Character ஆகவே வாழ்ந்திருந்தார். ரொம்ப எதார்த்தமாய் நடித்திருந்தார்.  இந்த படத்தில் நடித்திருத்த கதாபாத்திரம் எல்லாரும் ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க. இந்த படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு,இசை எல்லாம் ரொம்ப அழகாய் பண்ணிருந்தாங்க. இந்த படம் Best feature Film, Best Actress, Best Costume Designer போன்ற பிரிவுகளில் இந்திய அரசின் 1995 ஆம் தேசிய விருதுகளை வென்றது. Film fare யில் Critics Award, Best Director, Best Cinematographer, Best Female Debut போன்ற பிரிவுகளில் விருதுகளை வென்றது. 1994 ஆம் Cannes விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது. 1994 ஆம் ஆண்டு 67ஆவது ஆஸ்கார் விருதிற்கு Indian Entry ஆக Nominate செய்யபட்டது ஆனால் இதை ஆஸ்கார் கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை.  பூலான் தேவி பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள விரும்பினால் நிச்சயம் இந்த படத்தை பாருங்கள். இந்த நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம். சாதி மதம் வேறுபாடுகளை தகர்த்து எறிவோம். இன்னமும் பல பூலான் தேவிகள் நம் கண்ணிற்கு தெரியாமல் இந்த பூவுலகில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். 


-அரவிந்த்

Tuesday, April 16, 2019

தேர்தல் நேரத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான படம்.



இந்தியாவின் பல மாநிலங்களில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் (ஒடிசா,பீகார் மற்றும் பல மாநிலங்கள்) நக்சலைட்டு மாவோயிஸ்ட் போராளிகளின்  போராட்டங்கள் இன்னமும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.2004ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி உருவாக்கப்பட்டதே சிபிஐ மாவோயிஸ்ட் கட்சி. இது ஒரு அரசியல் கட்சி என்பது பெயரளவில்தான் .


உண்மையில் இது ஒரு நக்சல்பாரி இயக்கமாகவே செயல்பட்டு வந்தது. நக்சல்பாரிகளின் முக்கிய நோக்கம் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவது. சிபிஐ (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மக்கள் போர், இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட கட்சிதான் சிபிஐ மாவோயிஸ்ட். மாவோயிஸ்ட் கட்சியின் முதல் நோக்கமே மக்களைத் திரட்டி அரசுகளுக்கு எதிராக போர் புரிவது என்பதுதான். சீனாவில் மாசே துங் (மாவோ) மக்களைத் திரட்டி கொரில்லாப் போரில் ஈடுபட்டதால் அந்த அடிப்படையை மாவோயிஸ்டுகள் பின்பற்றி வருகின்றனர்.


இந்தியாவில் பிகார், ஆந்திரா, சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு நல்ல பலம் உள்ளது. மாவோயிஸ்ட் நக்சலைட் அமைப்பில் கிட்டத்தட்ட 9000 முதல் 10 ஆயிரம் ஆயுதப்படையினர் வரை இருக்கிறார்கள். இவர்களில் 6500 அதி நவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை வைத்திருக்கிறார்கள்.

இதுதவிர இந்தியா முழுவதும் இவர்களுக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் சாதாரண தொண்டர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பழங்குடி மக்கள் அதிகம் வாழும் காடும் மலையும் சார்ந்த பகுதிகளில் நக்சலைட்டு-மாவோயிஸ்ட் போராளிகள் இருக்கிறார்கள்.மேலும் ஏழ்மை நிலையில் இங்கு வாழும் பழங்குடி மக்களின், வாழ்வாதாரங்களை சுரண்டும் அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை எதிர்ப்பதாக அவர்கள் கூறிக்கொள்கின்றனர். ஆனால் இங்கே அவர்களை தீவிரவாதிகள் என்கிற பெயரில் தான் சித்தரித்து வைத்திருக்கிறார்கள்.


Newton இந்த திரைப்படத்தை தேர்தல் நேரத்தில் பார்க்க நேர்ந்தது ரொம்ப வித்தியாசமான உணர்வாய் இருந்தது. இந்தியா ஒரு வளர்ச்சி மிகுந்த நாடு. இங்கு எல்லோருக்கும் எல்லாமே கிடைத்துவிட்டது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அது எல்லாமே பொய் போன்று தான் தெரிகிறது. இன்னமும் எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாமல் பல மலை கிராமங்கள் இங்கு இருக்கிறது. இந்த படத்தை பார்த்தால் Digital India போன்ற பல விஷயங்கள் நம்மை நகைப்புக்குள்ளாக்கும். சரி நம்ம படத்துக்கு போவோம்.


Newton இந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு Amit V. Masurkar அவரால் இயக்கபட்டது. Rajkumar Rao, Pankaj Tripathi, Anjali Patil இவர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை Drishyam Films தயாரித்து இருக்கிறார்கள். இவர்கள் இதற்கு முன் Masaan படத்தை தயாரித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. 


Nutan Kumar(Newton) இவர் ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரை நக்சல்கள் கட்டுபாட்டில் இருக்கும் சத்திஸ்கர் மலை கிராமத்தில் Election Duty க்காக அனுப்பபடுகிறார். அவருடன் இரண்டு அதிகாரிகள் மற்றும்  பல CRPF போலீஸ் அதிகாரிகள் அவர்களை வழிநடத்த Aatma singh (Pankaj Tripathi) ராணுவ அதிகாரி நியமிக்கிறார்கள். அந்த கிராமத்தில் வெறும் 76 வாக்காளர்கள் தான். அதனால் அங்கு இருக்கும் அதிகாரிகள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

அங்கு வாழும் மக்களுக்கு மாவோயிஸ்ட்கள் யாரும் வாக்களிக்க செல்லக்கூடாது. தேர்தல் புறக்கணிக்க வேண்டும் என்கிறார்கள். அதற்கு பயந்து யாரும் வாக்களிக்க முன் வரவில்லை. இதனால் Newton ரொம்ப வருத்தபடுகிறார். வாக்காளர்கள் வருவார்கள் என்கிற நம்பிக்கையில் Election Booth யில் காத்திருக்கிறார்கள்.  இந்திய ஜனநாயகம் பற்றி செய்தி சேகரிக்க வெளிநாட்டு Reporter அங்கு வருகிறார்கள் என்கிற தகவல் கிடைக்கிறது. அதனால் அங்கு இருக்கும் CRPF வீரர்கள் கிராமத்திற்குள் சென்று வாக்காளர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக Election Booth க்கு கொண்டு வருகிறார்கள். வரிசையாக வாக்களிக்க நிற்கிறார்கள். 


முதலில் ஒரு நபர் உள்ளே சென்று வாக்களிக்க செல்கிறார். அவர் அந்த EVM பக்கத்தில் அப்படியே நிற்கிறார் என்ன செய்வதுதென்று தெரியாமல். அவர்களுக்கு அதுவே முதல் முறை. அந்த மக்களுக்கு தேர்தல் என்றால் என்ன? தேர்தல் எதுக்கு நடக்கிறது? எதுவும் தெரியவில்லை. Newton எல்லா மக்களையும் வெளிய கொண்டு வந்து எல்லாவற்றையும் விளக்குகிறார். அந்த மக்கள் அதற்கு பணம் கொடுப்பார்களா? இதனால் என்ன லாபம் போன்ற கேள்விகளை கேட்கிறார்கள். Newton எல்லா கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். குறுக்கே புகுந்த அந்த ராணுவ அதிகாரி அந்த மக்களிடம் இதெல்லாம் சும்மா விளையாட்டு பொம்மை மாதிரி எந்த பட்டனை வேண்டுமானாலும் அமுக்குங்கள் என்று கூறி ஆட்டத்தை கெடுக்கிறார். அந்த மக்களோ தனக்கு பிடிச்ச சின்னத்திற்கு வாக்களிக்கிறார்கள். Newton க்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த மக்களிடம் மன்றாடுகின்றான். இது உங்கள் உரிமை நீங்கள் அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று. அப்போது மாவோயிஸ்ட் கள் அந்த Booth யை தாக்குகிறார்கள். அதன் பின் என்ன நடந்தது.? தேர்தல் எப்படி முடிந்தது? என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.


இந்த படத்தில் Newton ஹீரோவாக நடித்த Rajkumar Rao ரொம்ப அருமையாக நடித்திருந்தார். ஒரு நேர்மையான தேர்தல் அதிகாரியை நம் கொண்டு வந்தார். இந்த படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இந்த படத்தில் திரைக்கதை சிம்பளா சிறப்பாக வடிவமைத்திருப்பார்கள். அந்த மலை காடுகளை ரொம்ப அழகாய் ஒளிப்பதிவு மூலம் காண்பித்திருப்பார்கள். பின்னணி இசையும் தேவைக்கு ஏற்றார்போல போற்றிருப்பார்கள். இந்த படம் Best Film, Best Story க்கான Filmfare Award வென்றுள்ளது.  இந்த படம் Best Feature Film 2018 க்கான தேசிய விருதை வென்றுள்ளது. Pankaj Tripathi சிறப்பு விருதை தேசிய விருதை வென்றார்.  இந்த படம் 90ஆவது ஆஸ்கார் விருதுக்காக Best Foreign Film Categoryயில் இந்த படம் இந்தியா Entry ஆக அனுப்பட்டது. இந்த படத்திற்கு பல சர்ச்சைகள் வந்தது. இந்த படம் Iranian படமான Secret Ballot காப்பி அடித்து எடுக்கபட்டது என்று சர்ச்சை கிளப்பபட்டது. அப்போது Anurag Kashyap இந்த Newton படத்திற்கான தனது குரலை கொடுத்தார். இந்த படம் காப்பி இல்லை என்கிற ஆதாரத்தை நிரூபித்தார். அதன்பின் அந்த சர்ச்சை நீங்கியது. அதையும் தாண்டி இந்த படம் பல விருதுகளை வென்றிருக்கிறது. ஒரு வாக்காளனாய் எப்போது நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். ஓட்டுரிமை நம்முடைய உரிமை. உங்களது உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுங்கள். ஒரு ஓட்டு ஒரு அரசாங்கத்தையே மாற்றும் சக்தி உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பீர். மறக்காமல் அனைவரும் வாக்களியுங்கள். Think before you act.

- அரவிந்த்

Monday, April 15, 2019

தமிழ் சினிமாவை மாற்றிய ஒரு ஆங்கிலேயர்.

Ellis R Dungan, இவர் ஒர் அமெரிக்கர்.

பல நாடுகளில் பயணம் செய்துகொண்டு இருந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமா சார்ந்த படிப்பை கற்க துவங்குகிறார். அங்கே இவருடன் படித்துக்கொண்டிருந்த சக இளைஞர் ஒரு இந்தியர். டங்கனை இந்தியாவிற்கு வருமாரும் இந்தியாவில் தன் அப்பா ஒரு ஸ்டுடியோ வைத்து இருக்கிறார் அங்கே சென்று படம் எடுக்கலாம் என்று சொல்லி அவர் டங்கனை இந்தியா அழைத்து வருகிறார்.

ஆனால் இந்தியா சென்ற டங்கனோ அங்கு 15 வருடம் தங்கி விடுகிறார்.


இவர் வந்தப்பின் தான் தமிழ்  சினிமா ஒரு தொழிமுறையாக மாறியது.

அப்போழுதெல்லாம் நாடக கலைஞர்களை சினிமாவிற்குள் கொண்டு வந்துக்கொண்டிருந்தார்கள்.

காட்சியின் பொழுது ஏன் கத்தி பேசுகிறிர்கள் என்று டங்கன் கேட்டார்.

அந்த நாடகத்தன்மை அவருக்கு பிடிக்கவில்லை.

ஆனால் அப்பொழுது இருந்த ஒலி பதிவு செய்யும் கருவி இரு கதாப்பாத்திரங்கள் சகஜமாக பேசிக்கொண்டால் அதில் பதிவாகாது அதனால் சத்தமாக பேசியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம்.

தமிழே தெரியாது என்றாலும் தமிழ் கலாச்சாரத்தை நுண்ணியமாக புரிந்துக்கொண்டு அதை அணுகினார்.

படத்தில் என்ன வசனம் பேசுகிறார்கள் என்று இவருடன் இருந்த துணை இயக்குனரகே டங்கனுக்கு மொழிமாற்றம் செய்து சொல்லுவார்.


Dungan Trolley/Dungan  Track என்று சினிமாத்துறையில் அடிக்கடி சொல்லும் தொழில்நுட்ப வார்த்தை.

அந்த பெயர் வந்ததற்காக காரணம் டங்கன் தான்.

அவர் தான் அந்த தொழிநுட்பத்தை தமிழில் கொண்டு வந்தது.

அவருக்கு தமிழ் வசனம் அவ்வளவாக  புரியாது என்பதால் அவர் கவனம் முழுக்க நடிகர்களின் முக பாவனைகளிலும் அவர்கள் கொடுக்கும் உணர்ச்சிகளிலும் தான் இருந்தது.

சதிலீலாவதி,அம்பிகாபதி,சீமந்தினி,சகுந்தலா,தாசி பெண்,மீரா பொன்ற அந்த காலத்து வெற்றி படங்களை இயக்கியவர்.

இவர் படங்களில் நன்றாக நடிக்க தெரிந்தவரை விட நன்றாக பாட தெரிந்தவரை வைத்தே படம் எடுத்தார்.

எம்.எஸ் சுப்பு லக்‌ஷ்மியை வைத்து  இரு படங்கள் இயக்கியுள்ளார்.

எம்.ஜி.ஆர் அவர்கள் இவர் எடுத்த சதி லீலாவதி படம் மூலமாகவே சினிமாக்கு அறிமுகம் ஆனார்.

அந்த படத்தில் இவருக்கு எம்.ஜி.ஆரை நடிக்க வைக்க விருப்பம் இல்லை.

காரணம் எம்.ஜி.ஆருக்கு Photogenic Face இல்லை என்று நினைத்தார் ஆனால் கலைஞர் கருணாநிதியின் தொடர் அழுத்தத்தால் இவர் எம்.ஜி.ஆரை வைத்து படத்தை எடுத்தார்.

என்.எஸ் கிருஷ்ணன்,டி.எஸ்  பாலையா போன்றவர்களை சினிமாத்துரைக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கே.!


ஒரு ஆங்கிலேயர் தமிழ் நாட்டில்  வந்து 15 ஆண்டு காலம் தமிழ் சினிமாவை தன் வசம் வைத்திருந்தார் என்பது பாராட்டக்கூறியது.

அவர் நாடகத்தனத்தில் இருந்து தமிழ் சினிமாவை மாற்ற நினைத்தார் ஆனால் அவர் போன பின்பும் அதே நாடகத்தனம் தொடர்ந்தது.

இவரை பற்றி அறிய An American In Madras என்கிற ஆவணப்படத்தை பார்க்கவும்.

- அப்துல்


டுலெட்- சினிமாத்தனம் இல்லாத சினிமா


முதலில் இந்த படத்தை திரையரங்கில் பார்க்காமல் தவற விட்டதுக்கு வருந்துகிறேன்.

அதற்கு திரையரங்குகளில் நடைபெறும் அரசியலும் ஒரு காரணம். பெரும்பாலும் வார இறுதியில் தான் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அந்த நேரங்களில் மற்றும் பண வருகைக்காக இந்த படத்தை அகற்றி விற்று எப்போதும் பேன்று commercial படங்கள் திரையிட்டு பின்பு வேலை நாட்களில் இந்த படத்தை மீண்டும் திரையிட்டு திரையிட படாத நாட்களுக்கும் தயாரிப்பாளர்யிடம் இருந்து வாடகை பணத்தை பெற்று கொள்கின்றன தியேட்டர் உரிமையாளர்கள்.இப்படி நடப்பது புதிதா என்ன??.அப்படி நடந்த பண அரசியலில் தான் இந்த படத்தை திரையரங்கில் காண தவறவிட்டேன்.


எந்த ஒரு படம் நம் வாழ்வியலுடன் ஒற்று போகிறதோ அந்த படத்தை உலக சினிமா என்று சொல்லாம்.அதுபோல தான் இந்த படமும்.தமிழ் சினிமாவில் ஒரு உலக சினிமா படைப்பு என்று சொன்னால் அது மிகையாகாது.இந்த படம் மொத்தம் 100 உலக திரைபட விழாக்களில் பங்கு பெற்று 84 பரிந்துரைகளில் 32 சர்வதேச விருதுகளை கைபற்றியுள்ளது.படத்தில் மொத்தம் மூன்றே கதாபாத்திரங்கள்.இந்த படத்தில் நடித்தவர்கள் மற்றும் இயக்கியவர் என்று அனைவரும் அறிமுக கலைஞர்களே.இந்த படத்தை தானே எழுதி,ஒளிப்பதிவு செய்து மற்றும் இயக்கியும் உள்ளார் இயக்குனர் செழியன்.


இளங்கோ திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக வேலை பார்க்கிறான். அவன் தனது மனைவி அமுதா மற்றும் 5 வயதான தனது மகன் சித்தார்த்துடன் ஒரு வாடகை வீட்டில்  வசித்து வருகிறான். அந்த வீட்டின் உரிமையாளர் IT companyயில் வேலை பார்ப்பவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் அதிகமாக பணம் கிடைக்கும் என்று எண்ணத்தில் இளங்கோ குடும்பத்தினரை 30 நாட்கள் கெடு வைத்து வீட்டைக் காலி செய்யும்படி கூறுகிறார். அந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு மாற நினைக்கும் நடுத்த குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை சித்தரிக்கிறது இந்த படம்.


ஒரு சாமான்ய மனிதன் எப்படி முதலாளித்துவதால் நசுகபடுகிறான்,தனக்கேன்று சொந்த வீடு இல்லாதவனை இந்த உலகம் எப்படி நடத்துகின்றது,வாடகை வீட்டில் வாழும் நடுத்தர மனிதனின் சிக்கல்கள்,பன்நாட்டு நிறுவனங்களின் வருகையால் நடுத்தர மக்களுக்கு ஏர்படும் பாதிப்புகள் என்று அனைத்தையும் தன் எழுத்துகளிலும் காட்சிகளிலும்  உலக தரத்தில் காட்டியிருக்கிரார் செழியன்.படத்தில் பேரும்பாலன இடத்தில் இயற்கையே இசை அமைத்திருக்கும். ரேடியோ ஒலிகள்,தொலைக்காட்சி ஒலிகள்,சக மனிதனின் நடமாட்டங்கள் என்று நம் அன்றாட வாழ்வில் வரும் அனைத்தும் இசை அமைத்து மேலும் இந்த படத்தை நம்முடன் இனைத்து விடுகின்றன. 


வாடகை வீடு தேடி செல்லும் தருனத்தில் ஒரு வீட்டை உள்ளே போய் பார்க்க சொல்லியும் நமக்கு  ஏற்பட்ட சங்கட்டங்கள் மற்றவருக்கும் வர கூடாது என்று எண்ணி ஜன்னல் வழியே பார்க்கும் காட்சி,தன் கனவு வீடை போன்றே இருக்கும் வாடகை வீட்டை மீண்டும் ஒரு முறை வந்து பார்க்கும் காட்சி,என்று நடுத்தர மக்களின் எண்ணங்கள்,ஏக்கங்கள்,கனவுகள்,வலிகள் அனைத்தும் இப்படத்தில் நம்மால் உணர முடியும்.


இங்கே தரமான சினிமா எடுப்பதில்லை என்ற “குற்ற உணர்வையும்” நம் ஒரு தரமான சினிமா படைக்க வேண்டும் என்ற “மன அழுத்தத்தையும்” raw materialsஆக கொண்டு இந்த படத்தை செழியன் இயக்கியுள்ளார் போலும்.(படத்தில் வரும் ஒரு வசனம்)


சினிமா தன்மை இல்லாத சினிமாவை கண்டிப்பாக அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும்.


- கார்த்திக் ரெங்கசாமி


Thursday, April 11, 2019

Burning(2018)-பற்ற வை

Burning(2018)-பற்ற வை!!


எதர்ச்சியாக என் இன்ஸ்டாகராம் பக்கத்தில் burning பட போஸ்டரை கண்டேன் அதில் Cannes festivalயின் குறியிடை கண்ட அடுத்த நிமிடமே படத்தை பதிவிரகம் செய்து விட்டேன்.இந்த படம் 2018 Cannes festivalயில் திரையிடப்பட்டது.மேலும் 91 academy awardsயில் இது பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், இறுதி ஒன்பது திரைப்பட பட்டியலிக்கு வந்த  முதல் கொரிய திரைப்படமாக ஆனது.இந்த படம்

Haruki murakamiயின் “the elephant vanishes” யில் இருக்கும் “barn burning” என்னும் சிறு கதையை மய்யமாய் வைத்து எடுக்கபட்டுள்ளது. படத்தை இயக்கியவர் Lee chang-dang.


திரைக்கதைக் ஏற்ற மெல்லிய கேமிரா கோணங்கள்,colour tone,கதாபாத்திரங்கள் என்று அனைத்தும் சிறந்த முறையில் வடிவமைக்கபட்டுள்ளது.lee jong-suவாக Ah-in yooவும், Benஆக steven yuvenஉம்,shin Hae-mi ஆக jong-seo junஉம் சிறப்பாக நடித்துள்ளனர்.கதை மூன்றே கதாபாத்திரங்களை சுத்தி நகர்ந்தாளும் கதாபத்திரங்களின் இயல்பும் அதில் நடித்திருக்கும் நடிகர்களின் யதார்த்த நடிப்பும் நம்மை சினிமா தன்மை மறக்கடித்து அவர்கள் கதைக்குள் நம்மை கடத்திவிடுவர்.படத்தின் சிறப்பு அம்சமாக நான் காண்பது திரைக்கதையே. அதுவே இப்படத்தை மற்ற mystery  படங்களில் இருந்து தனித்து காட்டுகிறது.


பல வருடங்கள் கழித்து தன் சிறு வயது தோழியான hae-miஐ lee jong சந்திக்கிரான்.இருவரும் தன் இரண்டாம் சந்திப்பிலே உறவு வைத்து கொள்கின்றன. அதுவே பின்பு lee Jongவிற்கு hae-miமீது காதலாக மாறுகிறது.ஆனால் hae-miஓ தன் பயணத்தில் சந்தித்த benஉடன் பழகி வருகிறாள்.lee Jongஐ benகு அறிமுகம் செய்து வைக்கிறாள் hae-mi.மூவரும் நண்பர்களாக பழகின்றனர்.benயுடன் பழகிய சிறிது காலங்களிலே hae-mi காணாமல் போய்விடுகிறாள்.hae-mi எங்கு சென்றாள்??அவளுக்கு என்ன ஆயிற்று?? என்பதை மிக அற்புதமாக தன் காட்சி மொழியில் சொல்லியிருப்பார் இயக்குனர் lee


நெருப்பை பற்ற வைத்தால் நிதானமாக 

எரிந்து இறுதியில் எப்படி தன் முழு உருவத்தை காட்டுகிரதோ அதேபோல் தான் இப்படத்தின் திரைகதையும்.படத்தின் தலைப்பை போன்றே நிதானமாக ஆரம்பித்து இருதியில் வழுவாக காட்சியளிகிறது.இது கிட்டத்தட்ட serial killer கதை தான் ஆனால் புத்திசாலித்தனமான திரைகதையம் காட்சி மொழியும் கதையை பற்றி நமக்கு எழும் கற்பனைகளுக்கு முற்று புள்ளி வைகின்றன.


இயக்குனர் ஆக விரும்பும் அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய படம்.




-கார்த்திக் ரெங்கசாமி

Monday, April 8, 2019

Freddie Mercury's Stage






Freddie Mercury இவர் 70's 80's கால கட்டத்தில் உலகிலே தலைசிறந்த பாடகர்களுள் ஒருவராக திகழ்ந்தார். Queen என்னும் இசை குழுமத்தை தொடங்கி பல வெற்றிகரமான Rock பாடல்கள் Bohemian Rapsody, killer Queen, somebody to love பாடல்களை பாடி உலகம் முழுவதுமாக தனது கவனத்தை ஈர்த்தார். இவரது ஒரின சேர்க்கை பழக்கத்தினால் இவர் கேட்ட நேரம் தனது 45 வயதில் AIDS நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துப்போனார். பாடகர் Freddie Mercury அவரின் Biopic தான் இந்த திரைப்படம்.இவரது ஆல்பமான Bohemian Rapsody யே இந்த படத்தின் தலைப்பும் கூட. இந்த படத்தை Bryan Singer இயக்கி இருக்கிறார். Rami Malek இந்த படத்தில் Freddie Mercury ஆக நடித்திருக்கிறார்.



இந்த படம் 1970 என்னும் காலகட்டத்தில் இருந்து தொடங்குகிறது. Freddie விமான நிலையத்தில் Luggage களை கையாளும் ஒரு ஊழியனாக இருக்கிறார். ஒரு நாள் Freddie Roger Taylor, Brian May யை எதர்ச்சியாக சந்திக்கிறார். அந்த குழுவில் இருந்து Tim Stafell என்னும் பாடகர் விலகுகிறார். Freddie இதை பயன்படுத்தி Freddie பாடகராக குழுவில் இணைகிறார். Mary என்னும் பெண்ணை காதலிக்கிறார் Freddie. அவர்க்கு துணையாக கூடவே இருக்கிறார். அதன்பின் Freddie குழுவின் பாடல்களுக்கு உள்ளூர் தாண்டி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பிக்கின்றது. அவர் தனது குழு பெயரை queen எனவும் தனது பெயரை Freddie Mercury எனவும் மாற்றுகிறார். Killer queen என்னும் ஆல்பம் சக்கபோடு போட்டுக் கொண்டிருந்தது. Freddie, Mary இருவரும் திருமணம் செய்துக்கொள்ளலாம் என முடிவு செய்கிறார்கள். இதனிடையில் ஆல்பம் விஷயமாக அமெரிக்கா செல்கிறார் Freddie. 



அங்கு தனிமையில் இருக்கும்பொழுது தனது Sexuality குறித்து யோசிக்கிறார். அவர்க்கு Gay ஆக இருப்பது ரொம்ப பிடித்திருந்தது. பின் 1975 யில் Bohemian Rapsody என்னும் ஆல்பம் 6 நிமிடம் இருப்பதால் அதனை 3 நிமிடமாக குறைக்க கூறி Ray Forster சொல்கிறார் அதற்கு Freddie மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் Ray Foester யும் அந்த ஆல்பத்தை நிராகரிக்கிறார். 

அதன்பின் அதை ரேடியோ ஸ்டேஷனுக்கு கொண்டு செல்கிறார் Freddie. அந்த Radio வின் உதவி மூலம் ரொம்ப ஹிட்டான ஆல்பமாக மாற்றுகிறார் Freddie. Freddie க்கு தனது Manager Paul Hunter உடன் ஓரின சேர்க்கையில் ஈடுபடுகிறார். இருவரும் ஒன்னுக்குள் ஒன்னாக பழக ஆரம்பிக்கிறார்கள்.



ஒரு நாள் Freddie தனது காதலி Mary யை சந்திக்கிறார். அப்போது Mary யிடம் தான் ஒரு Bisexual என்று கூறுகிறார். அதற்கு Mary அதிர்ச்சி அடைந்து அவன் ஒரு Gay என்று முடிவு செய்து அங்கு இருந்து வெளிய செல்ல நினைக்கிறாள். Freddie தனது வாழ் நாள் முழுவதும் தன்னுடன் இருக்குமாறு Mary யை கேட்கிறான். இருவரும் நண்பர்களாக பக்கத்து பக்கத்து வீட்டில் தங்குகிறார்கள். ஒரு நாள் Freddie எல்லோருக்கும் Party கொடுக்கிறார். அந்த Party யின் முடிவில் waiter Jim Hutton யை சந்தித்து பேசுகிறார். Freddie தனது Manager Paul யின் பேச்சை கேட்டு தனியாக Pop ஆல்பங்களை போடுகிறார். இதனால் Queen குழுவில் இருக்கும் நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு எல்லோரும் Freddie யை விட்டு பிரிந்து செல்கிறார்கள். அதன்பின் Paul  யிடம் இருந்து எப்படி தப்பித்தார்? எப்படி தனது Queen குழுவில் இணைந்தார்? AIDS நோயில் இருந்து மீண்டாரா? என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். 



இது ஒரு Time period படம் தான் 1970 to 1985 வரை நடந்த Freddie வாழ்க்கையை படமாக எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தை 2010 லே எடுப்பதாக திட்டமிட்டு இருந்தார்கள். சில காரணமாக தாமதம் ஏற்பட்டு 2017 யில் எடுத்தார்கள். இந்த படத்தின் Climax வேற லெவலில் இருக்கும். ரொம்ப தத்துருவமாக எடுக்கப்பட்டிருக்கும். Live Aid 1985 by Freddie என்று யூடியூபில் தேடிப் பாருங்கள். இதை தான் இந்த படத்தின் Climax ஆக எடுத்திருப்பார்கள். இந்த படத்தில் நடித்த அனைவரும் மிக சிறப்பாக நடித்திருந்தார்கள். குறிப்பாக Freddie ஆக நடிச்ச Rami Malek நடித்திருக்காருன்னு சொல்லறதவிட வாழ்ந்திருக்காருன்னு தான் சொல்லனும் அந்த அளவிற்கு தனது முழு பங்களிப்பை கொடுத்திருக்கிறார். 



இந்த படம் ஒரு இடத்தில் கூட போர் அடிக்காது. திரைக்கதை மிக அருமையாக வடிவமைத்திருந்தார்கள். படத்தில் இசை கச்சேரி, பாடல்கள் எல்லாமே ரொம்ப ரசிக்கும்படியாக இருந்தது.நம்மை உற்சாகம் படுத்தும் விதமாக காலத்தில் இந்த படத்தின் இசை. இசை மழையில் நனைஞ்சிக்கிட்டே இருக்குற மாதிரி இருக்கும். இது ஒரு Musical Film என்று கூட சொல்லலாம். இந்த படம் உலகம் முழுவதும் பல விருதுகளை வென்று குவித்தது. Best Actor கான ஆஸ்கார் விருதை Ram Malek வென்றார். 100 ஆஸ்கார் விருது கூட கொடுத்திருக்கலாம் இந்த மனுஷனுக்கு. Best Film editing, Sound Mixing, Sound Editing போன்றவற்றிலும் ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றது. Golden Globe, BAFTA போன்ற பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இந்த படம் கண்டிப்பாக ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும். இந்த படம் இசை தாகத்தில் இருக்கும் அனைவருக்கும் நிச்சயம் தீனி போடும் என்று நம்புகிறேன்.

- அரவிந்த்

Tuesday, April 2, 2019

இது பெண்களுக்கான உலகம்


Angry Indian Goddesses (2015 )

எந்த ஒரு முன் நோக்கமும் எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்தை பார்க்க தொடங்கினேன்.

ஒரு 30 நிமிடத்திலையே முடிவு செய்துவிட்டேன் இது ஒரு சிறந்த படம் என்று.

இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கின்றது ?

முதலில் இந்த படம் பெண்களுக்குள் இருக்கும் பல உணர்ச்சிகளை போலித்தனம் இல்லாமல் வெளிக்காட்டிய படம்.

இந்த படத்தில் 7 பெண் கதாப்பாத்திரங்கள் வருகிறது. அவர்களுக்குள் நடக்கும் பந்தம் தான் கதை.

நடித்த 7 பேருக்கும் கண்டிப்பாக விருது கொடுப்பதில் தப்பு இல்லை என்றே சொல்லுவேன். அப்படி ஒரு நடிப்பு.!!!

அதை விட படத்தை எடுத்த முறை உலகத்தரத்திற்கு நிகரானது.

படத்தில் பயன்படுத்திய வெளிச்ச அளவு என்னை  பிரம்மிக்க வைத்தது.

படம் ஆரம்பமே ரனகலமாக தொடங்குகிறது ஆனால் அதே போல் தான் படம் முழுக்க இருக்கும் என்று நினைத்து பார்த்தால் இல்லை. படம் ரொம்ப சந்தோஷமாகவும் கொண்டாட்டமாகவும் செல்கிறது.

பெண்களுக்கான சமத்துவம்,உரிமை என்கிற பெயரில் பெண்களை மட்டமாக சித்தரித்து எடுக்கும் படங்களுக்கு நடுவில் பெண்களின் உண்மையான சாரத்தை காட்சிப்படுத்திய இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

இந்த படத்தில் 'பக்' என்கிற வார்த்தை வருகிறது,தண்ணீ அடிக்கிறார்கள்,செக்ஸ் பத்தி பேசுகிறார்கள் ஆனால் இதை எப்படி காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதே முக்கியம். பல படங்களில் ஆண்கள் கெட்ட வார்த்தை பேசினால் நானும் என் படத்தில் பேசுவேன்,ஆண்கள் செக்ஸ் பத்தி பேசினால் நானும் பேசுவேன் என்று சமத்துவத்திற்கும் போட்டி போடுவதற்கும் வித்தியாசம் தெரியாமல் பெண்களின் சந்தோஷத்தை சமத்துவத்தை படம் எடுக்க போகிறேன் என்று அசிங்கப்படுத்தியதே மிச்சம்.

இப்படி எடுக்கும் படங்களில் பெண்கள் பேசும்  வார்த்தைகள் , செய்யும் விஷயங்கள் எல்லாம் பெண்கள் போலவே இருக்காது. ஆனால் Angry Indian Goddesses படத்தில் இதை எல்ல செய்தாலும் அது பெண்கள் செய்வது போல் உள்ளது,அதற்கான நியாயத்தையும்  செய்திருக்கிறது.

படம் முழுக்க மிக கொண்டாட்டமாக இருந்தது. 

ஆண்களை பற்றி பேசுவது,ஆண்களை குறை கூறுவது போன்ற எந்த ஒரு விஷயமும் படத்தில் இல்லை.

இது பெண்களுக்கான  உலகம் !!

இது பெண்களை மைய்யமாக வைத்த படமா இருந்தாலும் ஆண்களை ரசிக்க வைத்ததே இதன் வெற்றி !!

இந்த படத்தை  கண்டிப்பாக பார்க்க வேண்டும்.இந்திய படங்களில் இது முக்கியமான படம் !

இந்த படத்திற்கு என் மனதில் தனி இடம் உண்டு.!!

- அப்துல்

Cold War - காதல் அனுபவம்

பனிப்போர் (Cold War) கிட்டதக்க இரண்டாம் உலகப் போர் முடிந்து 1947 முதல் பின்னர் 1990 வரை அமெரிக்காவுக்கும்சோவியத் யூனியனுக்கும் இடையில் யார் வலிமை வாய்ந்தவர்கள் என்கிற போட்டி இருந்து கொண்டு இருந்த காலம் அது. இந்தக் காலத்தில் இரண்டு வல்லரசு நாடுகளும் தமது இராணுவம், தொழில்நுட்பம், மற்றும் விண்வெளிதிட்டங்களை வளர்ச்சி செய்தனர். வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து இரண்டு நாடுகளும் உலகில் தனது செல்வாக்கத்தை மேம்படுத்தினார்கள். சோவியத் யூனியனின் நட்பு நாடுகள் கம்யூனிஸத்தை பயன்படுத்தினார்கள். அமெரிக்க அரசு கம்யூனிஸத்தை விரிவை தடை செய்ய பல முயற்சிகளை செய்தார்கள் இதனால் தென் கொரியா, தென் வியட்நாம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து  சோவியத் யூனியனின் படையினர்களுடன் போர்களில் ஈடுபட்டனர்.


1980களின் இறுதியில் பனிப்போர் முடிவு வந்தது. அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் யூனியனின் எதிரான கொள்கைகளின் வலிமையை மேம்படுத்தினார். சோவியத் தலைவர் மிகேல் கோர்பசோவ் சோவியத் யூனியத்தின் கம்யூனிச கொள்கைகளை மாற்றினார். இதனால் 1991இல் சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்து பனிப்போர் முடிவடைந்தது.


இந்த படமும் பனிபோர் சமயத்தில் நடக்கும் ஒரு காதல் கதை தான். இந்த படத்தை Paweł Pawlikowski இயக்கியுள்ளார். போலாந்தில் ஒரு நாட்டுபுற இசை நிகழ்ச்சிக்காக Irena & நாயகன் Wiktor ஆடிஷன் நடத்துகிறார்கள். அங்கு நாயகி Zula கலந்துக் கொள்கிறாள் wiktor யின் கவனத்தை ஈர்க்கிறாள். இருவரும் காதல் வயப்பட்டு கலவியில் ஈடுபடுகிறார்கள்.இதற்கிடையில் Wiktor மற்றும் Irenaவை ரஷ்யா நாட்டின் தூதர்கள் கம்யூனிச கொள்கைகளையும் அதிபர் ஸ்டாலின்க்கு ஆதரவாக இசை நிகழ்ச்சிகளை நடத்துமாறு கட்டாய படுத்துகிறார்கள். அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள். Kaczmarek என்கிற அதிகாரி Zula வை Wiktor க்கு தெரியாமல் உளவு பார்க்குமாறு சொல்கிறார். அதற்கு அவள் மறுப்பு தெரிவிக்கிறாள். இருவரும் ஊரைவிட்டு செல்ல திட்டமிடுகிறார்கள். Wiktor ஊர் எல்லையில் Zula விற்காக காத்திருக்கிறான். Zula அங்கு வரவில்லை. 


அதன்பின் சில வருடங்கள் கழித்து இருவரும் பாரிஸில் ஒரு jazz club யில் சந்திக்கிறார்கள். Wiktor கேட்கிறான் ஏன் அன்னைக்கு நீ வரவில்லை என்று? அதற்கு Zula தனக்கு வர தைரியம் எல்லை என்று கூறுகிறாள். ஆனாலும் இருவருக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது.


அதன்பின் ஒரு வருடம் கழித்து Wiktor இசை நிகழ்ச்சி நடத்த வருகிறார் அப்போது Audience ஆக Zula வருகிறாள். அப்போது இருவரும் எதர்ச்சியாக சந்திக்கிறார்கள். அதன்பின் இரண்டு வருடம் கழித்து மீண்டும் Wiktor Zula வை சந்திக்கிறார். அவளின் கலை எதிர்காலத்திற்காக Michael என்னும் அவரது நண்பரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். அதற்கு பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்,இறுதியில் திருமணம் செய்தார்களா இல்லையா? என்பதை படம் பார்த்து தெரிந்துக்கொள்ளவும். 


இது ஒரு Time period படம் என்று சொல்லலாம்.இந்த படம் ஒவ்வொரு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்டு திரைக்கதையாக அமைத்திருக்கிறார்கள். இந்த படம் Black and White யில் எடுத்திருக்கிறார்கள். பனிபோர் காலகட்டத்தில் நடந்த கதை என்பதால் ஒரு வேளை கருப்பு வெள்ளையில் எடுத்திருக்கலாம். இருவரின் காதல் அவர்களின் சண்டை, ஈகோ, மிஸ் அண்டர்ஸ்டாண்டிங், பாசம் ஆகியவை படத்தில் இருந்தது. இந்த படத்தின் இறுதி காட்சி ரொம்ப நல்ல இருக்கும். அது காட்சிபடுத்தபட்ட விதமும் சிறப்பு. இந்த படத்தின் ஒளிப்பதிவு வேற லெவல் நம்மை அந்த காலகட்டத்திற்கு பயணம் செய்ய வைக்கும். இந்த படத்தின் நாயகி Joanna Kulig நாயகன் Tomasz Kot இவர்கள் இருவரும் ரொம்ப நல்ல நடிச்சிருந்தாங்க. உலகளவில் இந்த படம் 33 விருதுகளை வென்றதுள்ளது. 98 Nominations க்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. Best Foreign Film, Best Director, Best Cinematography போன்ற 3 ஆஸ்கார் விருதுகளுக்கு  Nominate செய்யபட்டுள்ளது. Best directorக்கான Cannes விருதை Paweł Pawlikowski வென்றார். European Award for best film அந்த விருதையும் இந்த படம் வென்றது. அதை தாண்டி நிறைய விருதுகளை வென்றிருக்கிறது. 

கண்டிப்பா இந்த படத்தை மிஸ் பண்ணாம எல்லாரும் பாருங்க. ஒரு வித்தியாசமான காதல்  அனுபவத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.


-அரவிந்த்

எம்.ஆர் ராதா - மறக்க முடியாத ஆளுமை


எம் ஆர் ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்.


இந்த புத்தகத்தை எழுதியவர் - விந்தன் .


பொதுவா எனக்கு எம் ஆர் ராதவை பற்றி எந்த ஒரு அபிப்பிராயமும் இல்லை. அவர் நடித்த ரத்தக்கண்ணீர் படத்தை தவிற வேறு எதும் பார்த்ததில்லை.

அந்த படம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. எம் அர் ராதா அவர்களின் அந்த பாவனை,அவர் பேசிய வசனமும் ரொம்ப இயல்பாகவும் அதே நேரம் ஆழ்ந்த உட்கருத்துக்களும் இருந்தது.அவரிடம் ரொம்பவும் பிடித்தது அவரின் குரல் தான். அவர் குரலுக்கு ஏற்றாபோல் வசனம் இருக்கும்.

இது போல் எந்த ஒரு ஐடியாவும் இல்லாமல் இந்த புத்தகத்தை படிக்க துவங்கினேன்.

இது எம் ஆர் ராதா அவர்கள் சிறைச்சாலை சென்று வந்த பிறகு அவரிடம் எடுத்த நேர்காணலின் தொகுப்பே இந்த புத்தகம்.

இதை எழுத்தாளர் இந்த அளவு சுவாரசியமாகவும் தெளிவாகவும் எழுதியது நம்மை இந்த புத்தகத்தின் உள்ளே பயணம் செய்ய வைக்கின்றது.

புத்தகம் படிக்கும்பொழுது பல இடங்களில் சிரித்தேன்.

எம் ஆர் ராதா சொல்லுவது ரொம்ப முக்கியமான விஷயமாக இருந்தாலும் அதை அவர் சொல்லும்விதமும் அவர் அணுகிய விதமும் மிகவும் நகைச்சுவை மிக்கது.

இந்த புத்தகத்தில் தமிழ் சினிமாவின் மாற்றத்தையும், சினிமாவையும் நாடகத்தையும் அரசியல்வாதிகள் தன் அரசியல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தி இருப்பதும் சொல்லப்பட்டு இருக்கிறது.

திராவிட கட்சிக்காக எம்.ஆர் ராதா அவர்களின் பங்களிப்பும் அவர் போட்ட மேடை நாடகமும் அந்த கட்சியின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியப்பங்காக இருந்திருக்கிறது என்பது தெரிய வந்தது.
அரசியல் பிரச்சாரம் செய்ய ஆயுதமாக மட்டுமே இங்கே சினிமா இருந்தது என்பது கசக்கும் உண்மை. ஆனால் இப்பவும் சினிமா அரசியல் ஆதாயங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எம்.ஆர் ராதா நாடக உலகில் சந்தித்த போராட்டங்கள்,குறும்புகள்,தவறுகள் எல்லாம் வெளிப்படையாக பேசப்பட்டுருக்கிறது.

எந்த ஒரு நடிகனும் சொல்லாத, சொல்ல தயங்குகிற,சொல்ல பயப்படுகிற ஒரு விஷயத்தை எம்.ஆர்.ராதா அவர்கள் இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்.அந்த விஷயம் நெஞ்சை பதபதக்க வைத்துவிட்டது.
சிவாஜி கணேஷனுக்கு எப்படி 'சிவாஜி' என்கிற பெயர் சூட்டப்பட்டது என்ப்தும்.அண்ணா,பெரியார் இருவருடனான  நெருக்கம் எப்படி என்று பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது.

இந்த புத்தகத்தை படித்து முடித்தபின் ஒன்றே ஒன்று தான் தோன்றியது.
"இவரை போல் வெளிப்படையாக உண்மையை பேசக்கூடிய கலைஞனை பார்க்க முடியுமா என்பதே"


- அப்துல்

PARIYERUM PERUMAL  - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...