Sunday, March 31, 2019

கற்பனை காதலி 'Ruby Sparks'


Ruby sparks- எழுத்துகளால்  எழுந்தவள்


நாம் அனைவருக்கும் நமக்கு வரும் காதலியை பற்றி பல கனவுகளும் கற்பனைகளும் இருக்கும் அதுவே ஒரு எழுத்தாளனுக்கு சக மனிதனை விட கற்பனை ஆற்றால் அதிகமாகவே இருக்கும்.அப்படி பட்ட ஒரு எழுத்தாளனின் கற்பனை காதலி அவன் எழுத்துகளில் இருந்து எழுந்து வந்தாள் ?? கற்பனைகள் உண்மையாக நடந்தால் ??காதல் செய்தால் ?? அதுவே romantic Fantasy drama படமான ruby sparksயின் கதை சுருக்கம்.


இந்த படத்தை இயக்கியவர்கள் Jonathan Dayton & valerie faris என்ற உண்மை தம்பதிகள்.அதனால் என்னமோ காதலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணமுடிகிறுது.

Calvin weir fieldஆக வரும் paul dano யின் introvert கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பும் ruby sparksஆக வரும் zoe kazan யின் சுட்டித்தனமான நடிப்பும் நம்மை கவர தவறவில்லை.படத்தில் வரும் காதல் காட்சிகள் நம்மையும் காதல் ஆசையில் நனைய வைக்கும். காதல் ஆரம்பத்திலும் ,நம் காமம் சற்று தணிந்த பின் இருக்கும் காதலையும் நம்மால் இந்த படத்தில் வரும் காட்சிகளில் உணர முடியும். காமம் தணிந்த பின் வரும் காதலே உண்மையானது ஏன் என்றால் காதலுக்கு உடல் தேவைகள் விட மனத்தேவைகளே அதிகம். 


காதலுக்கு நாம் அடிமை ஆகிறோமா?? இல்லை காதலால் நாம் நேசிப்பவர்கள் நமக்கு அடிமை ஆகிறார்களா?? என்ற கேள்வி இந்த படத்தில் வரும் காட்சிகளால் நமக்குள் எழும்.”too much off anything is good for nothing” என்பதை rubyயின் அளவற்ற பாசமும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் காட்சிகள் நமக்கு பாடம் நடத்தும்.மனிதன் ஒரு சுயநலவாதிதான் என்ற மறுக்கபடாத உண்மையை calvin தனக்கு ஏற்றவாறு rubyயை  மாத்தும் காட்சிகள் பேசும்.என்ன தான் Rubyயை தனக்கு ஏற்றவாறு மாற்றினாலும் calvinயிக்கு மகிழ்ச்சி கிடைக்காது காரணம் இயல்பை ஏற்காத, தான் நினைத்தது கிடைத்தும் அது பத்தாத மனித மனமே. போதும் என்ற மனித மனம் எங்கே உள்ளது??


நாம் அனைவரும் ஒரு வகையில் சக மனிதனை அடிமையாகவே பார்க்கிறோம்.நம் கருத்துகளை அவர்கள் மீது திணிப்பது அதன் படி நடக்க செல்வது , தனக்கு பிடித்த படம் மற்றவர்க்கும் பிடிக்க வேண்டும் அதில் கருத்து வேறுபாடுகள் இருந்தால் ரசனை கெட்டவன் என்று மட்டம்தட்டுவது போன்று சிறு சிறு செயல்களில் இருந்து நம் பிறர் மீது  நடத்தும் சர்வாதிகாரம் நீள்கிறது.நாம்  சொல்வதை பிறர் செய்யவேண்டும் என்று எண்ணுவது ஒரு வகையில் ஆளுமையின் போதையே .அதுவும் காதலில் நாம் அனைவரும் hitlerயே. “I can make you do whatever I want”என்று சொல்லி rubyயின் செயல்களில் மாற்றம் செய்யும் காட்சில் calvin எனக்கு hitlerஆகவே காட்சி அளிக்கிறான்.


நமக்கு பிடித்தவரகள் நமக்கு பிடித்த மாதரி நடந்தால் தான் காதல் என்று இங்கே அனைவரும் எண்ணுகிறார்கள்.ஆனால் தமக்கு பிடித்தவர்களின் சுதந்திரத்தை பறிக்காமல் அவர்களின் இயல்பை நேசிப்பதே உண்மையான காதல் என்பதை இந்த படத்தில் இருந்து உணரலாம்.


என்னதான் நம் கற்பனைகளும் நம் எண்ணங்களும் நமக்கு பிடித்த மாதிரி நடந்தாலும் இயல்பை நம்மால் மாற்ற முடியாது என்றும் மாற்றினாலும் நம் வாழ்க்கையின் யதார்த்தை நம்மால் உணர முடியாது என்று இந்த படம் காதல் வழியில் சொல்லும் உண்மையை நம்மால் மறுக்க முடியாது.


-கார்த்திக் ரெங்கசாமி

Saturday, March 30, 2019

லெனின் பாரதியின் துணிச்சல்




பல இயக்குனர்கள் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் திரை உலகில் கால் அடி எடுத்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால்  அந்த கூட்டத்தில் இருந்து கொஞ்சம் தனித்துவமாகவும் தைரியமாகவும் ஒருவர் நிற்கிறார்.

அவர் தான் லெனின் பாரதி.!!

நான் அவரை நேரில் சந்தித்தபொழுது மிக எளிமையாக இருந்தார் ஒரு உலகத்தர படைப்பை கொடுத்துவிட்டோம் என்கிற மெதப்பு அவரிடம் இல்லை.

தமிழ் சினிமாவில் பல இய்க்குனர்கள் பல பிரச்சனைகளை பேசி வருகிறார்கள்.

ஆனால் அத விட முக்கியமாக நாம் பேச வேண்டிய பிரச்சனை கதாநாயக வழிபாடும் போலி சினிமா ஆதிக்கமும்..!!

ஒரு படத்தில் கடவுள் இல்லை என்று பேசுகிறார்கள் அதையும் பார்வையாளன் ஒத்துக்கொள்கிறான் ஆனால் வெளியே சென்று அவன் கதாநாயகனை வழிபடுகிறான்.

 உதவி இயக்குனர்களை பற்றி வணிக சினிமாவை பற்றி ரொம்பவும் துணிச்சலாக அவர் வார்த்தைகள் வெளிவருகிறது.

ஆனால் பல இயக்குனர்கள் வணிக சினிமாவை பற்றி பேச பயப்படுகிறார்கள் என்பதே உண்மை.

பார்வையாளர்களை நம் சினிமா மட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பதும் உண்மை அவர்கள் அதற்கு இரை ஆகிவிட்டார்கள் என்று அவர்களுக்கே  தெரியவில்லை என்பதும் உண்மை.

ஒரு தனி மனிதனாக  ஒரு படம் மட்டுமே எடுத்துவிட்டு  இப்படி பேசுகிறொமே அதற்கு பின் தனக்கு வாய்ப்பு வருமா வராதா என்று கவலைப்படாமல் தான் நினைத்ததை உணமையாக சொல்கிறார் அண்ணன் லெனின் பாரதி..!!!


- அப்துல்


Friday, March 29, 2019

Goodfellas(1990)-“கெட்டபசங்க சார் இவங்க”


gangster படங்கள் என்று தனியாக எடுத்து கொண்டால் அதில் இயக்குனர் என்ற இடத்தில் முக்கால்வாசி Martin Scorsese பெயர் தான் இடம் பெற்றிக்கும்.gangster படங்கள் ,Scorsese படங்கள் என்று தனி தனியாக பிரிக்க முடியாது.அவரின் படங்கள் பெரும்பாலும் gangster பத்திய படங்களாவே இருக்கும். இவரின் Good fellas(1990),casino(1995),gangs of new york (2002),the departed(2006) ஆகிய படங்கள் “gangster dictionary” என்று சொன்னால் மிகையாகாது.அப்படி Henry hill என்ற gangsterயின் உண்மை கதையை வைத்து எடுத்த படம் தான் “Good fellas”.


Henry hill ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்த இளைஞன். நடுத்தர இளைஞர் பலர் பகட்டான வாழ்க்கை தான் நாடுகிறார்கள் அதைப்போல தன் வீட்டின் அருகே இருக்கும் பகட்டான gangsterகளையும் gangsterismத்தையம் கண்டு தானும் ஒரு gangster ஆகவேண்டும் என்று வளர்கிறான்.”as far back I can remember  I always wanted to be a gangster” என்ற வசனத்துடன் அவன் கதை ஆரம்பம் ஆகிறது. 


படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தனக்கே உரிய gangster பாணியில் நடித்து இருப்பர்கள். பகட்டான கார்கள் ,துப்பாக்கிகள், போதை பொருட்கள், coat suite உடைகள், clubகள், பெண்கள் என்று gangster அடிப்படை வாழ்க்கையின் அங்கங்கள் சிறப்பாக காட்டப்பட்டிருக்கும்.


பயம்,பணம்,பகட்டு தான் வரு gangsterயை gangsterஆகிறது என்னபதை நம்மால் சில காட்சிகளில் உணர முடியும். குறிப்பாக Karenஐ(Henry யின் மனைவி) dating அழைத்து செல்லும் long take காட்சில் இவை அனைத்தையும் நம்மால் காணமுடியும்.


Gangsterகளின் குடும்பம்,அவர்களின் உறவுகள், குடும்ப விழாக்கள் என்று காட்சிகள்  வருகின்ற போது நம்மை அரியாமலே நாமும் அந்த gangயில் ஒரு கூட்டாளியாகவே மாறிவிடுவோம்.jimmyயாக வரும் Robert de noir நடிப்பு gangsterயின் gun மாதிரி வெடித்திருக்கும். நம் வாழ்க்கையில் வில்லன் என்று யாரும் இல்லை மற்றவர்களால் வரும் சூழ்நிலைகளும் அதனால் வரும் விளைவுகளும்  தான் நமக்கு வில்லன்களை தேடி தரும். அந்த விளைவு நண்பனிடம் இருந்து கூட வரலாம். அதுபோல் தான் Henry jimmiகும் ,jimmiகு henryஉம் வில்லனாய் மாறுவார்கள்.நாம் அனைவரும் ஒரு வகையில் மற்றவர் வாழ்க்கையில் வில்லன்கள் தானே??


Tommyஆக வரும் joe pesciயின் நகைச்சுவை கலந்த gangsterism நம்மை ரசிக்க வைக்கும்.இவரை வைத்துதான் Scorsese தன் signature காட்சிகளை அமைத்து இருப்பார். Scorsese படங்களில் வரும் வன்முறைகள் மிக அமைதியாகவும் எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி ஏற்படும்.நம் வாழ்க்கையிலும் அப்படித்தான் நமக்கு நடக்கும் வன்முறையோ மரணமோ தன் வருகையை அறிவித்துவிட்டு வராது அதன் வருகையை நமக்கு நடக்கும் வரை நம்மால் உணர முடியாது. அதுபோல்தான் Scorseseயின் வன்முறை இதை suspense ஆக சொல்லி இருக்க மாட்டார் மாற்றாக தனக்கே உரிய காட்சி மொழியில் காட்டியிருப்பார்.அதுவே அவரின் signature touch


படத்தின் கடைசி 30 நிமிடங்கள் பதட்டமான gangster வாழ்க்கையை காட்சிப்படுத்தி நம்மையும் பதட்டப்பட வைத்திருப்பார்.படம் 1955யில் ஆரம்பித்து 1987யில் முடிகிறது. கால மாற்றத்திற்கேற்ப கதாப்பாத்திரங்களின் உடை ,முக மற்றும் charachter மாற்றங்கள் நம்மால் காண முடியும். Gangsterயின் வாழ்க்கைமுறைகள் பழக்கவழக்கங்கள் பற்றி எந்த அளவிற்கு Scorsese Research செய்து இருப்பார் என்று எண்ணி திகைத்து போனேன்.


அவரின் அடுத்த gangster படமான “the irishman(2019)” காக காத்திருக்கிறேன் 


-கார்த்திக் ரெங்கசாமி

Thursday, March 28, 2019

"ஆங்கிலத்தில் ஒரு பரியேறும் பெருமாள்".


இனவெறி(Racism) என்பது அன்று முதல் இன்று வரை காலம் காலமாக தொன்றுதொட்டு நம்மை கடந்து வந்துக் கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்காவில் 1600 ஆண்டு அந்த கால கட்டத்தில் அங்கு இருக்கும் வெள்ளை எஜமானர்களுக்கு வேலை செய்வதற்காக ஆப்பிரிக்காவில் இருந்து பல லட்சம் கறுப்பின மக்கள் கொத்தடிமைகளாக கொண்டு வந்தார்கள். அவர்களின் பணி அங்கு காலம் முழுவதும் அடிமையாக பணி் செய்து கிடப்பதே.


இப்படி போயிட்டு இருந்த நிலையில் 1863 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் கொத்தடிமை முறையை ஒழிக்க சட்டம் பிறப்பித்தார். நம்ம ஆளுங்களுக்கு தான் நல்லது பண்ணாலே பிடிக்காதுல. கொஞ்ச நாட்களில் ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யபடுகிறார். Daniel day lewis நடிச்ச Lincoln (2012) திரைப்படத்தில் இதை பற்றி ரொம்ப விவரமாக பேசியிருப்பார்கள்.இந்த படத்தை பார்த்தால் நிறைய விஷயங்கள் புரியும்.


இப்படி தொடர்ந்து கறுப்பின மக்கள் எல்லா இடத்திலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.குறிப்பாக ஆஸ்கார் விருதுகளில் கறுப்பின மக்கள் சார்பான படங்களுக்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படவில்லை என்கிற விமர்சனம் ரொம்ப நாள் இருந்துட்டே இருக்கு. 2013 யில் வந்த 12 years a slave, 2016 யில் வந்த Moon light போன்ற படங்கள் ஆஸ்கார் விருதுகளை வாங்கினார்கள். அதை தவிர பெருசா வேறெந்த படத்திற்கும் கொடுத்ததா தெரியவில்லை. அந்த எண்ணத்தை உடைக்கும் விதமாக 2018 யில் வெளி வந்த Green Book படத்திற்கு 91ஆவது சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது கிடைத்தது. அப்போது தான் நிறைய பெயருக்கு தெரிந்தது இப்படி ஒரு படம் வந்தது என்று. அதுக்கு அப்பறம் இந்த படத்தை பார்க்கனும் இரவு பார்க்க ஆரம்பிச்சேன்.

இந்த படம் 1950 to 1960 நடந்த Tony Lip மற்றும் Don Shirley ஆகியோரின் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவத்தை  மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். படத்தின் கதைபடி Tony Lip bouncer ஆக வேலை தேடிக்கிட்டு இருக்கிறார். அப்போது Don Shirley கிட்ட இருந்து ஒரு Interview க்கான  அழைப்பு வருது. அங்க நடக்கிற Interview Attend பண்ணுகிறார். Don Shirley அவர் ஒரு Pianist அவருடைய 8 வாரம் கச்சேரிக்கான சுற்று பயணத்திற்கு டிரைவராக Tony lip வரனும் சொல்கிறார். அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்கிறார் Don Shirley. Tony lip முதலில் இதற்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கிறார். பின் தன் மனைவியின் பேச்சுக்கு இணங்க பயணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். அப்போது கறுப்பின மக்களுக்கு சேவை செய்யும் தங்கும் விடுதி, உணவகங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை அடங்கிய Green Book ஐ Tony Lip யிடம் கொடுத்து பயணத்தை தொடங்குகிறார்கள். பயணத்தின் போது Don Shirley க்கு Tony யோட செயல்பாடுகளை கண்டு எரிச்சல் அடைக்கிறார். இரண்டு பேரும் முரண்பாடுகளோடு பயணிக்கிறார்கள். போக போக Don Shirley யோட 

Piano இசை வாசிப்பிற்கு Tony Lip கவரபடுகிறார். ஒவ்வொரு இடத்திற்கு பயணம் செய்யும்போது ஒவ்வொரு விதமான பல இனவெறி தாக்குதலை Don Shirley அனுபவிக்கிறார். முதலில் ஒரு பார்ல பல வெள்ளை அமெரிக்கர்கள் Don Shirley போட்டு அடிப்பார்கள். Tony lip அங்கு வந்து Don Shirley யை காப்பாற்றுவார். அதேபோல் ஒரு Piano கச்சேரி நடக்கிறது அங்கு Don Shirley இசை வந்து இசையமைக்கிறார். இடையில் சிறுநீர் போக Toilet எங்க இருக்கிறது என்று Don Shirley கேட்கிறார். அவருக்கு அனுமதி மறுக்கபடுகிறது. அங்கு இருப்பவர் வெளியே இருக்கும் தனி Toilet காண்பித்து அங்கு செல்லுமாறு கூறுகிறார் வாக்குவாதம் நடக்கிறது. என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் நீ எனக்கு கீழே தான் என்கிற வெள்ளையின மக்களின் மனநிலையை தோலுரித்து காண்பிக்கும். அதன்பின் தான் தங்கி இருக்கும் விடுதிக்கு சென்று சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் வந்து இசை கச்சேரியில் வாசிக்கிறார். பிறகு பயணத்தின் போது அடிக்கடி Tony lip தனது மனைவிக்கு காதல் கடிதம் எழுத்துகிறார் அதற்கு Don Shirley உதவுகிறார். அந்த காட்சிகள் எல்லாம் ரொம்ப அருமையாக இருந்தது. ஒரு காட்சியில் Don Shirley ஆடை வாங்க கடைக்கு செல்வார் அங்கு அவர் ஆடையை Trial பார்க்கனும் சொல்வார். அதற்கு கடைக்காரர் அனுமதி மறுப்பார். கறுப்பின மக்களுக்கு அனுமதி் கிடையாது என்பார். 


அதோ மாதிரி ஒரு காட்சியில் பயணம் செய்யும்போது கார் ரிப்பேர் ஆகி நடுவழியில் நின்றுவிடும். அப்போது Tony Lip கார் வெளிய வந்து அதை சரி செய்து கொண்டு இருப்பார். அப்போது Don Shirley கார் விட்டு இறங்கி தற்செயலாக அவருக்கு எதிரில் இருக்கும் நிலத்தை பார்ப்பார். அங்கு பல கறுப்பின மக்கள் அடிமைகளாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். அந்த மக்கள் Don Shirley பார்த்ததும் தங்கள் செய்கின்ற வேலையை நிறுத்திட்டு Freeze ஆகி நிற்பார்கள். அப்போது Don Shirley மற்றும் அவருடைய மக்களின் வலியை காட்சி மொழி மூலம் ரொம்ப அழகாய் காண்பித்து இருப்பார் இயக்குனர். அதுக்கே இந்த படத்திற்கு ஒரு ஆஸ்கார் என 100 ஆஸ்கார் கொடுக்கலாம். மேலும் இது மாதிரி பல காட்சிகள் படத்தில் இருக்கும் அதை படம் பார்த்து தெரிஞ்சிகோங்க.


இந்த படத்தில் நடிச்ச எல்லோரும் ரொம்ப நல்ல நடிச்சிருந்தாங்க குறிப்பாக Don Shirley கதாபாத்திரத்தில் Mahershala Ali வோட நடிப்பை நடிப்புன்னு சொல்லறதவிட அவங்களோட வலின்னு சொல்லலாம். அந்த அளவிற்கு ஒரு தாக்கம் இருந்தது. அதற்காக Best Supporting Actor ஆன ஆஸ்கார் விருதை வென்றார். இந்த படத்தின் பலமே திரைக்கதை தான். கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் எதார்த்தத்தை கையாண்ட விதம் இந்த படத்தின் சிறப்பு. அதற்காக Best Original Screenplay கான ஆஸ்கார் விருதையும் வென்றது இந்த படம். கண்டிப்பாக எல்லோரும் இந்த படத்தை பாருங்கள். நிச்சயம் ஒரு நல்ல அனுபவத்தை தாண்டிய ஒரு உணர்வு கிடைக்கும். இந்த படம் பற்றி ஒரு வரியில் சொல்லனும்னா "ஆங்கிலத்தில் ஒரு பரியேறும் பெருமாள்".

- அரவிந்த்

Wednesday, March 27, 2019

எனக்கு பெரிய மார்பகம் இருக்கும் பெண் தான் வேண்டும் 'அம்ரிகா'




இந்தியாவில் பல தரமான படைப்புகள் உருவாகின்றது. ஆனால்  அது  இந்தியாவினுல் அங்கிகாரம் கிடைக்காமல். அதே நேரம் வணிக சினிமாவின் அதிகாரத்தால் இது போல் இருக்கும் தரமான சிறிய முதலீட்டில் எடுத்த படைப்புகள் கவணிக்கப்படாமல் போய் விடுகிறது.

'Umrika' அமெரிக்காவை உச்சரிக்கும் விதமே சொல்கிறது அமெரிக்காவின் மேல் இருக்கும் மூட நம்பிக்கைகளை பற்றி படம் என்று

பல பேருக்கு அமெரிக்க ஒரு சொர்க்க பூமி  என்றும் அங்கு சென்றால் நிம்மதியாக வாழலாம் என்று நினைக்கின்றார்கள். 

அதும் கிராமங்களில் நவீனத்தை உயர்த்தி வைத்து பார்க்கும் பழக்கம் இருக்கின்றது.


தன் குடும்பத்தை விட்டு தன் இருப்பிடத்தை விட்டு அமெரிக்கா சென்ற ஒரு வாலிபனை பற்றிய கதை தான் இது.


2015இல் உலக புகழ் பெற்ற திரைப்பட விழாவான சண்டான்ஸில் இந்த படம் பங்குப் பெற்று Best Dramatic Audience Award  எங்கிற விருதை தட்டிச்சென்றது.


அமெரிக்கா என்றால் இப்படி  தான் இருக்கும்போல அங்கு இன்னவெல்லாம் சாப்பிடுகிறார்கள்,மனிதர்கள் எல்லாம் குண்டாக  இருப்பார்கள்.பெண்கள் எல்லாம் வெள்ள முடியும் பெரிய மார்பகங்கள் கொண்டு இருப்பார்கள் என்று பல விதமான கற்பனை ஓட்டம் கிராமத்து மக்களிடத்தில்  இருக்கிறது.

படத்தில் நடித்த முன்னனி கதாப்பாத்திரங்கள் எல்லம் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் இசை மென்மையாக உள்ளது. படம் ஒரு உணர்ச்சிமிக்க சம்பவத்தை பற்றி பேசினாலும் எக்காரண்திற்கொண்டும்  கடினமாக சொல்லிவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றார் இயக்குனர்.

பல இடங்கள் நம்மை  மீறி ஒரு சந்தோஷம். அது அறியாமையின் சந்தோஷம் அமெரிக்காவை பார்த்து ஆச்சர்ய படுவது அவர்களின் அறியாமை காட்டுகிறது.

படத்தில் The Grand Budapest Hotel படத்தில் நடித்த Tony இந்த படத்தில் கதாநாயகனுக்கு நண்பனாக வருவார்.

அவர் அடிக்கடி சொல்லும் வசனம் " எனக்கு பெரிய மார்பகம் இருக்கும் பெண் தான் வேண்டும்"

(உனக்கு உன் கவல) 

படத்தில் கடைசி காட்சி கண் கலங்க வைத்துவிட்டது. எல்லாம் இந்த ஒரு நொடிக்காகவா என்று.

இந்த படம் நாம் உருவாக்கிய படம் என்று சொல்வதில் பெருமை!!


- அப்துல்

Gaspar Noe - Artist Of The Violence

Gaspar noe -“artist of the violence ”


எந்த ஒரு சமரசமும் இன்றி தன் படைப்பை அப்படியே மக்களிடம் கொண்டு செல்வதுதான் 

ஒரு கலைஞனின் முதல் வெற்றி.ஆனால் எல்லா கலைஞருக்கும் அந்த வெற்றி கிடைப்பதில்லை ஒரு சிலரை தவிர.அதில் ஒருவர் தான் பிரஞ்சு இயக்குனர் ஆனா GASPAR NOE. இவரின் படைப்புகள் எந்த ஒரு சமரசமின்றி “அப்பட்டமாக” எடுக்கப்பட்டிருக்கும். இவரின் தனித்தன்மையே அவரின் வன்முறையும் பொய் பூசப்படாத உண்மையும் தான். இவர் படங்களில்  எந்த ஒரு கருத்து திணிப்பும் இருக்காது வாழ்க்கை பற்றிய புதிரான மனித உணர்ச்சிகள் பற்றியே இருக்கும். இவர் படங்களின் colour tone வன்முறைக்கே பிடித்த “சிவப்பு” வண்ணத்தில் தான் இருக்கும் .தன் படங்களின் மொத்த கதையையும் தன் கதாப்பாத்திரங்களின் dialogues வழியே metaphoricகாக சொல்லி விடுவார்.


தன் முதல் படத்திற்கு மக்களை வரவைக்க படாத பாடு படும் இயக்குனர்களின் நடுவே தன் முதல் படமான “I STAND ALONE (1998)” வில் கடைசி முப்பது நிமிடம் தொடங்கும் முன்பே மக்களை வெளியே போக சொல்லி danger card போட்ட மன தைரியம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அதே படத்தில் தொடர்ந்து 8 நிமிடங்கள் வாழ்க்கை தத்துவம் பேசும் dialogueகுகள் நமக்குள்ளே பல கேள்விகள் எழுப்பும்.


 Christopher Nolan படமான “MEMENTO”வை பார்த்து இப்படியெல்லாம் படம் எடுக்க  Hollywoodனால் மட்டும் தான் முடியும் என்ற என் எண்ணத்தை சுக்குநுறாய் உடைத்த படம் தான் “IRREVERSIBLE (2002)”இவ்விரண்டு படங்கலுமே Reverse chronology எனும் திரைக்கதை உத்தியில் எடுக்கப்பட்டு இருந்தாலும்  noe யின் வன்முறை பாணி தான் இந்த படத்தின் சிறப்பு.படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலே தன் கேமரா கோணத்தினால் நம் தலை சுற்ற வைத்திருப்பார் noe. படத்தில் ஒருவரின் முகத்தை சிதைக்கபடும் காட்சி வன்முறையின் உச்சம் என்றே சொல்வேன்.அதை சினிமா தன்மை இன்றி படமாக்கபட்டதில் தான் noe தன்னை சிறந்த இயக்குனராக காட்டி கொள்கிறார்.


எல்லோருக்கும் நாம் இறந்த பின்பு என ஆகும் என்று ஒரு கேள்வி இருக்கும் அந்த கேள்வியின் விடையாக அமைந்தது இவரின்

“ENTER THE VOID(2009)”படம்.

படம் முழுவதும் கதாபாத்திரம் POVலேயே கொண்டு சென்றிருப்பார்.படத்தின் ஆரம்பத்திலேயே கதையை பற்றி ஒரு புத்தகத்தை மையமாக சொல்லியிருப்பார்.போதை பழக்கம் இல்லாதவர்கள் கூட பட ஆரம்பத்தில் வரும் dope graphics காட்சிகள் முலம் போதை ஏற்றபடுவார்.


பல போலி காதல் கதைகளில் நடுவே உண்மையான காதலை “நிர்வாணமாக” காட்டியது இவரின் “LOVE(2015)”படம்.காதலும் காமமும் வேறு வேறு இல்லை என்று காமம் சொட்ட சொட்ட சொல்லியிருப்பார்.ஆண்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை தான் நல்லவர்கள் கிடைத்தால் காமுகர்கள் என்ற உண்மையை ”கொக்கி குமார் “ தன் நண்பனின் தங்கைக்கு தாலி கட்ட தூண்டிய காமத்தை செல்வராகவன் காட்டியது போல் சொல்லி இருப்பார்.மேலும் இந்த படம் 2015 Cannes Film Festivalலில் தேர்வு செய்யபட்டது தனி சிறப்பு.


திரைக்கதை அமைக்க தேவைப்படும் அனைத்து விதிகளையும் உடைத்த படம் என்று நான் என்னுவது இவரின் “CLIMAX(2018)” இதை பார்த்த பின் படம் எடுக்க கதை கூட தேவையில்லை கலை உணர்வு இருந்தால் போதும் என்று தோன்றியது.கதைமாந்தர்கள் பற்றி முன் பின் கதை கூறாமல் அவர்களின் கதாபாத்திரம் பற்றியும் கதைமாந்தர்களின் உறவுகளை பற்றியும் dialogueயில்யே சொன்னது பாராட்ட வேண்டியது.ஐந்து பக்க scriptவும் பதினைந்து நாள் production dateயில் முடித்த  படம் இது.படத்தில் வரும் நால்வரை தவிர அனைவரும் professional dancers ஆனால் noeயிடம் நடிக்காமல் தப்பிக் முடியுமா??.அப்படி நடிக்க வைத்திருப்பார் noe.இருந்தாலும் noe touchஆன வன்முறை

இந்த படத்தில் குறைவே. “உங்கள் மத்த படத்தில் இருந்து வெளியே போகும் கூட்டத்தின் எண்ணிக்கை climax படத்தில் குறைந்ததை பற்றி என்ன நினைக்கிறீங்க “என்று reporter கேட்ட கேள்விக்கு “என் இயக்கத்தில் தப்பு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன் “என்று நகைத்தார்.


கலப்படமற்ற இவரின் படைப்புகளுக்கு ரசிகனாய் இருப்பதில் பெருமை கொள்கிறேன்.noeயின் அடுத்த கலை படைப்புக்காக காத்திருக்கும் ரசிகன்.


- கார்திக்

Sunday, March 24, 2019

ஃபகத் பாசிலின் கண்கள்


மலையாள திரையுலகில் எனக்கு நிறைய நடிகர்களை பிடிக்கும். அதில் பெரிதும் என்னை ஈர்த்தவர் யார் என்றால் அது ஃபகத் பாசில் தான். இவர் படத்தில் இவர் பேசமாட்டார் இவருடைய கண் தான் பேசும். அவர் நடிப்பை வெறும் கண்ணை வைத்து ஸ்கோர் பண்ணிட்டு போற மனுஷன். எந்த படத்தில் பார்த்தாலும் அவர் அந்த Character ஆக தான் தெரிவார் தவிர ஃபகத் ஆக தெரியமாட்டார். அந்த அளவிற்கு அந்த Character ஆகவே மாறிடுவார். 


2002 யில் இவருடைய முதல் படமான "கையேத்தும் தூரத்து" இந்த படத்தை அவருடைய அப்பா புகழ் பெற்ற இயக்குனர் பாசில் இயக்கினார். அந்த படம் பெரிய அளவில் தோல்வி அடைந்தது. குறிப்பாக அந்த படத்தில் ஃபகதின் நடிப்பு, நடனம் ஆகியவை எல்லாம் ரொம்ப மோசம் என்ன மக்களால் Troll செய்யபட்டார்.


அதன்பின் 6 வருடம் அமெரிக்கா சென்று நடிப்பிற்கான மேற்கத்திய படிப்பை படித்துவிட்டு தன்னை ஒரு நடிகனாக தயார் செய்து கொண்டு 2009யில் மீண்டும் நடிக்க வந்தார். கேரளா கேப் என்கிற Anthrology படத்தில் நடித்தார். அதன்பின் cocktail, chappa kurishu, Diamond Necklace, Annayum Rasoolum, Bangalore days, Maheshinte Prathikaram போன்ற பல படங்களில் நடித்து பல விருதுகளை வென்றார். இவருடைய "Thondimuthalum Driksakshiyum" இவருடைய Carrier யில் ஒரு முக்கியமான படம் என்று சொல்லலாம். ரொம்ப நாளாக பார்க்கனும் நினைச்சிட்டு இருந்து ஒரு வழியா படத்தை நேற்று பார்த்தேன். படத்தின் ஒன் லைன் ரொம்ப சிம்பள் தான். அதை திரைக்கதை மூலம் ரொம்ப அழகாக கதையை சொல்லியிருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் Dilesh Pothan. 


படத்தின் நாயகன் Prasad நாயகி Sreeja யை ஒரு நாள் மெடிக்கல் ஷாப்பில் pregnancy test கிட்டை வாங்குவதை Suraj பார்க்கிறார். அதன்பின் அதை அவளின் தந்தையிடம் சொல்லிவிடுகிறார். அப்போது தான் தெரிய வருகிறது அதை வாங்குனது Sreeja வின் அக்கா கர்ப்பத்தை உறுதி செய்வதற்காக வாங்குனது என்று. பிறகு Prasad, Sreeja வை பார்த்து மன்னிப்பு கேட்கிறார். அதன்பின் வெளிய பல இடங்களி்ல் சந்திக்கிறார்கள். நல்ல நண்பர்களாக இருந்து இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்கிறார்கள். அதற்கு Sreeja வின் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இருவரும் ஊரைவிட்டு பேருந்தில் பயணம் செய்கிறார்கள். அப்போது அந்த பேருந்தில் ஃபகத் உம் பயணம் செய்கிறார். Sreeja அவரின் முன்னால் பேருந்து சீட்டில் தூங்கி கொண்டு வருகிறார். அவர் கழுத்தில் இருக்கும் தங்க தாலியை ஃபகத் பார்க்கிறார். அதை நேர்த்தியாக திருட முயற்சி செய்கிறார். அப்போது கையும் களவுமாக மாட்டிக்கொள்கிறார். அப்போது தப்பிப்பதற்காக ஃபகத் திருடிய தாலியை வாயில் போட்டு முழுங்கிவிடுகிறார். நான் திருடவே இல்லை என்று சாதிக்கிறார். அதன்பின் ஃபகத்தை போலீஸ் ஸ்டேஷனிற்கு கொண்டு செல்கிறார்கள். அங்கு பல கலாட்டாக்கள் நடக்கிறது. அங்கு இருக்கும் காவல்துறையினர் இந்த சின்ன Case யை ஒரு பெரிய Case போல் உருவாக்கி பெயர், புகழ்,பதவி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன்பின் Prasad, Sreeja அவர்களுக்கு நகை கிடைத்ததா? ஃபகத் அங்கு இருந்து தப்பித்தாரா? என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளவும். இந்த படத்தில் நடித்த எல்லோரும் ரொம்ப எதார்த்தமாய் நல்லா நடித்திருந்தார்கள். குறிப்பாக ஃபகத் பார்க்கும்போது நமக்கு ஒரு திருடனை பார்க்கிற உணர்வு தான் இருந்தது . எல்லா காட்சிகளிலும் மனுஷன் பயங்கரமா ஸ்கோர் பண்ணிருந்தார். குறிப்பாக Suraj, தப்பித்து செல்லும் ஃபகத்தை தூரத்தி செல்லும்போது ஒரு ஓடையில் ஃபகத் Suraj யிடம் மாட்டிக்கொள்வார். அந்த காட்சி படமாக்கபட்ட விதம் இவர்களின் நடிப்பு எல்லாம் வேற லெவலிற்கு இருந்தது. Suraj யும், அந்த படத்தில் போலீசாக நடித்த எல்லோரும் அவர்களின் முழு உழைப்பை போட்டு நடித்திருக்கிறார்கள்.திரைக்கதைக்கு ஏற்றார்போல் ஒளிப்பதிவும் ரொம்ப நல்லா இருந்தது. இந்த படம் 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதை பெற்றது. ஃபகத் பாசில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் இந்த படத்திற்காக பெற்றார்.


இங்கு ஒரு பிம்பம் இருக்கிறது அவன் வாரிசோட மகன், மகள் அதனால் தான் அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து சாதிக்குறாங்க அப்படின்னு. என்ன தான் வாரிசோட மகனா இருந்தாலும் திறமை இல்லையெனில் அவர்களை யாரும் மதிக்கமாட்டார்கள். அதற்கான உதாரணங்களை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். திறமை இருக்கும் கலைஞன் எப்போதும் மதிக்கப்படுவான். அவனுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். நடிகராக முயற்சிக்கும் நண்பர்கள் நிச்சயம் ஃபகத் போன்றவர்களின் படங்களை பார்த்து அவரை Follow செய்வதன் மூலம் நிறைய நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக்கொள்ளலாம். நானும் ஒரு நடிகனாய் அதை தான் செய்து கொண்டிருக்கிறேன்.


-அரவிந்த்

ஓரினச்சேர்க்கைகுத் தடை..

இந்தியாவில் பொதுவாக காம உணர்வுகளை நுட்பமான முறையில் வெளிப்படுத்திய படங்களையும்,ஹிந்து முஸ்லிம் சண்டையை  வெளிப்படையாக பேசிய படங்களையும்  தடைசெய்வது இயல்பு.

அப்படி இந்தியாவில் தடை  செய்யப்பட்ட படங்களில் ஒரு படம் தான் ' Unfreedom'.

இந்த படம் இரண்டு முக்கியமான விஷயத்தை பற்றி பேசுகின்றது.

ஒன்று ஓரினச்சேர்க்கை இன்னொன்று ஒரு திவிரவாதம்.

இந்த படத்தின் இயக்குனர் அமிட் குமாரிடம் சென்சார் போர்ட் சில காட்சிகளை நீக்க சொல்லி கேட்டுக்கொண்டது ஆனால் அதை நீக்க  முடியாது என்று பிடிவாதமாக இருந்ததால். இந்த படத்தை இந்திய அரசு தடை செய்தது.


படத்தில் வரும் இந்த இரண்டு வேறுவிதமான பாதைகளில்(கதை)  ஓரினச்சேர்க்கையை பற்றி பேசிய பகுதி மிகவும் அழகாகவும்,கொடுரமாகவும் படம் பிடிக்கப்பட்டுருக்கின்றது.

நம் பெற்றோர்களுக்கு தன் பிள்ளைகளின் சந்தோஷத்தை விட தான் கவுரவம் தான் மிக்கியம் என்று நினைக்கின்றாரகள்.

சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் தன்  பிள்ளைகளுக்குள் நடக்கும் மனசிக்கல்களை தெரிந்துக்கொள்ளவும் பெற்றோர்கள் தயராக இல்லை.

பீயை பேண்டு கழுவிட்டது போல் தான் சில பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளை நினைக்கின்றார்கள்.

தீபா மேஹ்தா எடுத்த 'Fire' படத்திற்கும் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

அதுவும் ஓரினச்சேர்க்கையை பற்றி பேசிய மிக முக்கியமான படம்.

எனக்கு தெரிந்து இந்தியாவில் ஓரினச்சேர்க்கையை பற்றி பேசியப்படங்கள் விரல் விட்டு என்னக்கூடிய அளவில் தான் உள்ளது.

சரி ஆடு மாடு போன்ற மிருகங்களை தான் நாம் ஒரு உயிரனமாக நினைக்கவில்லை,மனிதனின் ஓரின்னச்சேர்கைக்காவது மதிப்பு கொடுப்போம்.


- அப்துல் 

Friday, March 22, 2019

Happy Birthday Micheal Haneke



நான் உலக சினிமாக்களில் முக்கியமான ஆளுமையாக Michael Haneke அவர்களை பார்க்கின்றேன்.

வன்முறையை திணிப்பதும்,வன்முறையை செயற்கை படுத்துவதும்,வன்முறையை காட்சிப்படுத்தி பொய்யான உணர்சிகளை தூண்டுவதும் என்று பல இயக்குனர்கள் வன்முறையை  வேடிக்கைப் பொருட்டாகவே உருவாக்கின்றனர்.


ஆனால் மைக்கல் ஹேனக் படத்தில் வரும் வன்முறை வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றது.

ஒரு படத்தில் வன்முறை நடக்க போகின்றது என்றால் அதற்கான குறியீடுகளை முன் காட்சிளையே கொடுத்துவிடுவார்கள்.

லாங் ஷாட்டில் இருந்து க்லோசப் கொண்டு வந்து கதாநாயகர்களின் முன் நிறுத்துவது அல்லது  ஏதாவது  பின்னணி இசையை கோர்த்து விடுவார்கள்.

ஆனால் மைக்கல் ஹேனக் படங்களில் அப்படி எந்த ஒரு முன் எச்சரிக்கையும் நம்மால் உணர முடியாது.

வன்முறை நம்  வாழ்க்கையில் ஒரு பகுதி அது மனிதனின் இயல்பு என்று சொல்லி இருப்பார்.


புற சிக்கல்களையும் அக சிக்கல்களையும் ஒருங்கிணைத்திருப்பார்.

சில சொல்லப்படாத நம்மால் நம் மனதுடனே பேசிக்கொள்ள முடியாத சிக்கல்களை பேசுவதில் மைக்கல் ஹேனல் கை தேர்ந்தவர்.

இன்று பிறந்த நாள் காணும்(மார்ச் 23) மைக்கல் ஹேனக் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இவரை பற்றி நான் விவரமாக பேசி வீடியோ செய்துள்ளேன்.

- அப்துல்

Emotions Of Michael Hanekehttps://youtu.be/UE0azXSd1TY

ஹாலிவுட் வணிக சினிமா கிழிக்கப்பட்டது.


Cecil B. Demented இந்த படத்தை ரொம்பவும் ரசித்தேன்.

என்னை பல நாட்களுக்கு பிறகு சிரிக்கவைத்த படம்.

பொதுவாக  ஹாலிவுட்டில் இருக்கும் பல இயக்குனர்களே  Hollywood Mainstream சினிமாவை கிழித்து நார் நாராக தொங்க விடுவார்கள்(இதை பற்றி எனது 'இண்டிபெண்டண்ட் சினிமா' புத்தகத்தில் எழுதியுள்ளேன்).

இந்த படம் ஹாலிவுட் காமர்சியல் சினிமா எடுப்பவர்களுக்கும் ஆர்ட் பிலிம்ஸ் எடுப்பவர்களுக்கும்  நடுவில் நடக்கும் போர் தான் கதை.

ஆர்ட் பிலிம்ஸ் எடுக்கும் குழு பல விவாதங்களை முன் வைக்கின்றது.அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும்,கமர்சியல் சினிமாவில் நடக்கும் போலித்தன்மையையும் பேசுகிறது.


பல காட்சிகளை ரசித்து பார்த்தேன்.

இந்த ஆர்ட் சினிமாவை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று ஒரு கும்பல் இந்த படத்தில் வருகிறது. அவர்கள் கமர்சியல் படங்கள் நடிக்கும் பிரபலமான ஒரு நடிகையை கடத்தி விடுகிறார்கள். அவளை கடத்தி இவர்கள் எடுக்கும் ஆர்ட் பிலிமில் நடிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.

இதன் பின் என்ன நடக்க போகிறது என்பதே கதை.

இந்த குழுவை தலமை தாங்கும் இயக்குனரின் கதாப்பாத்திரம் மிக பிரமாதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் ஹாலிவுட் சினிமாவை கிழித்து எறிந்திருக்கிறார்கள்.

ஹாலிவுட்டின் வணிக சினிமா நோய் தான் இந்தியாவிலும் பரவி வருகிறது.

ஹாலிவுட் வணிக சினிமாவை எதிர்த்து பல குரல்கள் எழுகிறது அதை போல்  இந்திய வணிக சினிமாவை எதிர்த்து ஒரு பெரிய குரல் எழ வேண்டும்.


- அப்துல்

Wednesday, March 20, 2019

Damien Chazelle: சாகசமும் சாதாரண வாழ்க்கையும்

 


சில இயக்குனர்களின் படங்களில் இது எந்த இயக்குனரின் படம் என்று காட்டுவதை போல அந்த இயக்குனருக்கான சில முத்திரைகள் இருக்கும். Martin Scorsese  படம் என்றால் வன்முறை மற்றும் gangster வாழ்க்கையின் விவரங்களை  எதிர்பார்க்கலாம். அதே போல Nolanஇன் படத்தில் Nonlinear திரைக்கதையும், Tarantino  படங்களில் ரத்தவெள்ளமும் கெட்ட வார்த்தைகளும் வழிந்து ஓடும். இது போலவே வெறும் மூன்று படங்களை இயக்கிய சிறிய வேளையில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் தான் Damien Chazelle.

     Damien Chazelle இயக்கிய மூன்று படங்கள்: Whiplash, La La Land மற்றும் First Man. Whiplash ஒரு இசை கலைஞனின் கதை. ஒரு சிறந்த drummer ஆக வேண்டும் என்று போராடும் Andrew Miles ஒரு பக்கமும், அரக்க குணம் கொண்ட அவன் ஆசான் Fletcher இன்னொரு பக்கமும், இவர்கள் இடையே வரும் நெரிசல்களை தான் படம் காட்டுகிறது. 
      La La Land ஒரு காதல் கதை. Musical ஆக வடிவமைக்கப்பட்ட இந்த படம் Mia என்ற ஒரு போராடும் நடிகையும் Sebastian என்கிற Jazz Piano கலைஞனுக்கும் நடுவே மலரும் காதலை காட்டுகிறது. தங்களின் துறைகளில் வெற்றிப்பெற அவர்கள் கலை மற்றும் காதலில் செய்யும் தியாகம் தான் இந்த படத்தின் கரு.
       First Man உலகத்தையே திரும்பிப்பார்க வைத்த ஒரு வரலாற்று சம்பவத்தை சார்ந்த படம். முதல் முதலாக சந்திர கிரகத்தில் கால் வைத்த அமெரிக்க விண்வெளி வீரன் Neil Armstrong மற்றும் அவர் குழுவினரின் கதை.

    இந்த மூன்று கதையிலும் ஒற்றுமை என்னவென்றால் இது ஒரு சாதனையை படைக்க, சாமான்ய வாழ்க்கையில் மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் செய்ய வேண்டிய தியாகங்களையும் குறித்து பேசுகிறது. பொதுவாக ஒரு சாதனையை நோக்கி செல்வது போல் ஒரு படத்தில் காட்டினால், கடைசி தருணத்தின் வரை கதாநாயகன் பல சிக்கல்களை சந்திப்பான் ஆனால் வெற்றி பெரும் நேரத்தில் எல்லாம் அவன் கைக்கூடி வரும். அவனை விட்டுச்சென்ற உறவுகள், அவன் காதலி, அவனை கேவலப்படுத்திய சமூகம் எல்லோரும் அவனை ஆதரித்து ஒரு சந்தோஷமான முடிவு கிடைக்கும். ஆனால் Damien Chazelle படங்களிலோ இதற்கு நேர் எதிராக நடக்கும் .
     எந்த ஒரு சாதனை செய்வதற்கும் தியாகங்கள் அவசியம். அது மட்டும் இல்லாமல் சாதனையை அடைந்தாலும் சந்தோஷம் கிடைக்கும் என்று ஒரு உத்தரவாதம் இருக்காது. உதாரணத்திற்கு Whiplash படத்தில் ஒரு drummer ஆக Andrew தன்  குடும்பத்தினருடன் சண்டை போடுவான், தன் காதலியை விட்டு விலகுவான், எந்நேரமும் தன் drums பயிற்சியில் மற்றும் கவனம் செலுத்துவான். அவன் மீது பாசம் காட்டுபவர்களிடத்தில்  இருந்து விலகி, தன்னை கேவலமாக நடத்தும் Fletcherஇன் பாராட்டுக்காகவே அவன் அலைவான். வெறித்தனமாக பயிற்சி செய்து விபத்தில் சிக்கி தன் வாய்ப்புகளை இழந்து ஒரு இருட்டான நிலைமைக்கு அவன் தள்ளப்படுவான். கடைசி காட்சியில் அவன் ஒரு மிரட்டலான இசை நிகழ்ச்சியை அவன் குடுத்தாலும், அவன் கண் என்னவோ Fletcher இடம் தான் போகிறது. அவன் வெற்றி தற்காலிகமானது. அதன் பின்பு அவன் வாழ்க்கை ஒரு கேள்விக்குறி தான்.
      இது போலவே La La Land இல் Sebastian வெற்றிக்காக அவன் கலை கொள்கையை விட்டுத்தருவான். இது வாழ்க்கையை நிலையாக்காமல் அவன் காதலியையும் தன்னிடத்திலிருந்து பிரித்து விடுகிறது. கடைசியில் வரும் இசைக்காட்சி ஒரு கனவு போல் இருக்கும். எல்லாம் கச்சிதமாக அமைந்திருந்தால் Mia மற்றும் Sebastian கையில் தொழில்ரீதியாகவும் காதல்ரீதியாகவும் வெற்றி வந்து சேர்ந்திருக்கும் என்று காட்டும். ஆனால் அது கனவு மட்டுமே. நிஜ வாழ்க்கை என்னவோ அப்படி கச்சிதமாக அமைவதில்லை.
     First Man வர்ணிக்கும் கதையில் Neil Armstrong ஒரு சாதாரண மனிதன். இதுவரை வந்த வரலாற்றில் அவரை ஒரு "Superhero" போல மட்டும் பார்த்த உலகத்திற்கு அவரும் ஒரு கணவன், ஒரு அப்பா, ஒரு நண்பன், தப்புகள் செய்யக்கூடிய மனிதன் என்று இந்த படம் காட்டும். ஒரு உருக்கமான காட்சியில் Neil விண்வெளிக்கு கிளம்பும் முன் தன் பிள்ளைகளிடம் சொல்வார், "நான் திரும்பி வராமல் கூட போகலாம். முயற்சி செய்கிறேன் திரும்பி வருவதற்கு என்று." அவர் குடும்பத்தின் மனநிலையை அந்த காட்சியில் வரும் மௌனம் பிரதிபலிக்கும்.

   முக்கியமான காட்சிகளில் Damien Chazelle வசனங்களை வைப்பதில்லை. வெறும் இசை மற்றும் காட்சிகளை வைத்து அடுத்த கட்டத்துக்கு செல்ல முயற்சி செய்யும் மனிதனின் மனநிலையை திரையில் காட்டுவார். வாழ்க்கையில் எதுவும் இலவசம் இல்லை, வெற்றிக்கு தியாகம் அவசியம் என்று காட்டுவதே Damien Chazelleஇன் படங்கள். படத்தை பார்த்தப்பின்பு சந்தோஷமும் இருக்காது சோகமும் இருக்காது. வாழ்க்கை இப்படித்தான் என்ற ஒரு தெளிவு மட்டுமே இருக்கும். படங்களில் முடிவில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் கண்கள் மட்டும் சந்தித்துக்கொள்ளும். அப்பொழுது வரை ஓடிக்கொண்டிருக்கும் இசை ஒரு வினாடிக்கு நிற்கும். அந்த அனுபவத்தை வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாது, அதை உணரத்தான் முடியும்.

- ஆதித்யா

 

Once Upon A Time.....

Quentin tarantino,

ஹாலிவுட் படத்தை பார்க்க நினைப்பவர்களுக்கு எல்லாம் இவர் அல்லது Christopher Nolan  தான் முதல் படி.

இவர்களை தாண்டி தான் நாம் ஹாலிவுட்டில் பயணம் செய்ய முடியும்.

நான் 4  வருடமாக உலக சினிமாக்களை பார்த்து வருகிறேன்.

Pulp Fiction என்கிற படத்தை அடிக்கடி யார் யாரோ எங்கையோ பார்க்க சொல்லி சொல்வார்கள்.

அந்த படம் எங்காவது  கிடைக்குமா என்று தேடிய நாட்கள் உண்டு.

பர்மா பஜாரில் அந்த படத்தை தேடினேன். ஆனால் அதற்கு பதிலாக Fight Club கிடைத்தது.

அப்பொழுதெல்லாம் இண்டர்நெட்டில் இருந்து படத்தை இறக்குமதி செய்வது கடினமான  வேலை.

எப்படியோ கஷ்ட்டப்பட்டு அந்த படத்தை தேடி இறக்குமதி செய்துவிட்டேன்.

படத்தை பார்த்தால் ங்கொப்புரானே ஒன்னுமே புரியல..

அதற்கு பின் Reservoir Dogs படம் பார்த்தேன் தெளிவாக புரிந்தது.

அப்பறம் வரிசையாக அவர் படங்களாக பார்க்க தொடங்கினேன்.

அலுப்புத் தட்டவே இல்லை.

ஜாலியாக ரெத்தமும் கெட்ட வார்த்தையுமாக இருந்தது.

கடைசியாக The Hateful Eight படம் பார்த்தேன் ஆனால் அது பிடிக்கவில்லை.

இப்போழுது வந்திருக்கும் Once Upon a Time in Hollywood படத்தின் போஸ்டர் பெரிதாக ஈர்க்கவில்லை.

ட்ரைலர் பார்த்தேன்  இது குவெண்டின் டராண்டினோ சாயல் இல்லையே என்று தோன்றியது.

ட்ரைலரில் புரூஸ் லீ எல்லாம் வருகிறார். பழைய நினைவுகளை எல்லாம் படத்தில் தூண்டி விடுவார்களோ ?


அத விட குவெண்டின் டாராண்டினோ ரசிகர்களுக்கு சோகமான விஷயம் என்னவென்றால் அவர் மொத்தம் 10 படங்கள் தான் எடுப்பேன் என்று கூறியுள்ளார். 

இது அவரது 9ஆவது படம். கடைசி படம் கண்டிப்பாக டாரண்டினோவின் Personal படமாக தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

ட்ரைலரில் கடைசி காட்சியில் டிகாப்ரியோ காதில் ஒரு சின்னப் பெண் " நீங்கள் பிரமாதமாக நடிக்கின்றீர்கள்" என்று சொல்லும்பொழுது.

டிகாப்ரியோவின் முக பாவனைகளை பார்க்கும்பொழுது "ப்ப்பா இதுக்காவே இந்த படத்தை பார்க்கனும் டா என்று தோன்றியது"

- அப்துல்

Saturday, March 16, 2019

The Prepared Bouquet(1957) - மர்மம் தொடரும்

The Prepared Bouquet(1957) by René Magritte.

இந்த ஓவியத்தில் மர்மத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கின்றார் இதை படைத்த ஓவியர்.

இது ஒரு வகையான சர்ரியலிச தன்மையை கொண்ட ஓவியம்.

ஒரு மனிதன் கருப்பு உடையையும் ஒரு பெரிய தொப்பியையும் அணிந்துக்கொண்டு பின் திரும்பி செடிகளை பார்த்தது போல் நிற்கின்றான்.

அவனை ஒரு பெண் பூ போல் வடிவமைப்பு செய்த உடையை அணிந்துக்கொண்டு அவரை மறைத்துக்கொண்டும் நிற்கின்றாள்.

அந்த திரும்பி நிற்கும் மனிதன் பார்க்கும் அந்த கண்ணோட்டத்தில் இருக்கும் பூக்கள் அவருக்கு ஒரு பெண் போல் காட்சி அளிக்கின்றதா ? அதுவே அவரை மறைத்து நிற்கும் பெண்ணாக உருவம் பெற்றதா ?

மர்மம் தொடரும்.

- அப்துல்


டாம் & ஜெர்ரியின் சில பக்கங்கள்



Youtube யில்  உலாவிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக Tom and jerry கார்ட்டூன் சீரிஸ் பார்க்க நேர்ந்தது. தொடர்ந்து பல வீடியோக்களை பார்த்தேன், அதை பார்க்கும்பொழுது நான் என்னுடைய சிறு வயதிற்கு பயணித்துக் கொண்டிருந்தேன் . இப்ப வரைக்குமே ஒரு ஆச்சரியம் இருந்துக் கொண்டே இருக்கிறது. இதன் உருவாக்கத்தை (Making) பார்க்கும்போது இந்த அளவிற்கு ஒரு Animation விஷயத்தை Black and white காலத்தில் செய்வது சாத்தியம் தானா என பல முறை எனக்குள்ளே கேட்டிருக்கிறேன்.


சின்ன வயதில் அவ்வளவு பிரியமான கார்ட்டூன் சீரிஸ் எது என்றால் என்னை பொறுத்தவரைக்கும் அது Tom and Jerry தான். குறிப்பாக அந்த காலகட்டத்தில் 90's Kids யோட Favourite ஆக இருந்தது என்றால் அது ஆச்சரியப்படுவதற்கு  இல்லை. இதனுடைய சிறப்பு அம்சம் என்னவென்றால் எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு சலிப்பு தட்டாது. அதன் நகைச்சுவை உணர்வும் குறையாமல் இருக்கும். இதைப்பற்றி இணையத்தில் தேடும்போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தது.


1940 ஆம் ஆண்டு William Hanna மற்றும் Joseph Barbera அவர்களால் Tom and jerry தொலைக்காட்சி தொடராக முதன் முதலி்ல் உருவாக்கப்பட்டது. இதன் மைய கரு என்னவென்றால் ஒரு பூனை (Tom) தன்னுடைய வீட்டில் இருக்கும் எலியை (Jerry) பல விதமான தொல்லைகளை கொடுக்கிறது அதனால் எப்படியாவது Jerry கொன்று உண்ண வேண்டும் என்பதே Tom யின் நோக்கம். அதற்காக Tom மேற்கொள்ளும் முயற்சிகள், அதில் இருந்து Jerry எப்படி தன்னை காப்பாற்றிக் கொள்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்வது தான் இந்த Tom and Jerry சீரிஸ். 


முதலில் Tom யின் பெயர் Jasper எனவும் jerry யின் பெயர் Jint எனவும் இருந்தது. அந்த நிறுவனம் ஊழியர்களிடம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது யார் சிறந்த பெயர்களை அந்த Characters க்கு தருகிறார்களோ அவர்களுக்கு 50$ பரிசாக வழங்கப்படும் என்று. அதன்பின் பிறந்த பெயர் தான் இந்த Tom And Jerry.


இந்த அழகான அனிமேஷன் கார்ட்டூன்கள் Paper களில் கையால் ஓவியமாக வரையப்பட்டது. அதாவது ஒவ்வொரு Frame Ku ஏற்றவாறு அசைவுகளையும் ஓவியமாக Celluloid Sheets யில் வரைந்து அதை புகைப்படங்களாக எடுத்து அந்த காட்சிக்கு தகுந்தவாறு வண்ணங்களை கொடுத்தார்கள். Loving Vincent (2016) இதே பாணியில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான். இதுவே "cel அனிமேஷன்" அல்லது "பாரம்பரிய அனிமேஷன்" அல்லது "2-D" அனிமேஷன் என்று அழைக்கப்படுகிறது. 


ஒரு Episode கிட்டதக்க 6 to 10 நிமிடங்கள் வரை ஓடும். கிட்டதக்க 114 Episode களை Metro Goldwyn Mayer(MGM) என்கிற நிறுவனம் 1940 to 1958 தயாரித்து Distribute செய்து  கொண்டிருந்தார்கள். இந்த காலகட்டத்தில் ஏழு முறை Best Animated Short Film பிரிவில் ஆஸ்கார் விருதுகளையும் வென்றது. Metro Goldwyn Mayer(MGM) நிறுவனம் பல காரணங்களால் Animation உரிமத்தை விற்க நேர்ந்தது. அதன்பின் இதற்கான உரிமத்தை பல பேர் Franchise முறையில் எடுத்து இன்று வரை இந்த சீரிஸை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனை எடுத்தவர்கள் பட்டியல்,


Hanna-Barbera (1940-1958)


Gene Deitch (1961-1962)


Chuck Jones (1963-1967)


Hanna-Barbera’s The Tom and Jerry Show (1975-1977)


Filmation Studios (1980-1982)


Tom and Jerry Kids (1990-1994)


Warner Bros.’ Tom and Jerry (2006-2008)


Warner Bros.’ The Tom and Jerry Show (2014-present day)


ஒரு கார்ட்டூன் உருவாகுவதற்கு பின்னால் இவ்வளவு மனித உழைப்பு இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் அந்த காலத்தில் எந்த ஓரு தொழில்நுட்பமும் இல்லாமல் இப்படி இதை செய்தார்கள் என்பது நம்ப முடியாத உண்மையாகவே இருக்கிறது. 


- அரவிந்த்

Friday, March 15, 2019

இயக்குனர் நவீனுடனான சந்திப்பு

இயக்குனர் நவீன் அவர்களை பார்க்க மதியம் 3.30  மணிக்கு சென்று அவர் அலுவலகத்தில் கார்த்திருந்தோம்.

அவர் சரியா 4.45 மணிக்கு வந்தார்.

வந்த உடனே கைய கொடுத்துட்டு  நாங்கள் எங்களை அறிமுகப்படுத்திகிட்டோம்.

" சார் இண்டிபெண்டண்ட் சினிமான்னு புக் எழுதிருக்கேன் " 

நவீன் - "ஓ அப்படியா "

" சார் இந்த மிஸ்டு மூவீஸ்"நு...

நவீன் -  "ஹான் தெரியும்பா பாத்துருக்கேன் "

நான் போட்ட மூடர் கூடம் பகுப்பாய்வு வீடியோவை பார்த்ததாகவும் கூறினார்.

டி கொடுத்து ஒரு அண்ணன் போல பேசினார்.

அவர் மூடர் கூடம் படத்திற்கு வந்த விமர்சனத்தை பற்றி வெளிப்படையாக பேசினார்.

கிட்டத்தட்ட 40 நிமிடம் பேசியிருப்போம்.

உலக சினிமாக்களை பற்றியும் இண்டிபெண்டண்ட் பிலிம் மேக்கிங் பற்றியும் பேசினார்.

மூடர் கூடம் ஒரு மொக்க படம் என்று அவர் படத்தையே அவர் குற்றம் சாட்டினாலும் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

இவ்வளவு சகஜமான ஒரு மனிதர்.

போகும்பொழுது " நல்லா பன்னுங்க நீங்கதான் வருங்காலம் தம்பிங்களா " என்று அவர் சொன்ன் வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.


- அப்துல்

இயக்குனர் ராமுடனான சந்திப்பு

ராம் அவர்களை காலை ஒரு. 12 மணி அளவில் சென்று பார்த்தோம்.

அவர் எதோ வேலையில் பிசியாக இருந்தார். ஹாலில் ஒரு 20 நிமிடம் காத்திருந்து. சில நேரங்களுக்கு பின் அவர் ஹாலுக்குள் வந்தார். 

அவரின் கையில் புத்தகத்தை கொடுத்து " இண்டிபெண்டண்ட் சினிமாவை பற்றி நான் எழுதிய புத்தகம் என்று சொன்னேன்"


- " ஓ நீங்களே எழுதுனீங்களா ? " 

கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

என்னை பற்றியும் என் கூட வந்திருந்த நண்பர் அரவிந்த் பற்றியும் விசாரித்தார்.

" நான் ஒரு ரெண்டு நாள்ல படுச்சு முடிச்சிருவேன் " கண்டிப்பா படிச்சிட்டு கால் பன்றேன்"

நன்றி சொல்லி விடைப்பெற்றோம்.

ஒரு சிறிய சந்திப்பு ❤

- அப்துல்


இண்டிபெண்டண்ட் சினிமா புத்தகத்தின் வரவேற்பு

இரண்டு மாதங்களாக பல புத்தகங்கள் படித்து,பல சினிமாக்களை பார்த்து,பல ஆராய்ச்சிகளை செய்து எழுதிய புத்தகம்.

இந்த புத்கத்தை எழுதும்பொழுதே பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்.
முதல் புத்தகம் என்பதால் கொஞ்சம் தாமதம்,சோர்வு,பயம் என்று எல்லாம் என்னை போட்டு பாடாப்படுத்தியது.

மக்களிடத்தில் இதை கொண்டு சேர்க்க முடியுமா என்று பயம்.
எனக்கு இந்த அழகான மொழிநடையில் எல்ல எழுத வராது.
என்னை பொருத்தவரை இந்த புத்தகத்தை படிப்பவர்கள் பல புதிய விஷயங்களை  தெரிந்துக்கொள்ளவும்,ஊக்கமூட்டும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதே.

இந்த புத்தகத்தை எழுத முக்கிய காரணம் Missed Movies Followers தான்.
அவர்களின் ஆதரவில் கிடைத்த தைரியம் தான் என்னை இந்த புத்தகத்தை எழுத தூண்டுகோலாக இருந்தது.
எந்நாளும் உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.

பல பேர் புத்தகத்தை படித்துவிட்டு  பாராட்டினார்கள்,சிலர் புத்தகத்தில் இருக்கும் சில எழுத்து பிழைகளையும் சுட்டிக்காட்டினார்கள்.

- அப்துல்

Thursday, March 14, 2019

ராமின் பேரன்பு

Missed Movies













மிஸ்டு மூவீஸின் நோக்கம் நல்ல சினிமாக்களை அறிமுகப்படுத்துவது மட்டும் இல்லாமல் சினிமா 
குறித்தான மக்களுக்கு இருக்கும் புரிதல்களையும் மேம்படுத்த வேண்டும் என்பதே எங்களது முக்கிய நோக்கம்.

இது வெளிப்படையான நோக்கம் என்றாலும் உள்ளே 'சுயாதீன'(Independentசினிமாக்கான 
பாதையை அகலப்படுத்த வேண்டும்,காசை குறி வைக்காமல் எடுக்கப்படும் படங்களை கொண்டாடவேண்டுக் என்பதும் எங்கள் நோக்கம்.
எங்கள் நோக்கம் நாங்கள் உருவாக்கியது அல்ல.
உலக சினிமா மேதைகள் பலரும் இந்த பாதையை விரிவு படுத்தியுள்ளார்கள்.
அவர்களின் பாதை இன்னும் அகலப்படுத்தவே நாங்கள் நினைக்கின்றோம்.

- அப்துல்

PARIYERUM PERUMAL  - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...